Anemia: இரத்த சோகையை சரி செய்ய உதவும் சூப்பர் உணவுகள், இன்றே சாப்பிடுங்கள்

Foods for Anemia: இரத்த சோகையால் அவதிப்படுகிறீர்களா? வீட்டில் உள்ள இந்த உணவுகளால் இதை எளிதாக சரி செய்யலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 20, 2022, 01:10 PM IST
  • ரத்தப் பற்றாக்குறையால், உடலில் பலவீனம் ஏற்படத் துவங்குகிறது.
  • உலர்ந்த திராட்சை இந்த பிரச்சனையில் அதிக அளவு உதவும்.
  • இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
Anemia: இரத்த சோகையை சரி செய்ய உதவும் சூப்பர் உணவுகள், இன்றே சாப்பிடுங்கள் title=

இரத்த சோகையை சரி செய்யும் உணவுகள்: இந்த காலத்தில் தவறான உணவுப் பழக்கம் பல வித நோய்களுக்கான காரணமாக உள்ளது. அதில் இரத்த சோகையும் முக்கியமான ஒன்றாகும். சரியான உணவை எடுத்துக் கொள்ளாததால், நமக்கு இரத்த பற்றாக்குறை ஏற்படுகிறது. மேலும் பெண்களுக்கு இந்த பிரச்சனை அதிகமாக காணப்படுகிறது. ஏனெனில் பெண்கள் மாதந்தோறும் மாதவிடாய் போன்றவற்றை சந்திக்க வேண்டி இருப்பதால், இதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. வாகனத்தில் பெட்ரோல் ஊற்றி காரை நிற்காமல் ஓட வைப்பது போலவும், ஆயில் தீர்ந்தால் கார் உடனடியாக நின்று விடுவது போலவும், மனித உடலின் சீரான இயக்கத்துக்கு ரத்தம் மிக அவசியமானதாகும். நம் உடலில் ரத்தப் பற்றாக்குறை ஏற்பட்டால், அதனால், உடலில் பல விதமான பிரச்சனைகள் உருவாகத் தொடங்குகின்றன. 

முறையான இரத்த ஓட்டம் உடலுக்குள் இருப்பது மிக அவசியமாகும். உடலில் ரத்தப் பற்றாக்குறை ஏற்பட்டால், தலைசுற்றல், உடலில் சோம்பல் மற்றும் அதிகப்படியான சோர்வு போன்ற பிரச்சனைகள் உருவாகும். இரத்த சோகையின் அறிகுறிகள் என்ன என்பதையும், இந்த சிக்கலை எவ்வாறு சமாளிப்பது என்பதையும் அறிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | Weight Loss Worries: இளைஞர்களின் மிகப்பெரிய கவலை: உணவும் உடல் எடையும்

பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

- ரத்தப் பற்றாக்குறையால், உடலில் பலவீனம் ஏற்படத் துவங்குகிறது. இரும்புச் சத்து குறைபாடுதான் இதற்கு உண்மையான காரணமாக இருக்கிறது. 

- இதனால் தலைசுற்றல், கை, கால் நடுக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இப்படிப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ள பேரீச்சம் பழத்தை சாப்பிடலாம். 

- 1 மாதத்திற்கு தினசரி பேரீச்சம் பழங்களை உட்கொள்வது இரத்த சோகையை அகற்றும்.

- மேலும் உடலுக்கு தேவையான உட்புற வலிமை அதிகரிக்கும். 

- இதில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், புரதம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை அதிகம் உள்ளன. 

உலர்ந்த திராட்சையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

- உலர்ந்த திராட்சை இந்த பிரச்சனையில் அதிக அளவு உதவும்.

- இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

- இதை அடிக்கடி சாறுடன், காலையில் ஓட்ஸுடன் அல்லது இரவில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

- திராட்சையில் சுமார் 3.3 கிராம் நார்ச்சத்து உள்ளது. இதன் காரணமாக குடலில் உள்ள பிரச்சனைகளும் நீக்கப்படுகின்றன.

எள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

- எள் உடலுக்கு அதிக அளவு நன்மைகளை அளிக்கின்றது.

- இதன் காரணமாகத் தான் இதை உடலில் அதிகம் சேர்த்துக்கொள்ள மக்கள் பண்டிகைகளின் போது இதை பல வகைகளில் செய்து சாப்பிடுகிறார்கள்.

- அதில் உள்ள இரும்புச்சத்து, ஃபிளாவனாய்டு, தாமிரம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நம் உடலில் இருந்து இரத்த பற்றாக்குறையை அகற்ற உதவுகிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Weight Loss Tips: தொப்பை கொழுப்பை குறைய பாட்டி வைத்தியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News