மருத்துவமனைக்கு வெளியே காரில் பயணித்து, இன்ப ஷாக் கொடுத்த Donald Trump..!!!
நேற்று காலை அடுத்த 48 மணி நேரம் மிக முக்கியமான கால கட்டம் எனவும், மருத்துவர்கள் டொனால்ட் ட்ரம்பின் உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள் எனவும் கூறப்பட்டது.
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் அதிபர் டொனால்டு டிரம்ப் (Donald Trump) மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது சென்ற வியாழக்கிழமை இரவு உறுதியானது.
அதிக உடல் எடை வயது மூப்பு போன்ற பிரச்சினைகள் உள்ள அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு கொரோனா நோய் தொற்றும் ஏற்பட்டுள்ளதால், அவரது உடல் நல பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிகிச்சைக்காக அவர் அலபாமா மாகாணத்தில் உள்ள வால்டர் ரெட் தேசிய ராணுவ மருத்துவமனையில் நேற்று முன் தினம் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று காலை அடுத்த 48 மணி நேரம் மிக முக்கியமான கால கட்டம் எனவும், மருத்துவர்கள் டொனால்ட் ட்ரம்பின் உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள் எனவும் கூறப்பட்டது.
ALSO READ | அதிபர் ட்ரம்ப் ஆபத்தான நிலையில் உள்ளாரா... வெள்ளை மாளிகை கூறுவது என்ன..!!!
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை மாலை வால்டர் ரீட் மருத்துவ மையத்திலிருந்து வெளியேறி, காரில் சிறிது தூரம் பயணித்து, தனது ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தார்.
மாஸ்க் அணிந்திருந்த டிரம்ப், இராணுவ மருத்துவமனைக்கு அருகில் ஒரு கருப்பு எஸ்யூவி காரின் பின் இருக்கையில் அமர்ந்துகொண்டே தனது ஆதரவாளர்களை நோக்கி கை அசைத்தார்.
பின்னர் மீண்டும் மருத்துவமனைக்கு திரும்பினார்.
அவர் ட்விட்டரில் ஒரு வீடியோவையும் பகிர்ந்து கொண்டார், அதில் அவர், “நான் ஒரு ஷார்ட் சர்ப்ரைஸ் விசிட் ஒன்றை மேற்கொள்ள உள்ளேன். COVID பற்றி நான் நிறைய கற்றுக்கொண்டேன். இந்த பள்ளியில் பல பாடம் கற்றுக் கொண்டேன். அது மிகவும் சுவாரஸ்யமான விஷயம். நான் அதைப் பற்றி உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன் " எனக் கூறினார்.
மருத்துவர்களுக்கு அவர் தனது நன்றியையும் பாராட்டையும் தெரித்தார்.
அவருக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததாகவும், ஆக்ஸிஜன் அளவும் குறைவாக இருந்ததாகவும் கூறிய வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர், தற்போது அவருக்கு காய்ச்சல் குறைந்துள்ளதோடு, ஆக்ஸிஜன் அளவும் அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர்.
அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோருக்கு வியாழக்கிழமை இரவு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
ALSO READ | கம்யூனிஸ்டுகளுக்கு No Entry... ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிரடி உத்தரவு..!!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe