ஆப்கானிஸ்தானை கட்டமைப்பது எங்கள் வேலை அல்ல: ஜோ பைடன்
ஆப்கானிஸ்தானில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான முடிவு தொடர்பாக, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் விமர்சிக்கப்படும் நிலையில், தனது மவுனத்தை கலைத்த அவர், அமெரிக்காவின் இந்த முடிவு முற்றிலும் சரியானது என்றார்.
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆப்கானிஸ்தானில் நிலவும் நெருக்கடி நிலைக்கு ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி தான் காரணம் என கடுமையாக சாடியுள்ளார். ஆப்கானிஸ்தானை நெருக்கடியான சூழ்நிலையில் விட்டுவிட்டு கானி (Ashraf Ghani) ஓடிவிட்டதாக அவர் கூறினார். அவர் ஏன் போராடாமல் நாட்டை விட்டு ஓடிவிட்டார்? என்ற கேள்வியை அவரிடம் தான் கேட்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான முடிவு தொடர்பாக, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் விமர்சிக்கப்படும் நிலையில், தனது மவுனத்தை கலைத்த அவர், அமெரிக்காவின் இந்த முடிவு முற்றிலும் சரியானது என்றார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உட்பட பெரும்பாலானோர், ஜோ படை தான் ஆப்கானின் நிலைக்கு காரணம் என்று விமர்சனத்தை வைத்துள்ளனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் 'ஆப்கானில் எங்கள் இராணுவம் தொடர்ந்து போரிட முடியாது. எங்கள் வெளியுறவுக் கொள்கை மனித உரிமைகளில் கவனம் செலுத்துகிறது என்பதை நான் முன்பே தெளிவாகக் கூறினேன். பல அமெரிக்க வீரர்களின் குடும்பங்கள் ஆப்கானிஸ்தானில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்துள்ளனர் என்றார்.
ALSO READ | தாலிபன் அரசுக்கு ஆதரவாக நட்புக்கரம் நீட்டும் சீனா! இந்தியாவுக்கு சிக்கல்
ஆப்கானிஸ்தானின் நிலைக்கு ஆப்கானிஸ்தான் தலைவர்கள் தான் காரணம் என ஜோ பைடன் குற்றம் சாட்டினார். ஆப்கானிஸ்தானின் தலைவர்கள் அங்குள்ள மக்களின் நலனுக்காக ஒன்றுபடத் தவறிவிட்டனர் என்று அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தானை கட்டமைப்பது அமெரிக்காவின் வேலை அல்ல. பயங்கரவாதத்தை ஒழிக்கவே, ஆப்கானிஸ்தானிற்கு படைகள் அனுப்பப்பட்டன. டொனால்ட் டிரம்பின் ஆட்சியில் 15,000 வீரர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்தனர், எங்கள் காலத்தில் 2000 வீரர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்தனர்.
அமெரிக்கப் படையினருக்கு பாதிப்பு ஏதும் ஏற்பட்டால், தலிபான்கள் (Taliban) பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலிபான்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க குடிமக்களை தாயகம் அழைத்து வரும் நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் என்று அவர் கூறினார். தாலிபான்கள் எங்கள் பணியாளர்களை தாக்கினாலோ அல்லது இடையூறு ஏற்படுத்தினாலோ, அதற்கு அவர்கள் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம் என ஜோ பைடன் மேலும் தெரிவித்தார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR