பிரிட்ஜில் வைக்கப்பட்ட இறைச்சி சாப்பிடலாமா? அதனால் ஏற்படும் அபாயம் என்ன?

Frozen Meat Side Effects: குளிர்சாதன பெட்டியில் அதிக நாட்களுக்கு உணவு பொருட்களை வைத்து பயன்படுத்தலாமா? எத்தனை நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் உணவுகளை வைக்கலாம்? அது உடலுக்கு ஆரோக்கியமானதா? தெரிந்துக்கொள்ளுங்கள். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 24, 2021, 04:43 PM IST
  • இன்றைய சூழலில் அனைவருக்கும் குளிர்சாதன பெட்டி மிகவும் தேவைப்படும்.
  • குளிர்சாதன பெட்டியில் வைப்பதால் அதன் சுவை குறையும்.
  • குளிர்சாதன பெட்டியில் வைக்கும் உணவு சூடாக இருக்கக்கூடாது.
பிரிட்ஜில் வைக்கப்பட்ட இறைச்சி சாப்பிடலாமா? அதனால் ஏற்படும் அபாயம் என்ன? title=

Frozen Meat Side Effects: மிகவும் வேகமாக இயங்கிக்கொண்டு இருக்கும் இந்த உலகில் இன்றைய சூழலில் அனைவருக்கும் குளிர்சாதன பெட்டி மிகவும் தேவைப்படும் ஒரு பொருளாக மாறியுள்ளது. அதற்கு முக்கியக் காரணம் அடிக்கடி வெளியில் சென்று பொருட்களை வாங்கி வர வேண்டிய அவசியமில்லை. ஒரே நேரத்தில் தேவையான பொருட்களை வாங்கி வந்து குளிர்சாதன பெட்டியில் சேகரித்து வைத்துவிட்டால் சில நாட்களுக்கு அதை பயன்படுத்தலாம். 

ஆனால் குளிர்சாதன பெட்டியில் அதிக நாட்களுக்கு உணவு பொருட்களை வைத்துக்கொண்டு பயன்படுத்தலாமா? எத்தனை நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் உணவுகளை வைக்கலாம்? குளிர்சாதன பெட்டியில் இருக்கும் குளிரூட்டப்பட்ட உணவு உடலுக்கு ஆரோக்கியமானதா? அதுவும் குறிப்பாக குளிர்சாதன பெட்டியில் இருக்கும் இறைச்சியை சாப்பிடலாமா? நீண்ட நாள் குளிர்சாதன பெட்டியில் இறைச்சியை வைத்திருப்பது மூலம் ஏற்படும் தீமைகள் (Meat Side Effects) பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள். 

குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டுள்ள இறைச்சியை சாப்பிடுவதன் மூலம் சில உடல் உபாதைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. நீண்ட நாட்கள் ஃபிரிட்ஜில் (Deep Freezer) வைத்திருக்கும் இறைச்சியில் பாக்டீரியா உருவாகிவிடும். அதை சாப்பிடுவதன் மூலம் இரைப்பையில் நோய் உங்களை தாக்கலாம்.

ALSO READ | பரோட்டா பிரியர்களுக்கு ஒரு பகீர் தகவல்! மைதா எலும்புகளை பலவீனமாக்கும்; எச்சரிக்கை!

குளிர்சாதன பெட்டியின் மிகக் குறைந்த மற்றும் குளிரான பகுதியில் இறைச்சியை வைக்கவும். மேலும் ஃபிரிட்ஜில் இருக்கும் மற்ற உணவுப் பொருட்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். சமைத்த இறைச்சி மற்றும் சமைக்காத இறைச்சி இரண்டையும் தனித்தனியாக வைக்க வேண்டும். அதே நேரத்தில், ஃபிரிட்ஜில் இருந்து எடுத்து சமைத்த பிறகு, அதை அடுத்த 24 மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும்.

இறைச்சியை நீண்ட நாட்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்திருப்பதால், அதை சாப்பிட்ட பிறகு உணவு விஷமாக மாறக்கூடிய அபாயம் அதிகம். இது தவிர, பல நாட்கள் இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் வைப்பதால் அதன் சுவை மற்றும் புரத சத்துக்கள் குறையும்.

சமைக்காத இறைச்சியை (Raw meat) ஒருபோதும் ஒரு நாளை அல்லது இரண்டு நாளைக்கு மேல் குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது. ஆனால் சமைத்த இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம். ஆனால் அது சூடாக இருக்கக்கூடாது. அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் வைக்கக்கூடாது. 

ALSO READ | விந்தணு குறையாமல் இருக்க இந்த ‘5’ உணவுகளை ஆண்கள் தவிர்க்க வேண்டும்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News