குடியுரிமை வழங்குவதற்கு உள்ள 7% உச்சவரம்பை நீக்கி, 15%-மாக உயர்த்துவதற்கு வகை செய்யும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கி பணிபுரிய விரும்புகிற பிற நாட்டினருக்கு ‘கிரீன் கார்டு’ எனப்படும் குடியுரிமை வழங்கப்படுகிறது. 3 ஆண்டு காலம் அந்நாட்டில் தங்கி வேலை செய்ய விரும்புகிற வெளிநாட்டினருக்கு ‘H-1B’ விசா தரப்படுகிறது. இந்த ‘H-1B’ விசா மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கத்தக்கது.


 ‘H-1B’ விசாதாரர்களில் மிகவும் திறமையும், தகுதியும் வாய்ந்த 7% பேருக்குத்தான் நிரந்தரமாக தங்கி வேலை செய்ய வசதியாக ‘கிரீன் கார்டு’ தரப்படுகிறது. அதுவும் விண்ணப்ப மூப்பு அடிப்படையில் தரப்படுவதால், ‘கிரீன் கார்டு’க்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.


இதன் காரணமாக ‘H-1B’ விசாவில் செல்கிற தகவல் தொழில் நுட்பத்துறையினர், மிகவும் திறமைபடைத்த பிற துறையினர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.


இந்த நிலையில் ‘கிரீன் கார்டு’ வழங்குவதற்கு உள்ள 7% உச்சவரம்பை நீக்கி, 15%-மாக உயர்த்துவதற்கு வகை செய்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.


இந்த மசோதாவின் மீது நேற்று முன்தினம் பிரதிநிதகள் சபையில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இந்த ஓட்டெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 365 எம்.பி.க்கள் வாக்களித்தனர், எதிராக 65 ஓட்டுகள் மட்டுமே விழுந்தன. பெரும்பான்மையானோர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததால் மசோதா நிறைவேறியது. இதைத்தொடர்ந்து இந்த மசோதா அடுத்து செனட் சபையில் நிறைவேற வேண்டும்.


அங்கு குடியரசு கட்சியினருக்கு பெரும்பான்மை பலம் உள்ளதால் மசோதா நிறைவேறுவதில் சிக்கல் ஏதும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.