7PC HIKE: மத்திய அரசு ஊழியர்களுக்கு நவராத்திரியில் நல்ல செய்தி கிடைக்கும்

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு செப்டம்பர் இறுதியில் அடிக்கப் போகுது ஜாக்பாட்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 17, 2022, 06:23 PM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பரில் அகவிலைப்படி உயர்வு
  • நவராத்திரியில் நல்ல செய்தி கிடைக்கும்
  • ஓய்வூதியதாரர்களுக்கும் பணியாளர்களுக்கும் பணபலன்கள் அதிகரிக்கும்
7PC HIKE: மத்திய அரசு ஊழியர்களுக்கு நவராத்திரியில் நல்ல செய்தி கிடைக்கும் title=

7வது ஊதியக்கமிஷன் டிஏ உயர்வு சமீபத்திய செய்திகள்:மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி உயர்வுக்கான அனுமானங்கள் இப்போது கிட்டத்தட்ட தெளிவாகிவிட்டது. இதில், மேலும் ஒரு நடவடிக்கை கூடுதலாக எடுக்கப்பட்டுள்ளது. டிஏவுக்கான பரிந்துரை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளது. டிஏ மற்றும் டிஏ உயர்வு தொடர்பான கோப்புகள் மத்திய அமைச்சரவைக்கு வந்துள்ளதாக ஜீ மீடியா, தனது  ஆதாரங்கள் மூலம் உறுதி செய்துள்ளது. இதன் அடிப்படையில், செப்டம்பர் மாத கடைசி வாரத்தில் அகவிலைப்படி உயர்வுக்கு அரசு ஒப்புதல் வழங்கும் என்றும், டிஏ குறித்த அறிவிப்பு வரும் என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டிஏ உயர்வு 4 சதவீதம் அதிகரிக்கப்படும். தற்போது டிஏ உயர்வு 34 சதவீதமாக உள்ளது. உயர்வுக்குப் பிறகு இது 38 சதவீதமாக இருக்கும்.

இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக டிஏ உயர்வு?

மத்திய அரசு ஆண்டுக்கு இருமுறை - ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வை அறிவிக்கிறது. ஜனவரி மற்றும் ஜூலை என ஆண்டுக்கு இருமுறை இந்த உயர்வு அமல்படுத்தப்படும்.  ஜனவரி 2022 இல், 31 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, அப்போது  34 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ஏஐசிபிஐ  என்ற அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீடு தரவுகளின் அடிப்படையில் இந்த உயர்வு செய்யப்படுவது வழக்கம். 

மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ உயர்வுக்கு முன்னர் ஊழியர்களுக்கு அரசு கொடுத்த நல்ல செய்தி 

52 லட்சம் ஊழியர்கள் மற்றும் 63 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு பயன்

ஜூலை-டிசம்பர் 2022 காலக்கட்டத்திற்கான அகவிலைப்படி உயர்வால் 52 லட்சம் ஊழியர்கள் மற்றும் 63 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். 7வது சம்பள கமிஷனில் (7வது CPC) குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18000 என்பதன் அடிப்படையில் கணக்கீடு செய்தால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும் என்று தெரிந்துக் கொள்ளலாம்.

குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு

1. ஊழியரின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் - மாதம் ரூ 18,000
2. தற்போதைய DA (34%) - மாதம் ரூ 6120
3. புதிய DA (38%) - மாதம் ரூ 6840
4. புதிய DA உடன் தொகை அதிகரிக்கப்பட்டது - மாதம் ரூ 6840- 6120 = 720
5. ஆண்டு சம்பள உயர்வு - 720X12= ரூ 8640

அடிப்படை அதிகபட்ச சம்பளத்தின் கணக்கீடு

1. ஊழியரின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் - மாதம் ரூ 56900
2. தற்போதைய DA (34%) - ரூ 19346
3. புதிய டிஏ (38%) - ரூ 21622
4. புதிய DA உடன் அதிகரித்த தொகை - மாதத்திற்கு ரூ 21622-19346 = 2276
5. ஆண்டு சம்பள உயர்வு - 2276 X12= ரூ 27,312

செப்டம்பரில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயரும் என்பது அனைவரும் அறிந்ததே. அதாவது, ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு பரிசாக கிடைக்கப் போகிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு காத்திருக்கும் நவராத்திரி பரிசு, டிஎ ஹைக் அப்டேட் இதோ!! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News