உடல் எடை அதிகரிப்பதால் கவலையா? இந்த ஜூஸ் குடிங்க, உடனடி பலன் தெரியும்!!

Weight Loss Tips: கற்றாழை மற்றும் நெல்லிக்காய் சாறு உட்கொள்வது எடை இழப்புக்கு நன்மை பயக்கும். இதனுடன் இது சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களையும் குணப்படுத்த உதவுகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 21, 2023, 06:31 PM IST
  • கற்றாழை மற்றும் நெல்லிக்காய் சாற்றை, உடல் எடையை குறைக்க பல வழிகளில் குடிக்கலாம்.
  • இந்த சாற்றை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது அதிக பலன் தரும்.
  • இந்த ஜூஸ் குடிப்பதால் செரிமான மண்டலம் வலுவடைந்து பல நன்மைகள் கிடைக்கும்.
உடல் எடை அதிகரிப்பதால் கவலையா? இந்த ஜூஸ் குடிங்க, உடனடி பலன் தெரியும்!! title=

உடல் எடையை குறைக்கும் டிப்ஸ்: இன்றைய பிஸியான வாழ்க்கை முறையில் மக்கள் தங்களை கவனிக்க முடியாமல் தவிக்கின்றனர். இதனால், பலரது உடல் எடை அதிகரிக்கத் தொடங்குகிறது. இந்த உடல் பருமனில் இருந்து விடுபட பலர் பல வித நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். எனினும், பல வித முயற்சிகளை செய்தாலும், பலருக்கு எந்த விளைவுகளும் தெரிவதில்லை. எடையைக் குறைக்க சந்தையில் பல வகையான பொருட்கள் இருந்தாலும், அவற்றை உட்கொள்வது ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். 

உடல் பருமனில் இருந்து விடுபட, இயற்கையான சில வழிகளை பின்பற்றலாம். சில பானங்களை உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவும். இவற்றை உட்கொள்வதால், உடல் எடையை எளிதில் குறைக்கலாம். நெல்லிக்காய் மற்றும் கற்றாழை சாறு குடிப்பதால், உடல் எடையை எளிதில் குறைக்கலாம்.

உடல் எடையை குறைக்க இந்த ஜூஸை உட்கொள்ளலாம்: 

ஆம்லா மற்றும் கற்றாழை சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

கற்றாழை மற்றும் நெல்லிக்காய் சாறு உட்கொள்வது எடை இழப்புக்கு நன்மை பயக்கும். இதனுடன் இது சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களையும் குணப்படுத்த உதவுகிறது. கற்றாழை மற்றும் நெல்லிக்காய் சாற்றை உட்கொள்வது உடலில் அதிகரித்த கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. இந்த சாறுகளை குடிப்பதால் கல்லீரல் மற்றும் இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.

கற்றாழையில் வைட்டமின் ஏ, சி, ஈ, ஃபோலிக் அமிலம், கோலின், பி1, பி2, பி3 மற்றும் பி6 உள்ளன. கற்றாழை வைட்டமின் பி 12 மற்றும் கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம், குரோமியம், செலினியம், சோடியம், இரும்பு, பொட்டாசியம், தாமிரம் மற்றும் மாங்கனீஸ் உள்ளிட்ட சுமார் 20 வகையான தாதுக்களையும் கொண்டிருக்கும் தாவரங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. இது முழு உடலின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.

மேலும் படிக்க | உங்களுக்கு சிறுநீரக பிரச்சனை இருக்கா? அப்ப இதையெல்லாம் கண்டிப்பா செய்யாதீங்க

நெல்லிக்காய் மற்றும் கற்றாழை சாற்றை இப்படி குடித்து வந்தால் உடல் எடை குறையும்

- கற்றாழை மற்றும் நெல்லிக்காய் சாற்றை, உடல் எடையை குறைக்க பல வழிகளில் குடிக்கலாம். 

- இந்த சாற்றை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது அதிக பலன் தரும். 

- இந்த ஜூஸ் குடிப்பதால் செரிமான மண்டலம் வலுவடைந்து பல நன்மைகள் கிடைக்கும். 

- இதை உட்கொள்ள, தினமும் இரண்டு ஸ்பூன் கற்றாழை மற்றும் நெல்லிக்காய் சாற்றை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து குடிக்கலாம். 

- இவ்வாறு செய்வதன் மூலம் உடல் எடையை எளிதில் குறைக்கலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஜீ பூம் பா மந்திரத்தை விட சக்தி வாய்ந்த ‘உணவு’ தந்திரம்! ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த டிப்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News