Health benefits of Corn: தினசரி உணவில் சோளத்தை சேர்த்தால் நோயே நெருங்காது

அதிக நார்ச்சத்துக் கொண்ட தானியம் சோளம், நமது உடலின் தினசரி நார்ச்சத்து தேவையை முழுமையாக பூர்த்தியாக்கும் திறம் கொண்டது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 24, 2021, 02:46 PM IST
  • ஊட்டச்சத்துக்களின் உறைவிடம் சோளம்
  • தினசரி உணவில் சோளத்தை சேர்த்தால் நோயோ நெருங்காது
  • சோளத்தை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது
Health benefits of Corn: தினசரி உணவில் சோளத்தை சேர்த்தால் நோயே நெருங்காது title=

புதுடெல்லி: சோளம், இது அடிக்கடி கேட்கும் பெயராக இருக்கலாம், மலிவு விலைக்கு கிடைக்கலாம். ஆனால் இதன் நன்மைகளும், நமக்கு கொடுக்கும் சத்துக்களும் பட்டியலுக்குள் அடங்காதவை. வட அமெரிக்காவை சேர்ந்த சோளம், தனது அற்புத நன்மைகளின் காரணமாக உலகெங்கிலும் பரந்துவிட்டது.

அதிக நார்ச்சத்துக் கொண்ட தானியம் சோளம், நமது உடலின் தினசரி நார்ச்சத்து தேவையை முழுமையாக பூர்த்தியாக்கும் திறம் கொண்டது. சோளத்தை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல் என்ற சிக்கல் ஒருபோதும் ஏற்படாது.

சோளத்தை பச்சையாகவும் சாப்பிடலாம், வேக வைத்தும் சாப்பிடலாம். இதில் இருக்கும் நார்ச்சத்து, குடல், வயிறு புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. வயிற்றில் செரிமான அமிலங்கள் சுரப்பை சரி செய்து, உண்ணும் உணவுகள் நன்றாக செரிமாணம் ஆக உதவுகிறது.

Also Read | Health: உணவில் அதிக உப்பு சேர்வதை தெரிந்துக் கொள்ள எளிய வழி! 

சோளத்தில், தயாமின், நியாசின் மற்றும் வைட்டமின் பி சத்துக்கள் அதிகமிருக்கின்றன.  உடலில் நரம்பு மண்டலங்கள் சீராக இயங்க உதவும் தயாமின் சத்து. வயிற்றுப் போக்கு, ஞாபக மறதி மற்றும் தோல் சம்பந்தமான வியாதிகளை தூர விரட்டுகிறது நியாசின் சத்து. 

மனிதர்களின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாத போலிக் அமிலம் சோளத்தில் அபரிதமாக உள்ளது. 100 கிராம் சோளத்தில் 365 கலோரிச் சத்துக்கள் இருக்கின்றது. எனவே, உடல் எடைக்கு குறைவாக இருப்பவர்கள் சோளத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் எடை கூடும். சோளத்தில் பாஸ்பரஸ், மக்னீசியம், மாங்கனீஸ், துத்தநாகம், இரும்புச்சத்து, காப்பர் சத்து, செலினியம் என பல தாதுக்கள் அடங்கியுள்ளது.

பாஸ்பரஸ் சத்து உடலின் எலும்புகளின் வளர்ச்சி மற்றும் சிறுநீரகங்களின் சீரான செயல்பாட்டிற்கு உதவுகிறது. மக்னீசியம் சத்து இதயத்தின் துடிப்பை உறுதி செய்வதோடு, எலும்புகளின் அடர்த்தி மற்றும் உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது. 

Also Read | Easy Weight Loss: உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி தேவையில்லை தெரியுமா?

சோள எண்ணெயை பயன்படுத்தி சமைத்தால், இதய நலம் மேம்படும். இதில் இருக்கும் ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொலஸ்ட்ரால் சத்துக்களை குறைத்து, ரத்த நாளங்கள், நரம்புகள் மற்றும் இதயத்திற்கு செல்லக்கூடிய நரம்புகளில் கொழுப்புகள் படிந்து விடாமல் தடுத்து, சீரான ரத்த ஓட்டம் செல்வதை உறுதி செய்து இதய பாதிப்புகள் ஏற்படாமல் காக்கிறது. 

உடலில் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தி அதிகரிக்க சோளம் உதவுகிறது. சோளத்தில் உள்ள பீட்டா கரோட்டின் சத்து கண் பார்வைத்திறன் தெளிவாகவும் கூர்மையாகவும் இருப்பதற்கு மிகவும் உதவுகிறது. நீரிழிவு பிரச்சனைக்கும் அருமருந்தாகிறது சோளம்.  

Also Read | Benefits of Neem: நோய் எதிர்ப்பு சக்தியின் பிறப்பிடம் வேப்பிலையின் இனிக்கும் ஆரோக்கியம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News