எப்போதும் இளமையாக இருக்க... கொலாஜன் நிறைந்த ‘இந்த’ உணவுகள் உதவும்!

Anti-Ageing Tips: முதுமையில் இருந்து காப்பாற்றிக் கொள்ள கொலாஜன் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால், உடலை கட்டுகோப்பாக வைத்துக் கொண்டு, என்றும் இளமையாக இருக்கலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 13, 2023, 03:12 PM IST
  • முதுமை நம்மை அண்டாமல் இருக்க உணவில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம்.
  • உணவை தவிர சூரிய ஒளி நிச்சயம் உடலுக்கு தேவை.
  • சிலர் முதுமையில் இருந்து தப்ப கொலாஜன் சப்ளிமெண்ட் மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள்.
எப்போதும் இளமையாக இருக்க... கொலாஜன் நிறைந்த ‘இந்த’ உணவுகள் உதவும்! title=

ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, 30 வயதிற்குப் பிறகு, உடல் உறுப்புகளின் செயல்பாட்டின் வேகம் குறைய ஆரம்பித்து, முதுமையின் தாக்கம் மெதுவாகத் தோன்றத் தொடங்குகிறது. இதன் அறிகுறியாக, தோலில் சுருக்கங்கள், கண் பார்வை மங்குதல், மூட்டுகளில் வலி, காது கேளாஐ போன்ற  பிரச்சனைகள் மட்டுமின்றி, ஒரு வயதிற்குப் பிறகு, இதய நோய், சர்க்கரை நோய், புற்றுநோய், ஆஸ்டியோபோரோசிஸ், இரத்த சோகை, தைராய்டு போன்ற தீவிர நோய்களின் அபாயமும் அதிகரிக்கிறது. 

தொழில், குடும்பம், குழந்தைகள் மற்றும் குடும்பப் பொறுப்புகள் அனைத்தையும் இந்த நேரத்தில் கவனிக்க வேண்டியிருக்கும் நிலையில் முதுமை நம்மை அண்டாமல் இருக்க உணவில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். இந்நிலையில், முதுமையில் இருந்து காப்பாற்றிக் கொள்ள சில உணவுகளை சாப்பிடுவது சிறந்தது. கொலாஜன் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால், உடலை கட்டுகோப்பாக வைத்துக் கொண்டு, என்றும் இளமையாக இருக்கலாம். சிலர் முதுமையில் இருந்து தப்ப கொலாஜன் சப்ளிமெண்ட் மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள். அதனை தவிர்க்க இயற்கையில் கொலாஜனை உற்பத்தி செய்யும் உணவுகளை எடுத்துக் கொள்வது சிறப்பு.

வயதாகும் போது, உடல் குறைந்த கொலாஜனை உற்பத்தி செய்கிறது. இதனால் தோலின் கட்டமைப்பு குலைந்து சுருக்கங்கள் உருவாகின்றன. மேலும்,  மூட்டு குருத்தெலும்பு பலவீனமடைகிறது. எலும்புகள், தசைகள், தோல் மற்றும் தசைநாண்களில் காணப்படும் கொலாஜன் மனித உடலில் அதிகளவில் இருக்கும் புரதம் ஆகும்.  இன்றைய காலகட்டத்தில் 50 வயதிற்கு மேல், கொலாஜன் உற்பத்தியில் கணிசமான சரிவு  ஏற்படுவது இயல்பானது. மேலும், வேறு சில காரணிகள் உடலில் உள்ள கொலாஜன் அளவைக் குறைக்கலாம். அதிக சர்க்கரை அளவு, புகைபிடித்தல், நோய் எதிப்பு சக்தி இல்லாத தன்மை ஆகியவை இடங்கும்

சருமத்தின் தோற்றம்  மற்றும் இளமை ஆகியவற்றில் உணவு ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. கொலாஜன் நிறைந்த உணவுகள் அல்லது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகளை உண்பது உங்கள் சருமத்தை இறுக்கமாக்கி சுருக்கங்களை போக்கி இளமையாக வைத்திருக்கும்.

குடைமிளகாய்

குடைமிளகாயில் காணப்படும் கேப்சைசின் எனப்படும் அழற்சி எதிர்ப்பு கலவை சருமம் முதுமை அடைவதை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் குடை இதில் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் வைட்டமின் சி, ஆன்டிஆக்சிடண்டுகள், அமினோ அமினோ மற்றும் பல அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளன. 

பச்சை இலை காய்கறிகள்

நமது உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்திற்கு தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ள கீரை, முட்டைக்கோஸ் போன்ற பச்சை இலை காய்கறிகள் சூப்பர்ஃபுட் வகையை சேர்ந்தவை. இதில் உள்ள குளோரோபில், கொலாஜன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பதை பல ஆய்வுகள்  உறுதிபடுத்தியுள்ளன.

மேலும் படிக்க | உருளைக்கிழங்கு ஆரோக்கியமானதா இல்லையா? சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

மீன் உணவுகள்

உடலில் கொலாஜன் உற்பத்திக்கு உதவும் அமினோ அமிலங்கள், துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற அத்தியாவசிய தாதுக்களின் சக்திவாய்ந்த ஆதாரமாக மீன் உள்ளது. தவிர பல வகையான பிற மீன்களிலும் சில வகை இறைச்சிகளிலும் ஆரோக்கியமான கொழுப்புகள் இருப்பதால், முதுமையை எதிர்த்து போராட உதவும்.  மீண் உணவுகள் மூலம் ஆரோக்கியமான இளமையான சருமத்தை பராமரிக்கலாம்.

சிட்ரஸ் பழங்கள்

எலுமிச்சை மற்றும் பிற சிட்ரஸ் பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி அதிகம்  உள்ளதால்,  இவை உடலில் கொலாஜன் உற்பத்திக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் நச்சுகளை வெளியேற்றி, நல்ல ஊட்டமான சருமத்தை பெறவும் உதவுகின்றன. சிட்ரிக் பழங்கள் தோல் அழற்சியை எதிர்த்து போராடவும் உதவுகின்றன.

சூரிய ஒளி

உணவை தவிர சூரிய ஒளி நிச்சயம் உடலுக்கு தேவை. சூரிய ஒளி நமக்கு ஆற்றலை அளிக்கிறது. அதிலிருந்து கிடைக்கும் விட்டமின் டி உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்ட சத்து என்பதை மறுக்க முடியாது.. ஆனால், வெயிலில் அதிக நேரம் செலவிட்டாலும், அது உங்கள் சருமத்தை பாதிக்கும். மத்தியானம் வேளையில், கடுமையான சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதா கதிர்கள் உங்கள் சரும செல்களில் இருக்கும் மரபணுவை சேதப்படுத்தி, சருமம் கருத்து, சுருக்கங்களும் ஏற்படும். இதை தவிர்க்க சன்ஸ்கீரின் லோஷன் பயன்படுத்தவும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.

மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அளவை உடனடியாக கட்டுப்படுத்த.. இந்த 5 உணவுகள் உதவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News