உலகின் மிகவும் முதியவராக கருதப்பட்ட ஜப்பானைச் சேர்ந்த Nabi Tajima, தனது 117-வது வயதில் காலமானார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Nabi Tajima, ஜப்பானின் டோக்கியோவை சேர்ந்த இவர் நேற்று இரவு உடல்நல குறைவால் தெற்கு ஜப்பான் கையாக்கி மருத்துவமனையில் உயிர் இழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


1900-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4-ஆம் நாள் பிறந்த இவர், உலகின் மிகவும் முதியவர் என கருதப்படுகிறார். இவருக்கு முன்னர் கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜமைக்காவைச் சேர்ந்த வைலட் ப்ரவுன் என்பர் இறந்தார், அவரை அடுத்து அதிக வயதுடன் வாழ்பவர் என்னும் பெருமையினை இவர் பெற்றார்.


இவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஜப்பான் ஊடகங்கள் இவரது நினைவு வீடியோக்களை ஒளிப்பரப்பி வருகின்றன.


ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்சி நிறுவனம் ஒன்று, Nabi Tajima-வை அடுத்து தற்போது ஜப்பானைச் சேர்ந்த Chiyo Miyako என்பவர் 117-ஆம் வயதினை நெருங்கவுள்ளார், இவரே அடுத்த மூத்த நபராக வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது.


எனினும் கின்னஸ் சாதனை புத்தகத்தில், வடக்கு ஜப்பானைச் சேர்ந்த Masazo Nonaka என்பவர் தான் மூத்த மனிதர் என பதிவுதசெய்துள்ளது. இந்த பதிவானது Nabi Tajima-ன் மாற்றியமைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது!