Who is Gurpatwant Singh Pannun: காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு இந்தியாவை பயமுறுத்துவோம் என்று மிரட்டியுள்ளார். அமெரிக்காவில் கூட்டம் நடத்திய அவர், டிசம்பர் 13 ஆம் தேதி (புதன்கிழமை) இந்திய நாடாளுமன்றத்தை தாக்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இது ஒரு புதிய விஷயம் இல்லை என்றாலும். கடந்த மாதமும் குர்பத்வந்த் சிங் பன்னுன் (Gurpatwant Singh Pannun) இந்தியாவை தாக்குவோம் என மிரட்டும் வீடியோவை வெளியிட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குர்பத்வந்த் சிங் பன்னுன் வீடியோ 


தற்போது வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், என்னை கொலை செய்வதற்கான சதித்திட்டம் தோல்வியடைந்தது என்று காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் கூறியுள்ளார். டிசம்பர் 13 ஆம் தேதி பாராளுமன்ற கட்டிடத்தை தாக்கி பதிலடி கொடுப்பேன். 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி பாராளுமன்ற கட்டிடத்தின் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வழக்கில் 2013ல் அப்சல் குரு தூக்கில் இடப்பட்டார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் குர்பத்வந்த் சிங் பன்னுன் தனது புதிய வீடியோவில் பயங்கரவாதி அப்சல் குருவின் புகைப்படத்தையும் பயன்படுத்தி உள்ளார். அந்த வீடியோவில், அவர் 'டெல்லி பனேகா காலிஸ்தான்' (டெல்லி காலிஸ்தானாக மாறும்) என்ற கோஷங்களையும் எழுப்பி உள்ளார். 


ஏர் இந்தியா: மிரட்டல் விடுத்த குர்பத்வந்த் சிங் பன்னுன்


முன்னதாக நவம்பர் 19 ஆம் தேதி, ஏர் இந்தியா விமானத்தில் பயணிப்பவர்களின் உயிருக்கு ஆபத்து என்றும், ஏர் இந்தியா விமானத்தில் சீக்கியர்கள் பயணம் செய்ய வேண்டாம் என்று எச்சரித்திருந்த வீடியோவை குர்பத்வந்த் சிங் பன்னுன் வெளியிட்டிருந்தார். ஆனால் நவம்பர் 19 அன்று அவர் பயமுறுத்தியது போல எந்த சம்பவமும் நடக்கவில்லை. அதுமட்டுமில்லாமல், இந்த மிரட்டல் வீடியோ தொடர்பாக, இந்தியாவில் உள்ள தேசியப் புலனாய்வு முகமை (National Investigation Agency) குர்பத்வந்த் சிங் பன்னுன் மீது ஒரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது.


மேலும் படிக்க - பயங்கரவாதிகளுக்கு 'பாதுகாப்பான புகலிடமாக' கனடா மாறி வருகிறது: இந்தியா


குர்பத்வந்த் சிங் பன்னுன் யார்? அவரை பற்றி தெரிந்து கொள்வோம்


பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள கான்கோட் கிராமத்தில் வசிப்பவர். குர்பத்வந்த் சிங் பன்னுன் ஒரு சாதாரண பஞ்சாபி குடும்பத்தில் 1967 பிப்ரவரி 14 அன்று பிறந்தார். குர்பத்வந்த் சிங் பன்னுனின் தந்தை பெயர் மொஹிந்தர் சிங், இவர் பஞ்சாப் மாநில விவசாய சந்தைப்படுத்தல் வாரியத்தில் பணிபுரிந்தார். அவரது தாயார் பெயர் அமர்ஜித் கவுர். இருவரும் இப்போது இந்த உலகில் இல்லை என்றாலும். குர்பத்வந்த் சிங் பன்னுன்னுக்கு ஒரு சகோதரனும் இருக்கிறார். அவருடைய பெயர் மக்வந்த் சிங் பன்னு. அவரும் வெளிநாட்டில் வசிக்கிறார்.


குர்பத்வந்த் சிங் பன்னுன் ஒரு வழக்கறிஞர்


குர்பத்வந்த் சிங் பன்னுன் 1990-களில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். கல்லூரி நாட்களிலிருந்தே மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். 1991-92 ஆம் ஆண்டில் அமெரிக்கா சென்ற குர்பத்வந்த் சிங் பன்னுன், அங்கு அவர் கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் தனது கல்வியை தொடர்ந்தார். அங்கு நிதித்துறையில் எம்பிஏ படித்துவிட்டு, நியூயார்க் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து பட்டம் பெற்றார். இவர் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளின் குடியுரிமையும் வைத்திருக்கிறார்.


மேலும் படிக்க - இந்தியாவை கனடா குற்றம்சாட்ட இதுதான் காரணம்: அதிர்ச்சி ரிப்போர்ட்


"நீதிக்கான சீக்கியர்கள்" அமைப்பை நிறுவிய குர்பத்வந்த் சிங் பன்னுன்


சீக்கியர்களுக்கு தனி நாடான காலிஸ்தானை வலியுறுத்தி, அதனை உருவாக்கும் பிரசாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால், தலைப்புச் செய்திகளில் குர்பத்வந்த் சிங் பன்னுன் இடம்பிடித்தார். மேலும் 2007 இல், காலிஸ்தான் கோரிக்கைக்கு வலுசேர்க்கும் விதமாக "நீதிக்கான சீக்கியர்கள்" அமைப்பை நிறுவினார்.


குர்பத்வந்த் சிங் பன்னுன் ஒரு பயங்கரவாதி


குர்பத்வந்த் சிங் பன்னுனின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வந்த இந்திய அரசு, 2020 ஆம் ஆண்டில் அவரை பயங்கரவாதியாக அறிவித்தது. 


"நீதிக்கான சீக்கியர்கள்" அமைப்புக்கு தடை


முன்னதாக, ஜூலை 10, 2019 அன்று, UAPA இன் கீழ் "நீதிக்கான சீக்கியர்கள்" அமைப்பை உள்துறை அமைச்சகம் தடை செய்தது. குர்பத்வந்த் சிங் பன்னுவை பயங்கரவாதியாக அறிவித்ததுடன், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் 51A பிரிவின் கீழ் அவரது விவசாய நிலம் பறிமுதல் செய்யப்பட்டது.  


குர்பத்வந்த் சிங் பன்னுன் மீது 22 கிரிமினல் வழக்குகள்


தற்போது குர்பத்வந்த் சிங் பன்னுன் மீது பஞ்சாபில் மூன்று தேசத்துரோக குற்றச்சாட்டுகள் உட்பட 22 கிரிமினல் வழக்குகள் உள்ளன.


மேலும் படிக்க - பிரிட்டனில் பதற்றம்! இந்திய கொடியை அகற்றிய காலிஸ்தான் ஆதரவாளர்கள்... இந்தியா கடும் கண்டனம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ