அமெரிக்காவில் பட்டை கிளப்பும் நம்ம “ரசம்”.. காரணம் என்ன தெரியுமா..!!!

அமெரிக்காவில் உள்ள தமிழர் ஒருவர், தனது புதுமையான முயற்சியின் மூலம், நமது ரசத்தின் மகிமையை பரப்பி, தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 4, 2020, 04:19 PM IST
  • அமெரிக்காவில் உள்ள தமிழர் ஒருவர், தனது புதுமையான முயற்சியின் மூலம், நமது ரசத்தின் மகிமையை பரப்பி, தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
  • சமையல் கலைஞர் அருண் ராஜதுரை சமையல் கலையை முறையாக பயின்றவர்.
  • திருச்சியில் உள்ள ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் படித்தவர்.
அமெரிக்காவில் பட்டை கிளப்பும் நம்ம “ரசம்”.. காரணம் என்ன தெரியுமா..!!! title=

அமெரிக்காவில் உள்ள தமிழர் ஒருவர், தனது புதுமையான முயற்சியின் மூலம், நமது ரசத்தின் மகிமையை பரப்பி, தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

ஆமாம், அவரது, ஒரு யோசனை மூலம் இப்போது ரசம் அமெரிக்காவின் நியூயார்க், நியூ ஜெர்சி மற்றும் பிரின்ஸ்டன் போன்ற இடங்களில் மிகவும் அமோகமாக விற்பனை ஆகிறது.

அமெரிக்காவில் (America), உள்ள சமையல் கலைஞர் அருண் ராஜதுரை அரியலூர் ஜெயம்கொண்டான் அருகே அமைந்திருக்கும் மீன்சுருட்டி பகுதியை பூர்விகமாக கொண்டவர்.

இவருக்கு கொரோனா ஊரடங்கு சமயத்தில் ஒரு யோசனை தோன்றியது. நமது தமிழ்நாட்டின் ( Tamil Nadu) உணவான ரசத்தில், நாம் மஞ்சள், இஞ்சி, பூண்டு போன்றவற்றை சேர்த்து சமைப்பதால், அது இயற்கையிலேயே நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டதாக உள்ளது.  அதனால், அதனை நோயாளிகளுக்கு கொடுக்கலாம் என அவருக்கு யோசனை தோன்றியது.

அவர் மூன்று மருத்துவமனைகளில் உள்ள் கொரோனா (Corona) நோயாளிகளுக்கு உணவு வழங்கும் போது, ரசத்தையும் சேர்த்து வழங்கினார். அதற்கு அவருக்கு பெருத்த வரவேற்பு கிடைத்தது.

இதை இம்யூனிட்டி சூப், அதாவது நோய் எதிர்ப்பு சூப் என பெயரிட்டு அழைக்கப்பட்டதுடன், அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரிப்பது குறித்து அனைவரும் யோசித்து வரும் வேளையில், இது மிக பெரிய ஹிட் ஆகியுள்ளது.

சமையல் கலைஞர் அருண் பணிபுரிந்து வந்த உணவகத்தின் பிரின்ஸ்டன் கிளையில், இதன் புகழ் பரவியதன் காரணமாக, நியூயார்க், நியூ ஜெர்ஸி மற்றும் கனடா கிளைகளிலும் இந்த ரசம் ஸ்பெஷல் உணவாக அறிமுகம் செய்யப்பட்டது.

இப்போது, இதற்கு அமெரிக்காவில் பெருமளவில் டிமாண்ட் அதிகரித்துள்ளது. தினமும் சுமார் 500-600 கப் ரசம் விற்பனையாகிறது.

சமையல் கலைஞர் அருண் ராஜதுரை சமையல் கலையை முறையாக பயின்றவர். திருச்சியில் உள்ள ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் படித்தவர். மேலும், கடந்த 2018ம் ஆண்டு சிறந்த தெற்காசிய சமையல் கலைஞருக்கான விருதையும் அருண் ராஜதுரை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | தலைவிரித்தாடும் தானியபற்றாகுறை; அரிசிக்காக இந்தியாவிடம் கை ஏந்தும் சீனா..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News