நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 20 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : May 16, 2022, 11:36 AM IST
  • நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலவகாசம் நீட்டிப்பு
  • மே 20 ஆம் தேதி வரை தேர்வர்கள் விண்ணபிக்கலாம்
  • நள்ளிரவு 11.50 மணிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும்
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு title=

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 17 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு  neet.nta.nic.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது. மே 15 ஆம் தேதியான நேற்றுடன் காலவகாசம் முடிவடைய இருந்த நிலையில், இந்த கால அவகாசம் நீடிக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 

மேலும் படிக்க| அஞ்சல் துறையில் 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

இதனை ஏற்றுக் கொண்ட தேசிய தேர்வு முகமை மே 20 ஆம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. மே 29 இரவு 9 மணி வரை மட்டுமே விண்ணபங்களை சமர்பிக்க முடியும். இரவு 11.50 மணிக்குள் தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என புதிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை மட்டும் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த ஆண்டு வரை, நீட் தேர்வில் கலந்துகொள்வதற்கான அதிகபட்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 25,  இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 30 ஆகவும் இருந்தது. ஆனால் இந்த வயது வரம்பு தற்போது வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளதால், மருத்துவ நுழைவு தேர்வுக்கு விண்ணபிப்பவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு கூடியுள்ளது.   தேபோல, தேர்வுமுறையில், சாய்ஸ் வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக, ஒவ்வொரு பிரிவிலும் 45 கேள்விகள் இருக்கும். அதற்கு பதிலாக இந்த ஆண்டு தேர்வில், விலங்கியல், தாவரவியல், வேதியியல், இயற்பியல் பாடங்களில் இருந்து 50 கேள்விகள் கேட்கப்படும். அதில் 45 கேள்விகளுக்கு பதிலளித்தால் போதும். 

அதேபோல, தேர்வுக்கான நேரம் 20 நிமிடங்கள் கூடுதலாக்கப்பட்டுள்ளது. கேள்விகளின் எண்ணிக்கை 180 என்ற பழைய அளவிலேயே இருந்தாலும், இந்த முறை கூடுதலாக 20 நிமிடங்கள் வழங்கப்பட்டு, 3 மணி நேரம் 20 நிமிடங்களில் தேர்வர்கள் தங்கள் பதிலை எழுத அனுமதிக்கப்படுவார்கள். ஆங்கிலம் தவிர, தமிழ், இந்தி, மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், தெலுங்கு மற்றும் உருது என பிராந்திய மொழிகளிலும் தேர்வர்கள் பதிலளிக்கலாம்.

மேலும் படிக்க | டிகிரி முடித்தவர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

இந்த ஆண்டு நடைபெறும் நீட் தேர்வு நாடு முழுவதும் உள்ள 543 நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் நடைபெறும். இந்தியாவிற்கு வெளியே 14 தேர்வு மையங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News