உங்களுக்கு சிறுநீரக பிரச்சனை இருக்கா? அப்ப இதையெல்லாம் கண்டிப்பா செய்யாதீங்க

Kidney Patients: சிறுநீரக நோயாளிகள் கண்டிப்பாக இந்த விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய சில உணவுகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 21, 2023, 05:55 PM IST
  • உருளைக்கிழங்கு தோல் சிறுநீரகத்தை சேதப்படுத்தும் என்பதால் தோல் நீக்கப்படாத உருளைக்கிழங்கு தவிர்க்கப்பட வேண்டும்.
  • அசைவ உணவு உண்பதால் சிறுநீரகம் மிக விரைவாக செயலிழந்துவிடும்.
  • தக்காளி தோல் மற்றும் தக்காளி விதைகள் இரண்டும் சிறுநீரகத்தை பாதிக்கலாம்.
உங்களுக்கு சிறுநீரக பிரச்சனை இருக்கா? அப்ப இதையெல்லாம் கண்டிப்பா செய்யாதீங்க  title=

சிறுநீரக பாதுகாப்பு குறிப்புகள்: இன்றைய உணவுமுறையின் காரணமாக உடலின் பல பாகங்களில் பல வித நோய்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, இதயம், சிறுநீரகம் போன்ற பாகங்கள் அதிக பாதிப்புக்கு ஆளாகின்றன. தற்போது துரித உணவுகளின் போக்கு அதிகரித்துள்ளதால், துரித உணவுகளை அதிக அளவில் உண்பவர்களை, சிறுநீரக நோய் மிக விரைவில் ஆட்கொள்கிறது. ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுபவர்களின் உடலில் மைதா போன்ற மாவுப்பொருட்கள் அதிகம் சிக்கிக்கொள்கின்றன. ஆகையால், இந்த உணவுகளை அதிகம் உட்கொள்பவர்கள் இவை எளிதில் ஜீரண்மாக கடினமாக உழைக்க வேண்டும். 

தினமும் துரித உணவை உட்கொண்டால், மிக விரைவில் சிறுநீரகம் பாதிக்கப்படலாம். ஆகையால் முடிந்தவரை வீட்டு உணவை மட்டுமே உட்கொள்வது நல்லதாகும். அதிக அளவில் கடைகளில் துரித உணவுகளை வாங்கி சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். 

குறிப்பாக சிறுநீரக நோயாளிகள் கண்டிப்பாக இந்த விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய சில உணவுகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். சிறுநீரக நோயாளிகள் இவற்றை அதிகம் உட்கொள்வதால், உடலுக்கு அதிக ஆபத்துகள் ஏற்படக்கூடும். 

மேலும் படிக்க | ஜீ பூம் பா மந்திரத்தை விட சக்தி வாய்ந்த ‘உணவு’ தந்திரம்! ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த டிப்ஸ்

ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்

- சிறுநீரக நோயாளிகள் எப்போதும் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும். இதன் காரணமாக, அவர்களின் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, வேலை செய்யும் திறன் அதிகரிக்கிறது. இவ்வாறு செய்வதன் மூலம் அவர்களின் சிறுநீரகமும் ஆரோக்கியமாக இருக்கும். 

- சிறுநீரக நோயாளிகள் உணவு உண்ட உடனேயே படுக்கைக்குச் செல்லக்கூடாது. இது அவர்களின் பிரச்சனையை அதிகரிக்கலாம். 

- ஜூஸ், முளைகள், பச்சை சாலட் போன்றவற்றை நாம் உணவில் சேர்த்துக் கொண்டால், அது நமது சிறுநீரகத்தை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

இவை சிறுநீரகத்தை பாதிக்கின்றன

- நீங்கள் வாழைப்பழங்களை அதிகமாக உட்கொண்டால், அது உங்கள் சிறுநீரகத்தை நேரடியாக பாதிக்கிறது. அதனால் வாழைப்பழத்தை அதிகமாக உட்கொள்ளக்கூடாது.

- உருளைக்கிழங்கு தோல் உங்கள் சிறுநீரகத்தை சேதப்படுத்தும் என்பதால் தோல் நீக்கப்படாத உருளைக்கிழங்கு தவிர்க்கப்பட வேண்டும்.

- அசைவமும் குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும், ஏனெனில் அசைவ உணவு உண்பதால் உங்கள் சிறுநீரகம் மிக விரைவாக செயலிழந்துவிடும். அசைவம் அதிகம் சாப்பிடுபவர்களின் சிறுநீரகங்களில் மிக விரைவாக மோசமான விளைவு காணப்படுகிறது.

- சிறுநீரக நோயாளிகள் தக்காளியின் தோலை நீக்கி சாப்பிட வேண்டும், ஏனெனில் தக்காளி தோல் மற்றும் தக்காளி விதைகள் இரண்டும் சிறுநீரகத்தை பாதிக்கலாம்.

- புரோட்டீன் விஷயத்தில், பருப்பு வகைகளை அதிகமாக சாப்பிடக் கூடாது. பருப்பு வகைகளை மருத்துவர்களின் அறிவுரைப்படி ஒரு வரம்பில் உட்கொள்ள வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தினமும் வெறும் வயிற்றில் 3 பச்சை இலை! யூரிக் அமிலம் - கீல் வாதத்தில் இருந்து விடுதலை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News