ஜாகிர் நாயக்கை மலேசியாவில் இருந்து வெளியேற்ற முடியாது என்று மலேசிய பிரதமர் மகாதீர் பின் முகமது தெரிவித்து உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜாகிர் நாயக்  ஒரு இஸ்லாமிய மத போதகர் ஆவார். வங்கதேசம் மற்றும்  இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைளில் ஈடுபட்டு வந்ததாகவும், மததுவே ஷம் பரப்பி வந்த தாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ள இவர், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவரை கைது செய்ய இந்தியா பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. ஆனால், ஜாகிர் நாயக் மலேசியாவில் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார். அவரை அங்கிருந்து வெளியேற்றும்படி இந்திய வெளியுறவுத்துறை சார்பில் மலேசிய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.


இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள மலேசிய பிரதமர் மகாதீர் பின் முகமது, ஜாகிர் நாயக்குக்கு நிரந்தர குடியுரிமை அளிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார். அவரால் இங்கு எந்த பிரச்சனையும் உருவாகும் வரை நாங்கள் அவரை வெளியேற்ற மாட்டோம் என தெரிவித்துள்ளார்.