அரசு ஊழியர்களுக்கான 38% அகவிலைப்படி உயர்வு குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

7வது ஊதியக் குழுவின் படி, தற்போது கேபினெட் செக்ரட்ரி லெவலில் இருப்பவர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.56,900 ஆகும்.   

Written by - RK Spark | Last Updated : Sep 12, 2022, 11:43 AM IST
  • 34% இருந்த அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38% ஆக உயர போகிறது.
  • செப்டம்பர் 28 அன்று அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆக உள்ளது.
அரசு ஊழியர்களுக்கான 38% அகவிலைப்படி உயர்வு குறித்த லேட்டஸ்ட் அப்டேட்! title=

மத்திய அரசின் லட்சக்கணக்கான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அனைவரும் அகவிலைப்படி உயர்வு குறித்து காத்து கொண்டிருந்த நிலையில் மத்திய அமைச்சரவையில் நடைபெற்ற கூட்டத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்துவது குறித்து ஒப்புதல் அளித்திருக்கிறது.  அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த திட்டமிட்டுள்ளது, இதன்மூலம் இதுவரை 34% இருந்த அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38% ஆக உயர போகிறது.  அமைச்சரவையில் அகவிலைப்படி உயர்வுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தாலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பினை நவராத்திரியின் மூன்றாம் நாளில் அதாவது செப்டம்பர் 28 அன்று வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மத்திய அரசின் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியானது, அதன் ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத சம்பளத்துடன் கிடைக்கப்பெறும் என்று கூறப்படுகிறது.  38% அகவிலைப்படி உயர்வுடன் ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத சம்பளம் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் நிலுவையில் இருந்த அகவிலைப்படியும் அவர்களுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.  இதன்மூலம் கிடைக்கப்போகும் பெரும் தொகையால் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | UPI விதிகளில் மாற்றம்? ஒருநாளில் எவ்வளவு தொகை டிரான்ஸாக்ஷன் செய்யலாம்?

7வது ஊதியக் குழுவின் படி, தற்போது கேபினெட் செக்ரட்ரி லெவலில் இருப்பவர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.56,900 மற்றும் மற்றவர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000.  அதுவே 38% அகவிலைப்படி உயர்வுப்படி, அடிப்படை சம்பளமான ரூ.56,900-ல் ஆண்டு டிஏ மொத்தம் ரூ.27,312 அதிகரிக்கும், ரூ.18,000 அடிப்படை சம்பளத்தில், ஆண்டு டிஏ ரூ.6,840 அதிகரிக்கும்.  AICPI-IW வெளியிட்ட நடப்பு நிதியாண்டில் டேட்டாக்களின்படி, குறியீட்டு எண் 0.2 புள்ளிகள் அதிகரித்துள்ளது.  இதன் அடிப்படியில் தற்போது மத்திய 4% அகவிலைப்படியை உயர்த்த திட்டமிட்டுள்ளது.

மேலும் படிக்க | ஐரோப்பிய நாடுகளில் வேலை தேடுவோருக்கு GOOD News! 7 EU நாடுகளின் முக்கிய அறிவிப்புகள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News