அழகான அடர்த்தியான கூந்தலுக்கு ‘இந்த’ ஜூஸ்களை குடிச்சா போதும்!

அடத்தியான கூந்தலை பெறவும், முடி உதிர்தலைக் கட்டுப்படுத்தவும் உதவும் சில ஆரோக்கிய பானங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 17, 2023, 09:40 PM IST
  • மோசமான உணவுப் பழக்கம் மற்றும் அதிகரித்து வரும் மாசுபாடு போன்ற காரணங்களால் முடி உதிர்தல் பிரச்சனைகள் அதிகரித்துள்ளது.
  • முடி உதிர்தலைக் கட்டுப்படுத்தும் பானங்கள் எவை என்பதை அறிந்து கொள்வோம்.
  • கற்றாழையில் நல்ல அளவு வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ உள்ளது.
அழகான அடர்த்தியான கூந்தலுக்கு ‘இந்த’ ஜூஸ்களை குடிச்சா போதும்! title=

கூந்தல் வளர்ச்சிக்கான பானங்கள்: அடர்த்தியான, வலுவான மற்றும் அலை அலையான கூந்தலைப் பெற வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். ஆனால் இன்றைய வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கம் மற்றும் அதிகரித்து வரும் மாசுபாடு போன்ற காரணங்களால் முடி உதிர்தல் பிரச்சனைகள் அதிகரித்துள்ளது. பல ஊட்டச்சத்து குறைபாடுகள் தான் இதற்கு காரணமாக இருக்கின்றன.

இந்த பிரச்சனைகளை தவிர்க்க, இன்று உங்களுக்காக முடி உதிர்தலைக் கட்டுப்படுத்தும் பானங்களை அறிந்து கொள்வோம். இவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது நீண்ட, அடர்த்தியான மற்றும் அழகான கூந்தலைப் பெற உதவுகிறது, எனவே முடி உதிர்தலைக் கட்டுப்படுத்தும் பானங்கள் எவை என்பதை அறிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | நரை முடி முற்றிலும் கருப்பாக மாற இயற்கை வீட்டு வைத்தியம்

கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பானங்கள்

கேரட் சாறு
கேரட்டில் வைட்டமின்கள் ஏ, ஈ மற்றும் பி போன்ற பல ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. கேரட் ஜூஸ் குடிப்பதால்,  இளநரை தடுக்கப்படுகிறது. இதனுடன், உங்கள் முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கிறது.

வெள்ளரி சாறு

வெள்ளரியில் வைட்டமின் ஏ போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உங்கள் உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது, இதனுடன், உங்கள் உடலும் நீரேற்றமாக இருக்கும். வெள்ளரிக்காய் சாறு, உங்கள் உச்சந்தலையில் சருமத்தில் ஈரப்பத்தை காக்கிறது, இதனால் உங்களுக்கு வறட்சி பிரச்சனை இருக்காது.

கற்றாழை சாறு

கற்றாழையில் நல்ல அளவு வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ உள்ளது. எனவே, அதன் தினசரி உட்கொள்ளல் உங்கள் தலைமுடியை அடர்த்தியாகவும் வலுவாகவும் மாற்ற உதவுகிறது.

ஆம்லா சாறு
ஆம்லா என்பது வைட்டமின் சி போன்ற சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த சூப்பர்ஃபுட் ஆகும். இது  உங்கள் தலைமுடிக்கு சேதம் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. இதனுடன், இது உங்கள் முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.

கீரை சாறு

கீரையில் இரும்புச்சத்து மற்றும் பயோட்டின் நிறைந்துள்ளது, இது உங்கள் உடலுக்கு ஆக்ஸிஜனை நன்றாகக் கடத்துகிறது. இது தவிர, ஃபெரெடின் என்ற கலவை கீரையில் உள்ளது, இது உங்கள் புதிதாக தலைமுடி வளர்ச்சியை ஏற்படுத்துவதன் மூலம் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

மேலும் படிக்க | Hair loss treatment: வழுக்கை தலையில் முடி வளர பாட்டி வைத்தியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News