இடுப்பில் வலி ஏற்படுகிறதா? ஜாக்கிரதை கொலஸ்ட்ராலாக இருக்கலாம்!

அதிக கொலஸ்ட்ராலை குறைக்க கேக் மற்றும் பிஸ்கட், இறைச்சி துண்டுகள், கொழுப்பு இறைச்சி, பாமாயில், கிரீம், கடின சீஸ் மற்றும் வெண்ணெய் போன்ற உணவுபொருட்களை தவிர்க்க வேண்டும்.  

Written by - RK Spark | Last Updated : Nov 29, 2022, 06:08 AM IST
  • பெரும்பாலும் அதிகளவு கொலஸ்ட்ரால் எவ்வித அறிகுறிகளையும் வெளிப்படுத்துவதில்லை.
  • இந்த பிளேக்குகள் இரத்த ஓட்டத்தை தடை செய்கிறது.
  • ஏதேனும் வேலை செய்யும்போது கடுமையான வலி ஏற்படுகிறது.
இடுப்பில் வலி ஏற்படுகிறதா? ஜாக்கிரதை கொலஸ்ட்ராலாக இருக்கலாம்!  title=

உடலில் அதிகளவு கொலஸ்ட்ரால் இருந்தால் பல்வேறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், அதிகப்படியான கொலஸ்ட்ரால் ஒரு சைலன்ட் கில்லர் என்று அழைக்கப்படுகிறது.  கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பது ஆரம்பத்திலேயே கண்டறியப்பட வேண்டும், அதனை கட்டுப்படுத்தவில்லையென்றால் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படும்.  பெரும்பாலும் அதிகளவு கொலஸ்ட்ரால் எவ்வித அறிகுறிகளையும் வெளிப்படுத்துவதில்லை.  அதிகளவு கொழுப்புகள் இரத்த நாளங்களுக்குள் படிந்து பிளேக்குகளை உருவாக்குகிறது, இந்த பிளேக்குகள் இரத்த ஓட்டத்தை தடை செய்கிறது. இரத்த ஓட்டத்தில் உருவாகும் இந்த தடையின் காரணமாக தசைகளுக்கு  போதுமான அளவு ஆக்ஸிஜன் கிடைக்கப்பெறாது.  இதன் விளைவாக இடுப்பு பகுதிகளில் வலி ஆரம்பமாகிறது, நீங்கள் ஏதேனும் வேலை செய்யும்போது கடுமையான வலி ஏற்படுகிறது.  

மேலும் படிக்க | மலட்டுத்தன்மையையும் போக்கும் கொய்யா! இப்படி சாப்பிட்டால் கருதரிக்க உதவும்

முதலில் பாதிக்கப்படக்கூடிய தசைகளில் ஒன்று இடுப்பு தசைகள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், அதிக கொலஸ்ட்ரால் உள்ள பலருக்கும் இடுப்பு பகுதியில் பயங்கர வலியை உணர்கின்றனர்.  இடுப்பு பகுதியில் ஏற்படும் வலியை நாம் பெரும்பாலும் எலும்பு அமைப்பு அல்லது எலும்பில் உள்ள பிரச்சனைகளுடன் தொடர்புபடுத்துகிறோம், இடுப்பு வலியை நாம் ஒருபோதும் கொலஸ்ட்ராளுடன் தொடர்புபடுத்துவதில்லை. எந்தவித உடல் செயல்பாடுகளும் இல்லாதபோதும் உங்களுக்கு இடுப்பு பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டால் நீங்கள் உடனடியாக மருத்துவரிடம் சென்று அதற்கு தக்க பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.  வலியின் தீவிரம் மற்றும் பரவல், கொலஸ்ட்ரால் அளவு மற்றும் பிளேக் உருவாவதால் இரத்த ஓட்டம் தடைபடும் பகுதிகளைப் பொறுத்து ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாறுபடும்.  

குறிப்பாக பெண்களுக்கு சிறுவயதில் இருந்தே அடிக்கடி இடுப்பு வலி ஏற்படுவதால், அவர்கள் கொலஸ்ட்ராலை பற்றி கண்டுகொள்வதில்லை.  இடுப்பு வலி எப்போதும் வயதான அல்லது எலும்பு தொடர்பான நோய்களின் விளைவாகவே காணப்படுகிறது. பெண்கள் பல சந்தர்ப்பங்களில் சிறு வயதிலிருந்தே இடுப்பு வலியை அனுபவிக்கிறார்கள். அதிக கொலஸ்ட்ராலுடன் அதன் தொடர்பை அவர்கள் கவனிக்காமல் இருப்பதற்கு இதுவே காரணம்.  அதிக கொலஸ்ட்ராலை குறைக்க கேக் மற்றும் பிஸ்கட், இறைச்சி துண்டுகள், கொழுப்பு இறைச்சி, பாமாயில், கிரீம், கடின சீஸ் மற்றும் வெண்ணெய் போன்ற உணவுபொருட்களை தவிர்க்க வேண்டும்.

மேலும் படிக்க | பைல்ஸ் நோயை கட்டுப்படுத்தணுமா? ஓமத்தை இப்படி பயன்படுத்தி பாருங்க 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News