மக்களே உஷார்! இனி SBI ATM-ல் பணம் எடுத்தால் ரூ.173 கட்டணம்?

எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம்-லிருந்து ஒரு மாதத்தில் நான்கு தடவைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.173 வசூலிக்கப்படும் என்ற போலியான செய்திகள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Aug 23, 2022, 06:23 AM IST
  • எஸ்பிஐ ஏடிஎம் தொடர்பாக போலியான செய்தி வந்துள்ளது.
  • ஏடிஎம்-ல் பணம் எடுத்தால் ரூ.173 கட்டணம் என்று பரப்பப்பட்டுள்ளது.
  • இது போலியான செய்தி என்பது தற்போது தெரியவந்துள்ளது.
மக்களே உஷார்! இனி SBI ATM-ல் பணம் எடுத்தால் ரூ.173 கட்டணம்? title=

வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் தற்போது ஏடிஎம்-ஐ பயன்படுத்த தொடங்கிவிட்டனர், நகரத்தின் எந்த மூலையிலும் பணம் தேவைப்படும்போது  ஏடிஎம்-ல் எடுத்துக்கொள்ளலாம்.  ஏடிஎம்-ல் பணம் எடுப்பதன் மூலம் வங்கிக்கு சென்று நீண்ட நேரம் காத்திருந்து பணம் எடுக்க வேண்டிய தேவையில்லை, நேரமும் மிச்சமாகும்.  இதனாலேயே பலரும்  ஏடிஎம் சென்று பணம் பெறுகின்றனர், மேலும் ஏடிஎம்-களில் பணம் எடுக்கவும் முடியும், பணம் போடவும் முடியும்.  ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையத்தில் நான்கு தடவைக்கு மேல் பணம் எடுத்தால் அவர்களுக்கு ரூ.173 கட்டணம் வசூலிக்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் சில தகவல்கள் பரவி வந்தது, தற்போது இந்த தகவல் போலியானது என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய அந்த செய்தியில், ஒருவரது சேவிங்ஸ் அக்கவுண்டில் ஒரு வருடத்தில் நாற்பது தடவைக்கு மேல் டிரான்ஸாக்ஷன் செய்யப்பட்டால் அவர்களது டெபாசிட் தொகையிலிருந்து ரூ.57.5 கழிக்கப்படும் என்றும், எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம்-லிருந்தது ஒரு மாதத்தில் நான்கு தடவைக்கு பணம் எடுக்கும் நபர்களின் கணக்கிலுள்ள பணத்தில் ரூ.173 கழிக்கப்படும் என்றும் அந்த போலியான செய்தியில் கூறப்பட்டு இருக்கிறது.  இது போலியான செய்தி என்பது பிஐபி பேக்ட் செக் மூலம் கண்டறியப்பட்டு இருக்கிறது, மேலும் ட்ரான்ஸாக்ஷன் மற்றும் ஏடிஎம் விதிகள் குறித்து இதுவரை ஸ்டேட் வங்கி எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | SCSS: மூத்த குடிமக்களுக்கான அட்டகாச முதலீட்டுத்திட்டம், சூப்பரான வருமானம்!!

மேலும் எஸ்பிஐ விதிகள் குறித்து பரப்பப்பட்ட போலியான செய்தியில் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் மையத்தில் ஒரு மாதத்தில் நான்கு தடவைக்கு மேல் ஒருவர் அவரது கணக்கிலிருந்து பணம் எடுக்கும்போது அவருக்கு வரியாக ரூ.150 மற்றும் சேவைக்கட்டணமாக ரூ.23 என மொத்தமாக ரூ.173 வசூலிக்கப்படும் என்று செய்திகள் வெளியானது.  தற்போது இவை அனைத்துமே போலியான செய்தி என்றும், இதுபோன்ற தகவல்களை மக்கள் நம்பவேண்டாம் என்றும் பிஐபி உண்மையை கண்டறிந்து கூறியுள்ளது.  ரிசர்வ் வங்கி கூறியுள்ளபடி, ஒரு மாதத்தில் ஒருவர்  ஏடிஎம்-ல் 5 தடவை இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம் அதற்கு மேல் எடுக்கும்பட்சத்தில் ரூ.21 மட்டுமே வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளது.

மேலும் படிக்க | LIC Housing Finance: வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை அதிகரிக்கிறது LIC

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News