Vladimir Putin's Health Update: ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போர் 11 மாதங்களாக நீடிக்கும் நிலையில், விளாடிமிர் புடின் குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அதிர்ச்சியுட்டும் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். புடின் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்று வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார். புடினின் இருப்பு குறித்து ஜெலென்ஸ்கி கேள்வி எழுப்பியுள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டின் நிகழ்ச்சியில் காணொளிக் காட்சி மூலம் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜெலென்ஸ்கியின் இந்தக் கூற்றுக்கு ரஷ்யாவும் பதிலடி கொடுத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெலென்ஸ்கி  கூறிய பரபரப்பு கூற்று


புடின் சில கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும், அவருக்கு புற்று நோய் உள்ளது என்பது அவ்வப்போது  தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் தற்போது உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ள கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், யாருடன் பேசுவது என்று இப்போது எனக்கு புரியவில்லை என்று  கூறிய வோலோடிமிர் ஜெலென்ஸ்கி புடின் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது என்றார். அவர் இல்லை என்றால் யார் முடிவு எடுப்பது? என்ற கேள்வியையும் முன் வைத்தார்.


மேலும் படிக்க | Helicopter Crash: உக்ரைன் ஹெலிகாப்டர் விபத்து அமைச்சர்கள் குழந்தைகள் என 18 பேர் பலி


புடினை பொதுவில் பார்ப்பது அரிது


ரஷ்ய ஜனாதிபதி முன்பை விட குறைவாக மக்கள் முன்னிலையில் தோன்றிய நிலையில், Zelensky இந்தக் கூற்றை முன்வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இதற்கு உறுதியான ஆதாரம் இல்லை. அவரது உடல்நிலை குறித்து கேள்விகள் எழுந்த நிலையில், அவர் அரிதாகவே பொதுவில் தோன்றுகிறார். பனிக்கட்டி நீரில் பாரம்பரிய நீராடும் ஆர்த்தடாக்ஸ் எபிபானியின் போது புடின் இந்த முறையும் தோன்றவில்லை. உக்ரேனியர்கள் இப்போது இதை ஒரு பிரச்சினையாக ஆக்கியுள்ளனர்.


புடினின் உடல்நிலை குறித்த தகவல்கள்


இருப்பினும், புடினின் வயது இப்போது 70 வயதாகிறது, இப்போது அவரது உடல்நிலை முன்பு போல் நன்றாக இல்லை என்றும் சிலர் யூகித்துள்ளனர். புடின் பனிக்கட்டி நீரில் குளிக்கும் படம் இதுவரை வெளிவராததற்கு இதுவே காரணமாக இருக்கலாம். அதேநேரம், ஜெலென்ஸ்கிக்கு கடுமையாக பதில் அளித்துள்ள ரஷ்யா, புடின் மற்றும் ரஷ்யா இருப்பதை ஜெலென்ஸ்கி ஒருபோதும் விரும்பமாட்டார் என ரஷ்யா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | அலுவலகத்தில் உள்ள பயன்படுத்தப்பட்ட பொருட்களை ஏலம் விடும் டிவிட்டர் நிறுவனம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ