Home Remedies For White Discharge: வெள்ளைபடுகிறதா? கவலை வேண்டாம், சுலபமான தீர்வு

பெண்களுக்கு வெள்ளை படுதல் என்பது மிகவும் கவலை ஏற்படுத்தக்கூடியது. பெண்கள் பிறப்புறுப்பு எப்போதும் ஈரப்பசையோடு வழவழப்பாக இருக்க வேண்டும் அதற்காகத்தான் இந்த பிசுபிசுப்பான வெள்ளை திரவம் சுரக்கிறது. அது அதிகமாக சுரந்து வெளியேறுவது பிரச்சனையின் அறிகுறி 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 1, 2021, 03:33 PM IST
  • வெள்ளைபடும் பிரச்சனை அதிகமா உள்ளதா?
  • எளிய, சுலபான தீர்வு
  • வீட்டிலேயே சுலபமாக செய்துக் கொள்ளலாம்
Home Remedies For White Discharge: வெள்ளைபடுகிறதா? கவலை வேண்டாம், சுலபமான தீர்வு title=

பெண்களுக்கு வெள்ளை படுதல் என்பது மிகவும் கவலை ஏற்படுத்தக்கூடியது. வெள்ளைப்படுவதால், உடலில் உள்ள சத்துக்கள் அனைத்தும் கரைந்துவிடும் என்ற நம்பிக்கையும் பலரிடம் உண்டு. மருத்துவரிடம் செல்வதற்கு கூச்சப்பட்டுக் கொண்டு பெண்கள் இதைப் பற்றி வெளியில் பேசாமல் இருந்துவிடுவார்கள். ஆனால், நிலைமை மிகவும் மோசமான பிறகு மருத்துவரிடம் செல்வதால் பிரச்சனை சரியாக பல நாட்கள் எடுக்கும்.

பெண்கள் பூப்படையும் போது உடலில் ஏற்படும் ஹார்மோன்களின் மாறுதலால், பெண்ணின் பிறப்புறுப்புப் பகுதியில் உண்டாகும் அடர்ந்த திரவம் உருவாகிறது. அதுவே வெள்ளைப்படுதல் என்றழைக்கப்படுகிறது. பெண்கள் பிறப்புறுப்பு எப்போதும் ஈரப்பசையோடு வழவழப்பாக இருக்க வேண்டும் அதற்காகத்தான் இந்த பிசுபிசுப்பான வெள்ளை திரவம் சுரக்கிறது. ஆனால் அது அதிகமாக சுரந்து வெளியேறுவது பிரச்சனையின் அறிகுறி என்பதை புரிந்துக் கொள்ளவேண்டும்.

வெள்ளை படுவது மாதம் முழுவதும் தொடர்கிறது என்றால், அதாவது மாதவிடாய் சமயத்தைத் தவிர வேறு சமயங்களில் எல்லாம் வெள்ளை படுவது தொடர்ந்தால் அது பெண்களுக்கு மிகவும் கவலையைத் தரும். மிகவும் சுலபமான இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சித்துப் பாருங்கள். வெள்ளை நீர் வெளியேறுவது குறைந்துவிடும்.

Read Also | Weight Loss: எடை இழப்பு மாத்திரைகள் பலன் தருமா? பக்க விளைவுகள் ஏற்படுத்துமா?

பெண்களுக்கு வெள்ளை படுவது என்பது மிகவும் பொதுவான பிரச்சனை. பெண்களின் பிறப்புறுப்பில் இருந்து வரும் வெள்ளை நீர் வெளியேறுவது சகஜம் தான். கருவுற்றிருக்கும் பெண்களுக்குக் கூட சில சமயம் வெள்ளைபடும். வெள்ளைபடுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

யோனியில் (vagina) இருந்து வெள்ளை நீர் ஏன் வருகிறது? கேண்டிடா அல்பிகான்ஸ் (candida albicans), என்பது பிறப்புறுப்பில் வாழும் ஒரு பூஞ்சை. ஆனால் அது வளரத் தொடங்கும் போது, அது வெண்ணிறத்தில் வெளியேறும். அப்போது எரிச்சல், வலி, வீக்கம் மற்றும் அரிப்பு என பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

ஏதாவது ஒரு காலகட்டத்தில் எல்லா பெண்களுமே குறைந்த அளவிலோ அல்லது அதிகமாகவோ வெள்ளைப்படும் பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. பெண்களின் பிறப்புறுப்பில் இருந்து வெள்ளை நீர் வெளியேறும் பிரச்சனை ஏற்பட்டால், அவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

Also Read | Weight Management: உங்கள் உணவில் எவ்வளவு கலோரி இருக்கிறது தெரியுமா?

சில நேரங்களில் இது தீவிர நோய்கள் சிலவற்றின் அறிகுறியாகவும் இருக்கலாம். வீட்டு வைத்தியம் மூலமும் சரிசெய்யலாம். மிகவும் எளிதான, சுலபமான சில தீர்வுகள் உள்ளன. இந்த அனைத்து தீர்வுகளும் முயற்சி செய்யப்பட்டு, பல பெண்கள் பயனடைந்துள்ளனர்.  

யோனி அரிப்பு மற்றும் அதிகப்படியான வெள்ளை வெளியேற்றத்திற்கான முக்கிய காரணங்கள் மற்றும் சிகிச்சை

இயல்பை விட அதிகமாக பிறப்புறுப்பில் இருந்து வெள்ளை நீர் கசிந்துக் கொண்டிருந்தால், இந்த வீட்டு வைத்தியத்தைப் பின்பற்றவும்

நெல்லிக்காய்: பல நோய்களிலிருந்து பாதுகாக்கும் ஒரு சூப்பர் காய் நெல்லிக்காய். பல நோய்களுக்கான தீர்வு அதில் பொதிந்துள்ளது. வைட்டமின் சி உட்பட பல ஊட்டச்சத்துக்களைக் கொண்ட நெல்லிக்கனி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பல நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

வெள்ளைபடுவதை குறைக்க நெல்லிக்காய் அருமருந்தாகும். மிகவும் நன்மை பயக்கும் நெல்லிக்காயை எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். பச்சையாக, தூள் வடிவில், சர்க்கரை நீரில் ஊறவைத்து மொரப்பாவாக அல்லது ஊறுகாயாக, சாப்பிடலாம்.

Also Read | நடுத்தர வயதினரிடையே அதிகரிக்கும் “Stress Fracture”; அதிக உடற்பயிற்சி காரணமா..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News