அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த கோடீஸ்வர தொழில் அதிபர் தான் பிரைன் ஜான்சன். இவர் மூளையின் செயல்பாட்டை கண்காணித்து பதிவு செய்யும் சாதனங்களை தயாரிக்கும் நிறுவனமான kernal என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். மேலும் இவர் உலக பணக்காரர்களில் 46 ஆவது இடத்திலும் இருந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு தனது வாழ்க்கையில் ஒரு விசித்திரமான லட்சியம் உள்ளது. அது தனது உடலை எப்போதுமே இளமையாக வைத்துக் கொண்டு மரணத்தை வெல்ல வேண்டும் என்பதுதான். இளமையாக இருக்க வேண்டும் என்று சொன்னால் மட்டும் போதுமா அதற்காக நிறைய விஷயங்களை அவர் செய்து வருகிறார். அது பலரையும் வியக்க வைத்துள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உதாரணமாக தன் டயத்தில் தொடங்கி ஒவ்வொன்றையும் தனக்காக அவர் வடிவமைத்துள்ளார்.பிரைன் ஜான்சன் ப்ளூ பிரிண்ட் என இணையத்தில் தேடினாலே நாம் அதனை காண முடிகிறது. அந்த டயட்டில் குறிப்பாக ஆல்கஹால் கபேன் சுகர் போன்றவற்றுக்கு இடமில்லை. கொலாஜன் ஸ்பெர்மிடின் கிரியேட்டின் போன்ற பொருட்கள் நிரம்பிய கிரீன் ஜெயின்ட் (green gaint) smoothie என்று அழைக்கப்படும்  பானத்தோடு தனது நாளை தொடங்குகிறார் ஜான்சன். மேலும் அவர் தனது உணவில் பெரும்பாலும்  பச்சை காய்கறிகள் பழங்களை மட்டுமே உட்கொள்கிறார்.


 குறிப்பாக அவர் தனது இளமையை தக்க வைத்துக் கொள்ள தினமும் 110 மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார் என்றும் அதோடு காலை 6 மணி முதல்  11 மணிக்குள் தனது உணவுகளை முடித்துக் கொள்கிறார் என்று சொல்லப்படுகிறது. மேலும் அவர் தனது இரவு உணவு நேரம் எனக் குறிப்பிடுவது காலை 11 தான் அதற்கு மேல் அவர் துளியும் சாப்பிடுவதில்லை என்றும் கூறப்படுகிறது


இவை தவிர பார்ப்பதற்கு இளமை மட்டுமல்லாமல் தனது உடல் உறுப்புகளையும் சேர்த்து அவர் இளமையாக வைத்துக் கொள்ள தனி முயற்சி செய்து வருகிறார் அதற்காக வருடத்திற்கு 2 மில்லியன் டாலர் பணத்தை அவர் செலவு செய்து வருகிறாராம். இதற்காக அவரை சுற்றி தனி மருத்துவ குழு ஒன்றும் செயல்படுகிறது, தினமும் அவரது முன்னேற்றத்தை கண்காணிக்க அதிநவீன மருத்துவ சாதனங்களையும் பயன்படுத்துகின்றனர்.


மேலும் படிக்க | செவ்வாய் கிரகத்திற்கு 10 லட்சம் பேரை அனுப்ப திட்டமிடும் எலோன் மஸ்க்!


இதில் முக்கியமாக இளமையாக இருப்பதற்கு தூக்கம் மிகவும் அவசியமான ஒன்று என்பதால் அந்த தூக்கத்தை அவர் முறையாக கடைப்பிடிக்கிறார் ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் தூங்கி எழுவது என்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
இரவு நேர தூக்கத்தின் போது தனது ஆணுறுப்பில் ஜெட் பேக் என்ற கருவியை அவர் இணைத்துக் கொள்கிறார் இந்த கருவி இரவு நேர விறைப்பு தன்மையை கணக்கிட உதவுகிறது. இவை தவிர தனது மூளையின் செயல்பாட்டை கண்காணிப்பதற்காக ரெட் லைட் பொருத்தப்பட்ட ஒரு தொப்பியை பயன்படுத்துகிறார். அதுபோக தினமும் அவர் தனது மலத்தின் மாதிரிகளையும் சேகரிக்கிறார். இதன் மூலம் அவரால் குடல் ஆரோக்கியம் போன்றவற்றை கண்காணிக்க முடிகிறது.


தான் சாகக்கூடாது என்பதை லட்சியமாகக் கொண்டிருக்கும் இவர் தனது காரை கூட 16 கிலோமீட்டர் வேகத்தில் தான் ஓட்டு வாரம் அதோடு அவ்வப்போது தனது 18 வயது மகனின் ரத்தத்தை தனக்குள் செலுத்திக் கொள்வாராம். தனது இளமையை பேணி காப்பதற்காக ;20 மேற்பட்ட கருவிகளை, உடலில் பொருத்தி கண்காணிக்கும் இவர் இதற்காக 30 பேர் அடங்கிய மருத்துவ குழுவையும்  வைத்திருக்கிறார். 


Anti-ageing algorithm என்ற பார்முலாவை தொடர்ந்து பின்பற்றி  வரும் இவர் தனது ஒவ்வொரு உறுப்பிற்கும் சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் தனது அழகை, இளமையை பராமரிக்கிறார். தற்போது  46 வயதாகும் தான்  இப்போது 18 வயது இளைஞராக  தன்னை உணர்வதாக கூறி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார் இந்த கோடீஸ்வர தொழிலதிபர்.


மேலும் படிக்க | உளவு பார்க்கும் WhatsApp... அதை நம்பாதீங்க.. பகீர் கிளப்பும் எலான் மஸ்க்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ