ரஷ்யாவின் போரால் இயல்பு வாழ்க்கையை இழந்து தவிக்கும் உக்ரைன் மக்களுக்கு உதவும் தனது முயற்சிகளை அமெரிக்கா மேலும் தொடர்கிறது. தற்போது, உக்ரைனுக்கு உதவ 100 மில்லியன் டாலர் கூடுதல் ராணுவ உதவியை அமெரிக்கா அனுப்ப உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராட உக்ரைனுக்கு உதவும் விதமாக, 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கூடுதல் இராணுவ உதவியை அமெரிக்கா அனுப்பவிருப்பதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 


அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் நிர்வாகம் மேற்கொள்ளவிருக்கும் இந்த உதவி தொடர்பான அறிவிப்பை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வியாழக்கிழமை (2022, மே 19) அறிவித்தார்.


ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து, அமெரிக்கா பல்வேறு வகையான ஆயுதங்களை வழங்குவதன் மூலம் உக்ரைனுக்கு உதவி வருகிறது.


மேலும் படிக்க | சர்வாதிகாரர்களுக்கு மரணம் நிச்சயம்..கேன்ஸ் விழாவில் உக்ரைன் அதிபர் பேச்சு


பிடென் பத்தாவது முறையாக தனது ஜனாதிபதி டிராடவுன் ஆணையத்தை (Presidential Drawdown Authority (PDA)) பயன்படுத்தி, இந்த இராணுவ உதவியை உக்ரைனுக்கு வழங்குக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக, PDA நிதியத்தில் உள்ள நிதியை அதிபர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வழங்கலாம்.


அவசரநிலை ஏற்பட்டால் காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல் அமெரிக்க பங்குகளில் இருந்து அதிகப்படியான ஆயுதங்களை மாற்ற பிடனுக்கு PDA அங்கீகாரம் அளிக்கிறது.


தற்போது 100 மில்லியன் டாலர் அளவிலான ராணுவ உதவியை அமெரிக்க அதிபர் ஜோ பிடன், உக்ரைனுக்கு வழங்கவிருக்கிறார்.


மேலும் படிக்க | ரஷ்யா ஏவுகணை பயங்கரவாத உத்தியை பயன்படுத்துகிறது: உக்ரைன்


இந்த உதவி தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், "ரஷ்யா தொடுத்திருக்கும் போரில், உக்ரைனின் பாதுகாப்புப் படைகள் சண்டையில் உறுதியாக உள்ளன. அமெரிக்காவும், 40 க்கும் மேற்பட்ட நட்பு நாடுகள் மற்றும் கூட்டாளர் நாடுகளும், உக்ரைனின் பாதுகாப்பிற்கு அவசியமான ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை கொடுக்கும் பணியில் 24 மணி நேரமும் உழைத்து வருகின்றன" என்று தெரிவித்தார்.


18 தந்திரோபாய வாகனங்கள், 18 கூடுதல் 155 மிமீ ஹோவிட்சர்கள் மற்றும் மூன்று கூடுதல் எதிர்ப்பு பீரங்கி ரேடார்கள் உட்பட பல ஆயுதங்களும் தளவாடங்களும் புதிய பாதுகாப்பு தொகுப்பில் அனுப்பப்படுகின்றன என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி ஒரு ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.


ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கிய பிறகு, இதுவரை சுமார் 3.9 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை  உக்ரைனுக்கு, அமெரிககா இராணுவ உதவியாக வழங்கியுள்ளது என்றறு எட்டியுள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | இலங்கையில் நீடிக்கும் கலவரம், தொடரும் பதற்றம்: அச்சத்தில் மக்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR