அமெரிக்க அதிபர் தேர்தலில் அமெரிக்காவின் அயோவா மாகணத்தில் முன்னிலை வகிக்கிறார் டிரம்ப். இதை சொல்வது கருத்துக் கணிப்புகள். 
ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடனை விட டொனால்ட் டிரம்ப் 48% முதல் 41% வரை முன்னிலை வகிப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
2020 ஆம் ஆண்டு அமெரிக்கத் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக, குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரும், தற்போதைய அமெரிக்க அதிபருமான டொனால்ட் டிரம்ப் அயோவா மாநிலத்தில் முன்னிலை வகிக்கிறார். Des Moines Register and Mediacom  அமைப்புக்காக Selzer & Co எடுத்த அக்டோபர் 26 முதல் 29 வரை  நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரை விட முன்னணியில் இருக்கிறார் டொனால்ட் டிரம்ப். அக்டோபர் மாதத்தில் அயோவாவில் டிரம்ப் மற்றும் பிடன் என இருவருமே பிரசாரம் செய்தனர்.


கடந்த மாத தொடக்கத்தில், மோன்மவுத் பல்கலைக்கழக கருத்துக் கணிப்பு, பிடன் 47 சதவீத வாக்குகள் பெற்றார் என்றும், டிரம்ப் 48 சதவீதம் வாக்குகள் பெற்று முன்னிலை வகித்ததாகவும் கூறியது.  


இருப்பினும், சமீபத்திய தேசிய கருத்துக் கணிப்புகள் டிரம்பின் கை ஓங்கியிருப்பதாகக் கூறுகின்றன.


அயோவா மாநிலத்தில் ஜனநாயக போட்டியாளருக்கு எதிரான புதிய வாக்கெடுப்பில் டிரம்ப் முன்னிலை வகிப்பது குடியரசுக் கட்சியினருக்கு ஆதரவாக ஏற்பட்டுள்ள கடைசி நிமிட மாற்றத்தைக் காட்டுகிறது.
அமெரிக்க தேர்தல் வரலாற்றில் முதல் தடவையாக வாக்காளர்களின் எண்ணிக்கை 90 மில்லியனுக்கும் அதிகமாகியுள்ளது. புளோரிடா பல்கலைக்கழகத்தில் அமெரிக்க தேர்தல் திட்டத்தால் வெளியிடப்பட்ட ஒரு கணக்கின்படி, 90 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க வாக்காளர்கள் ஏற்கனவே தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர், நவம்பர் 3 இறுதிக்குள் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR