இன்றைய உலகில், மொபைலுக்கு தடை, தொலைகாட்சி கிடையாது என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? அதிலும் பக்கத்து ஊரில் இந்த வசதிகள் இருக்கும், ஆனால் அடுத்தத் தெருவில் உள்ள உங்கள் வீட்டில் இருந்து மொபைல் பயன்படுத்தக்கூடாது, டிவி இருக்கக்கூடாது என்று சொன்னால் எப்படி இருக்கும்?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது மட்டுமல்ல, உலகில் இந்த ஒரே நகரத்தில் மட்டும், குழந்தைகளின் பொம்மைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறதா? நம்ப முடியாவிட்டாலும் இது நிதர்சனமான உண்மை.


மொபைல், டிவி, ரேடியோ என கேஜட்களும் மக்கள் அனைவருக்கும் தடைசெய்யப்பட்ட உலகின் ஒரே நகரத்தைப் பற்றி தெரியுமா?  இந்த நகரில் வேறு யாராவது இந்த பொருட்களை பயன்படுத்தினால், அவர்கள் சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும்.


குழந்தைகளின் பொம்மைகளுக்கும் தடை விதிக்கப்பட்டதற்கான காரணம் என்ன?  உலகமே நவீன தொழில்நுட்பங்களினால் ஒரு கிராமமாக மாறிவிட்டது என்று சொல்கிறோம்.


மேலும் படிக்க | மங்கி வைரசுக்கு பிறகு மார்பர்க் வைரஸ் பரவுகிறதா


டிஜிட்டல் மயமான இந்த காலத்தில், அனைவரிடமும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய பொருட்கள் உள்ளன. ஆனால் மின்சார பொருட்களை பயன்படுத்த முடியாத நகரம் அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியாவில் உள்ள போகாஹொண்டாஸ் கவுண்டியில் உள்ள ஒரு நகரம் ஆகும்.


 க்ரீன் பேங்க் சிட்டி என்ற இந்த ஊரில் தான் மின்சார பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நகரில் சுமார் 150 பேர் வசிக்கின்றனர். க்ரீன் பேங்க் சிட்டியில் யாரும் மொபைல், டிவி அல்லது ரேடியோ போன்ற மின்சார சாதனங்களைப் பயன்படுத்துவதில்லை.


இந்த தடைக்கான காரணம், உலகின் மிகப்பெரிய திசைமாற்றி தொலைநோக்கி இந்த ஊரில் அமைந்துள்ளது தான் என்று சொல்லப்படுகிறது. உலகின் மிகப்பெரிய திசைமாற்றி ரேடியோ தொலைநோக்கி இங்கு உள்ளது. இது க்ரீன் பேங்க் தொலைநோக்கி என்றும் அழைக்கப்படுகிறது.


மேலும் படிக்க | விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; சீனாவின் 'Sail' குப்பைகளை அகற்றுமா


இந்த தொலைநோக்கி மிகவும் பெரியது, ஒரு பெரிய கால்பந்து மைதானம் அளவில் இருக்கும் இந்த தொலைநோக்கியின் நீளம் 485 அடி, எடை 7600 மெட்ரிக் டன். இந்த தொலைநோக்கியை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் என்பதும் மிகவும் ஆச்சரியமான விஷயம்.


இந்த ஸ்டீரியபிள் ரேடியோ தொலைநோக்கி அமெரிக்க தேசிய வானொலி வானியல் ஆய்வகத்திற்கு சொந்தமானது. இது 1958 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. விண்வெளியில் இருந்து பூமிக்கு வரும் அலைகளை இங்கிருந்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்கின்றனர்.


இந்த தொலைநோக்கி 13 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள விண்வெளியில் இருந்து கிடைக்கும் சமிக்ஞையையும் ஈர்க்கும் அளவுக்கு பெரியது. மொபைல், டிவி, ரேடியா போன்ற மின்சார சாதனங்களில் இருந்து வரும் அலைகள் விண்வெளியில் இருந்து வரும் அலைகளை பாதிக்கும் என்பதால் இந்த ஊரில் அனைத்து மின்சாதனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா: இந்த உணவுகளுக்கு NO சொல்லுங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR