நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு: மனித உடலில் புதிய பாகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!!
விஞ்ஞானிகள் உடலில் ஒரு புதிய பாகத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த பாகம் பற்றி இதற்கு முன்பு எந்த குறிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சூரிச்: விஞ்ஞானிகள் உடலில் ஒரு புதிய பாகத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த பாகம் பற்றி இதற்கு முன்பு எந்த குறிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பகுதி தாடையின் மாஸெட்டர் தசையின் ஆழமான அடுக்கில் காணப்படுகிறது. மாஸெட்டர் தசை (Masseter Muscle) தாடையின் கீழ் பகுதியை உயர்த்துகிறது. உணவை மெல்லுவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
மாடர்ன் அனாடமி பாடப் புத்தகம் மாசட்டரின் இரண்டு அடுக்குகளைக் குறிப்பிடுகிறது. இது ஒரு ஆழமான மற்றும் மேலோட்டமான அடுக்கை கொண்டது.
ஆராய்ச்சியில் கிடைத்த அதிர்ச்சிகரமான தகவல்கள்
எங்கள் கூட்டாளர் வலைத்தளமான வியானின் அறிக்கையின்படி, இந்த கண்டுபிடிப்பு Anals of Anatomy என்ற அறிவியல் இதழின் ஆன்லைன் பதிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. வரலாற்று நூல்களில் எழுதப்பட்ட தாடை தசைகளில் மறைந்திருக்கும் உறுப்பைக் கண்டறிய தங்கள் குழு ஆய்வைத் தொடங்கியதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்த ஆராய்ச்சியை (Scientific Research) மேற்கொள்ள, இறந்த 12 மனிதர்களின் உடல்களை ஃபார்மால்டிஹைட் மூலம் பாதுகாத்து வைத்தனர். விஞ்ஞானிகள் உடலின் தலையை ஆய்வு செய்தபோது, அதிர்ச்சியூட்டும் முடிவுகள் கிடைத்தன. பழங்கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்திலிருந்து சற்று தொலைவில், உடலின் வேறு ஒரு பகுதியை அவர்கள் கண்டறிந்தனர்.
ALSO READ | வகுப்பறையாகும் விண்வெளி நிலையம், ஆன்லைன் கிளாஸ் எடுக்கும் விண்வெளி வீரர்கள்..!!
உடல்கள் சிடி ஸ்கேன் செய்யப்பட்டன
விஞ்ஞானிகள் ஆராய்ச்சியின் போது 16 புதிய இறந்த உடல்களின் சிடி ஸ்கேன் செய்தனர். அவற்றை உயிருள்ள மனிதனின் எம்ஆர்ஐ ஸ்கேன்களுடன் ஒப்பிட்டனர். அப்போது, தாடை தசைகளில் மூன்றாவது அடுக்கு இருப்பதை அவர்கள் கண்டனர்.
இந்த ஆழமான அடுக்கு ஜிகோமாடிக் செயல்முறை மூலம் இயங்குகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த செயல்முறை கன்னங்களின் மென்மையான எலும்புகளை திடப்படுத்துகிறது. இதை கன்னத்தின் பின்புறத்தில் உணரலாம்.
சுவிட்சர்லாந்தில் உள்ள பாசல் பல்கலைக்கழகத்தின் உயிரியல் மருத்துவத் துறையின் விரிவுரையாளரும், ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியருமான சில்வியா மெஜி (Szilvia Mezey), தசையின் இந்த ஆழமான பகுதி முன்னர் அறியப்பட்ட இரண்டு அடுக்குகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்று கூறினார்.
தாடையை உறுதிப்படுத்துகிறது இந்த அடுக்கு
இந்த அடுக்கு கீழ் தாடையை உறுதிப்படுத்த உதவுகிறது என்று சில்வியா மெஜி கூறினார். கடந்த 100 ஆண்டுகளில் உடற்கூறியல் பற்றிய பல வித ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. சாத்தியமான அனைத்து வித ஆய்வுகளும் நடத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், இந்த கண்டுபிடிப்பு இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாகக் கருதப்படலாம் என்று பாஸல் பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ மையத்தின் பேராசிரியரான டாக்டர். ஜென்ஸ் கிறிஸ்டோஃப் டர்ப் கூறினார்.
ALSO READ | Robot can give birth! ரோபோட்டுகளும் இனி குழந்தைகளை பெற்றெடுக்கும் - புதிய கண்டுபிடிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR