இந்த வைட்டமின் குறைப்பாடால் முடி வெள்ளையாக மாறுமாம்

சிறு வயதிலேயே முடி வெள்ளையாக மாற ஆரம்பித்தால், அதற்கான காரணத்தை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 20, 2022, 12:21 PM IST
  • வைட்டமின் சி இந்த பொருட்களில் உள்ளது
  • வெள்ளை முடியை மீண்டும் கருப்பாக்க வீட்டு வைத்தியம்
  • சிறு வயதிலேயே வெள்ளை முடி பிரச்சனை
இந்த வைட்டமின் குறைப்பாடால் முடி வெள்ளையாக மாறுமாம் title=

இன்றைய காலக்கட்டத்தில், சிறு வயதிலேயே வெள்ளை முடி பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். சிறு வயதிலேயே வெள்ளை முடி ஏற்பட்டால் பலர் டென்ஷன், மன அழுத்தம், சங்கடம், தன்னம்பிக்கை குறைதல் போன்றவற்றுக்கு ஆளாகின்றனர். 25 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களும் இந்த பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே உங்கள் நரை முடியை கருமையாக்குவதற்கு சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன, அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்வோம்.

சிறு வயதிலேயே வெள்ளை முடி
முடியை கருமையாக்க விலையுயர்ந்த பொருட்கள் தேவையில்லை, இயற்கையான முறையில் வெள்ளை முடியை மீண்டும் கருமையாக்கலாம். பொதுவாக நரைமுடி வருவதற்கு மருத்துவரீதியாக முன்மையான காரணம் என்னவென்றால், முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைவாக இருப்பது தான். இந்த மெலனினானது வயதாக ஆகத் தான் குறைய ஆரம்பிக்கும். ஆனால் தற்போது இந்த மெலனின் சிறு வயதினருக்கே குறைய ஆரம்பித்து நரைமுடியை ஏற்படுத்திவிடுகிறது.

மேலும் படிக்க | வாழைப்பழத்தின் உதவியுடன் முடிக்கு கெரட்டின் கிரீம் தயாரிக்கலாம்

வறண்ட முடியை எவ்வாறு சரி செய்வது
இளமையில் முடி நரைப்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் இருந்தாலும், வைட்டமின் சி சத்து குறைவாக இருந்தால் இந்தப் பிரச்சனை வரலாம். இந்த ஊட்டச்சத்து அஸ்கார்பிக் அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது, இது முடி உலர்த்துவதைத் தடுப்பது மட்டுமல்லாமல், வறண்ட முடி பிரச்சனையையும் நீக்குகிறது.

வைட்டமின் சி குறைபாட்டை எப்படி சரி செய்வது
வைட்டமின் சி முடி நரைப்பதைத் தடுக்கும் கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. இது தவிர, முடி வலுவடைவதோடு, அதன் வறட்சியும் நீங்கும். இதனால்தான் முடி வளர்ச்சிக்கு வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உண்ணுமாறு சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். வைட்டமின் சி பல வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படுகிறது. இந்த சத்துக்களை தினமும் சுமார் 4 கிராம் எடுத்துக்கொண்டால், தலையில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும். 

வைட்டமின் சி இந்த பொருட்களில் உள்ளது
வைட்டமின் சி பெற, நீங்கள் ஆரஞ்சு, திராட்சைப்பழம், கொய்யா, நவாப்பழம் மற்றும் பப்பாளி போன்ற பழங்களை உட்கொள்ள வேண்டும். காய்கறிகளைப் பற்றி பேசுகையில், முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி, கீரை மற்றும் தக்காளி சாப்பிடுவது நிறைய நன்மைகளைத் தரும். 

வெள்ளை முடியை மீண்டும் கருப்பாக்க வீட்டு வைத்தியம்

1. வெந்தயத்தை இரவில் தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் ஊற வைத்து, மறுநாள் காலையில் பேஸ்ட் செய்து, தலையில் தடவி, வந்தால், முடியின் வெண்மை மறையும்.

2. உங்கள் தலைமுடியை மீண்டும் கருமையாக்க விரும்பினால், 2 ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆற வைக்கவும். இப்போது இந்த தண்ணீரில் தலைமுடியைக் கழுவவும்.

3. முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வெந்தயம் அதிகம் பயன்படுகிறது, இதனுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டால், விரைவில் வெள்ளை முடி பிரச்சனை நீங்கும். இது தவிர, வெந்தயம் முடி உதிர்வதைத் தடுப்பதிலும் மிகவும் பயன் அளிக்கிறது.

4. வெந்தயத்தை அரைத்து பொடியை தயார் செய்து, அதில் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் செய்யவும். இப்போது இந்த பேஸ்ட்டை முடியின் வேர்களில் தடவவும். இதனால் இளமையிலேயே வரும் வெள்ளை முடி பிரச்சனை நீங்கும்.

5. தேங்காய் எண்ணெய் சருமத்திற்கும் கூந்தலுக்கும் நன்மை பயக்கும் என்பது நாம் அறிந்ததே, இதனுடன் வெந்தயத்தை அரைத்து தலையில் தடவி வந்தால், முடி வெள்ளையாக மாறுவது மட்டுமல்லாமல், முடி உதிர்தல் மற்றும் பொடுகும் தொல்லை நீங்கும்.

(பொறூப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News