முதுகு வலி பிரச்சனையா? இயற்கையாகவே சரி செய்ய சில வழிகள்!

முதுகுவலியை சரிசெய்ய பல்வேறு இயற்கை வழிகள் உள்ளது, தேவையில்லாமல் மருந்துகளை உட்கொள்ளாமல் சில எளிய வைத்தியங்களை வீட்டிலேயே செய்துகொள்ளலாம்.  

Written by - RK Spark | Last Updated : Jul 21, 2022, 05:57 AM IST
  • செர்ரி ஜூஸ் தசை வலியைப் போக்க உதவும்.
  • இரவு நேரத்தில் நன்றாக தூங்குவது பல வியாதிகளையும் குணப்படுத்தும்.
  • யோகா மூலம் தசைகள் மற்றும் மூட்டுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
முதுகு வலி பிரச்சனையா? இயற்கையாகவே சரி செய்ய சில வழிகள்! title=

ஆன்டி-இன்ப்ளமேட்டரி நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது முதுகு வலிக்கு சிறந்ததாக பார்க்கப்படுகிறது, சில வகையான ஜூஸ்களை எடுத்துக்கொள்வதன் மூலம் முதுகு வலிக்கு தீர்வு காணலாம்.   மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், மூட்டுவலி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, மஞ்சளை ஒரு சிறிய அளவு (1/2 தேக்கரண்டி) வெதுவெதுப்பான பாலில் கலக்க வேண்டும்.  நீங்கள் இனிப்பு சுவை விரும்பினால் பாலில் தேன்  சேர்த்து படுக்கைக்கு இதனை குடிக்கலாம்.  செர்ரிகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்டி-இன்ப்ளமேட்டரி ஏஜெண்டுகள் நிறைந்துள்ளன, செர்ரி ஜூஸ் தசை வலியைப் போக்க உதவும்.  இது தற்போது கடைகளில் கிடைக்கிறது, தினமும் ஒரு கிளாஸ் செர்ரி ஜூஸ் குடித்துவர முதுகுவலி தீர்ந்துவிடும்.  அடுத்ததாக கிரீன் டீ 5 மற்றும் இஞ்சி இரண்டும் சிறந்த வலி-நிவாரணி, இவை இரண்டையும் சேர்த்து குடிப்பதும் முதுகு வலியை குணப்படுத்தும்.

மேலும் படிக்க | Anemia: இரத்த சோகையை சரி செய்ய உதவும் சூப்பர் உணவுகள், இன்றே சாப்பிடுங்கள்

இரவு நேரத்தில் நன்றாக தூங்குவது பல வியாதிகளையும் குணப்படுத்தும், குறிப்பாக நல்ல தூக்கம் முதுகு வலியை குணப்படுத்தும்.  வைட்டமின்கள் சி மற்றும் பி6 போன்ற உடலில் உள்ள இயற்கையான ஸ்டீராய்டுகள் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தி நல்ல தூக்கத்தை தருகிறது.  மெலடோனின் உங்கள் தூக்க சுழற்சியை மேம்படுத்த ஒரு துணைப் பொருளாக எடுத்துக் கொள்ளலாம்.  தேயிலை இலைகளில் காணப்படும் அமினோ அமிலம், சிலருக்கு நிம்மதியாக உணரவும், நல்ல தூக்கத்தைப் பெறவும் உதவும். அதிகமாக உட்காருவதைத் தவிர்த்து, நடப்பது, நிற்பது போன்று செய்யலாம். நீங்கள் வேலை செய்யும் போது நிற்கும் மேசையைப் பயன்படுத்தவும்.  நீண்ட நேரம் உட்காரும் போது முதுகுத்தட்டுகளில் அழுத்தம் அதிகரிக்கும்.  அதனால் ஒவ்வொரு மணி நேரமும் எழுந்து சிறிது தூரம் நடந்து பின்னர் அமரலாம்.

யோகா மூலம் தசைகள் மற்றும் மூட்டுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம், இரத்த ஓட்டத்தின் மூலம் ஊட்டச்சத்துக்களின் விநியோகத்தை அதிகரிக்கவும், முதுகெலும்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கவும் யோகா ஒரு சிறந்த வழியாகும்.  மெதுவாக யோகாவை செய்ய தொடங்கலாம், ஆரம்பத்திலேயே கடுமையான பயிற்சி செய்வது மேலும் வலியை உண்டாக்கிவிடும், அதனால் லேசாக செய்ய ஆரம்பிக்கலாம், இதனை அதிகாலை நேரத்தில் செய்வது சிறந்தது.  தியானம் செய்வதும் சிறந்தது, நல்ல ஹார்மோன்களை (எண்டோர்பின்கள்) வெளியிடவும், கவலை மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் இது சிறந்த வழியாகும். கவனத்துடன் தியானம் செய்வதன் மூலம், உங்கள் உடல் வலியை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

ஒரு அமைதியான, இருண்ட அறையில் காலையில் 5 முதல் 10 நிமிடங்கள் தியானம் செய்யலாம், மேலும் உறங்கும் முன் அல்லது வேலையில் ஓய்வு எடுக்கும்போது தியானம் செய்ய முயற்சி செய்யலாம். தண்ணீரில் உடற்பயிற்சி செய்வது நரம்புகள் மற்றும் தசைகளின் செயல்பாட்டை சீராக்க உதவுகிறது, வலியை நீக்குகிறது.  கொஞ்சம் சூடான நீர் நிரம்பிய இடத்தில் ஹைட்ரோதெரபி செய்யலாம்.  நீர் சிகிச்சை பயிற்சிகள் பெரும்பாலும் 83 டிகிரி முதல் 88 டிகிரி வரை உள்ள தண்ணீரில் செய்யப்படுகின்றன.  ஹீட் பேட்சஸ் பயன்படுத்துவது சிறந்த வலி நிவாரணியாக கருதப்படுகிறது.  பயணத்தின்போதும் இதனை எடுத்து செல்லலாம், இந்த ஹீட் பேட்சஸ் விரைவாகச் செயல்படுகின்றன, உங்கள் ஆடைகளுக்குள் இதனை அணியலாம்.  மேலும் இதனை தொடர்ந்து நீண்ட நேரத்திற்கு அணிவதை தடுக்க வேண்டும்.

மேலும் படிக்க | Weight Loss Food: இந்த பொருட்கள் உடல் எடையை வேகமாக குறைக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News