வாஷிங்டன்: கொரோனா வைரஸ் குறித்த அவரது முதன்மை ஆலோசகரும், இந்திய-அமெரிக்க மருத்துவருமான விவேக் மூர்த்தியை அடுத்த சர்ஜன் ஜெனரலாக (Surgeon General) நியமித்துள்ளார். எனினும், இது இன்னும் முறையாக அறிவிக்கப்படவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின்  (Barack Obama) நிர்வாகத்திலும் டாக்டர் விவேக் மூர்த்திக்கு அதே பதவி வழங்கப்பட்டது. இருப்பினும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தின் போது, ​​அவர் திடீரென பதவி விலக வேண்டியிருந்தது. 


இந்நிலையில், அடுத்த சர்ஜன் ஜெனரலாக (Surgen General) நியமிக்கப்பட்டுள்ள 43 வயதான இந்திய வம்சாவளி மருத்துவர் விவேக் மூர்த்தி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் (Joe Biden)  மூன்று உறுப்பினர்களைக் கொண்ட, கொரோனா தடுப்பு படையாக செயல்பட உள்ள கோவிட் -19 ஆலோசனைக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார். 


முன்னாள் அமெரிக்க (America) சர்ஜன் ஜெனரல் டாக்டர் விவேக் மூர்த்தி, மீண்டும் அந்த பொறுப்பை ஏற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. முறையான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.


ALSO READ | அமெரிக்காவில் பட்டை கிளப்பும் நம்ம “ரசம்”.. காரணம் என்ன தெரியுமா..!!!


கர்நாடகாவின் (Karnataka)  மண்டியா மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட விவேக் மூர்த்தி பிரிட்டனில் 1977-ம் ஆண்டு ஜூலை மாதம் பிறந்தவர். பின்னர், அவரது குடும்பம் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தது. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த அவர், யேல் பல்கலைகழகத்தில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்தார்.


அமெரிக்காவில் (America) சர்ஜன் ஜெனரலின் பதவிக்காலம் நான்கு ஆண்டுகள். அவர் பொது சுகாதார விஷயங்களில் அரசாங்கத்தின் உயர் அதிகாரியாக இருப்பார். தற்போதைய , ஜெரோம் ஆடம்ஸ் இந்த பதவியில் இருக்கிறார்.


செனட்டில் 51–43 வாக்குகளுடன் ஒப்புதல் பெறப்பட்டு, டாக்டர் விவேக் மூர்த்தி 15 டிசம்பர் 2014 அன்று சர்ஜன் ஜெனரல் பதவிக்கு நியமிக்கப்பட்டார். பின்னர் ஏப்ரல் 21, 2017 அன்று அதிபர் டொனால்ட் டிரம்பின் (Donald Trump) நிர்வாகத்தால் நீக்கப்பட்ட பின்னர்  டாக்டர்ஸ் ஃபார் அமெரிக்கா அமைப்பின் இணை நிறுவனர் டாக்டர் விவேக் மூர்த்தி பல மருத்துவமனைகளில் பணியாற்றியுள்ளார்.


முன்னதாக, இரு வார காலங்களுக்கு முன் அமெரிக்காவின் (America) அதிபராக பதவியேற்கும் ஜோ பிடனின்  (Joe Biden) மனைவி ஜில் பிடனுக்கு (Jill Biden)  ஒரு இந்திய-அமெரிக்க மாலா அடிகா வெள்ளிக்கிழமை கொள்கை இயக்குநராக நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு, மாலா அடிகா வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகளுக்கு துணை உதவி செயலாளராக இருந்துள்ளார்.


ALSO READ | ஜோ பைடன் அணியில் இந்திய-அமெரிக்கர் மாலா அடிகாவிற்கு முக்கிய பதவி..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR