அமெரிக்காவின் லூசியானா மற்றும் மின்னெசோட்டா மாநிலங்களில் அடுத்தடுத்து போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் இரு கருப்பினத்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் கருப்பின மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவ்வகையில், இங்குள்ள டெக்சாஸ் மாநிலத்தின் டல்லாஸ் நகரில் நேற்றிரவு நூற்றுக்கணக்கான கருப்பினத்தவர்கள் போலீசாரின் மனித உரிமை மீறல் மற்றும் அராஜகத்த்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டக்காரர்களை போலீசார் காட்டுப்படுத்த முயன்றபோது அவர்களில் சிலர் நடத்திய துப்பாக்கி சூட்டில் நான்கு போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர். பத்துக்கும் அதிகமான போலீஸ் அதிகாரிகள் துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயமடைந்தனர்.


தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை போலீசார் சல்லடை போட்டு தேடி வருகின்றனர். இந்த திடீர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டதாகவும் சம்பவ இடத்தில் இருந்து வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


வீடியோ:-