சூரிய அஸ்தமனத்திற்கு பின் பழங்களை சாப்பிடக் கூடாதா; நிபுணர்கள் கூறுவது என்ன..!!

பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்றாலும், சில நேரத்தில் பழங்களை சாப்பிடுவது நன்மைகளுக்கு பதிலாக ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 7, 2021, 02:49 PM IST
  • பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
  • இருப்பினும், சில நேரத்தில் பழங்களை சாப்பிடுவது நன்மைகளுக்கு பதிலாக ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
சூரிய அஸ்தமனத்திற்கு பின் பழங்களை சாப்பிடக் கூடாதா; நிபுணர்கள் கூறுவது என்ன..!!  title=

பழங்கள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆரோக்கியமான மனிதனுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் பழங்களில் உள்ளன. ஆனால் பழங்கள் சாப்பிட சரியான நேரம் எது தெரியுமா? பலருக்கு மாலை அல்லது இரவு உணவிற்கு பிறகு பழங்களை சாப்பிடும் வழக்கம் உள்ளது. இந்த நேரத்தில் பழங்களை சாப்பிடுவது நன்மைகளுக்கு பதிலாக உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். சூரிய அஸ்தமனத்திற்கு பழங்களை ஏன் பழங்களை உட்கொள்ளக்கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.

பழங்களை எப்போதும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதனால் அது எளிதில் ஜீரணமாகும். பழங்களை சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் வேறு ஏதேனும் உணவை எடுத்துக் கொள்வதை எப்போதும் தவிர்க்கவும். உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் அல்லது உணவை சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பழங்களை உட்கொள்ளுங்கள், இல்லையெனில் உங்களுக்கு செரிமானம், அமிலத்தன்மை தொடர்பான பல பிரச்சனைகள் ஏற்படலாம்.

ALSO READ | Health Tips: பூண்டை அதிகம் சாப்பிட்டால் ஏற்படும் ஆபத்தான பக்க விளைவுகள்..!!!

காலையில் பழங்களை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கும் உடலுக்கும் மிகவும் நன்மை பயக்கும். ஆனால் காலையில் வெறும் வயிற்றில் சாபிடக் கூடாத சில பழங்கள் உள்ளன. சிட்ரிக் அதாவது சிட்ரஸ் பழங்களை வெறும் வயிற்றில் உட்கொள்வது அமிலத்தன்மையை அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ALSO READ | விந்தணு குறையாமல் இருக்க இந்த ‘5’ உணவுகளை ஆண்கள் தவிர்க்க வேண்டும்..!

உடலின் வளர்சிதை மாற்றம், அதாவது மெடாபாலிஸம் குறைவதால் பழங்களை மாலையில் சாப்பிடக்கூடாது என நிபுணர்கள் கூறுகின்றனர். பழங்கள் சாப்பிடுவது, உங்களுக்கு உடனடி சக்தியைத் தருகின்றன. ஏனெனில் அவற்றில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரை உள்ளது. மேலும் உடலின் வளர்சிதை மாற்றம் குறையும் போது  கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு நல்லதல்ல.

ALSO READ | Migraine: ஒற்றை தலைவலியை உடனே விரட்டும் ‘5’ சூப்பர் உணவுகள்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News