இள வயதிலேயே நரைமுடியா: இவை காரணமாக இருக்கலாம்

இளநரைக்கு பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் சில காரணங்களை நம்மால் தவிர்க்க முடியும். இந்த சிக்கலை சரி செய்வதற்கான சில வழிகளை இங்கே காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 8, 2022, 05:11 PM IST
  • இளம் வயதிலேயே முடி வெள்ளையாகி விடுகிறதா?
  • வெள்ளை முடி பிரச்சனைக்கு பல காரணங்கள் உள்ளன.
  • இந்த பிரச்சனையில் இருந்து எளிதாக விடுதலை பெறலாம்.
இள வயதிலேயே நரைமுடியா: இவை காரணமாக இருக்கலாம் title=

வயது அதிகமாகும்போது முடி நரைப்பது சகஜம். எனினும், இந்நாட்களில் சிறு வயதிலேயே பலருக்கு நரைமுடி பிரச்சனை வருகிறது. இதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் சில காரணங்களை நம்மால் தவிர்க்க முடியும். இந்த சிக்கலை சரி செய்வதற்கான சில வழிகளை இங்கே காணலாம். 

இளம் வயதிலேயே முடி வெள்ளையாக மாறுவது ஏன்?

முடியின் நிறமி குறையத் தொடங்கும் போது, ​​அவற்றின் நிறம் கருப்பு நிறத்தில் இருந்து வெள்ளையாக மாறத் தொடங்குகிறது. சிறு வயதிலும், குழந்தை பருவத்திலும் முடி நரைப்பதற்கு பொதுவாக 5 காரணங்கள் இருக்கலாம்.

1. மரபியல்

சிறு வயதிலேயே முடி நரைப்பதற்கு காரணம் மரபியல். இந்த வெள்ளை முடி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு இல்லை. ஏனெனில், அது உங்கள் ஜீன்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் பெற்றோருக்கோ அல்லது குடும்பத்தில் உள்ள யாருக்காவதோ சிறுவயதில் இந்த பிரச்சனை இருந்திருந்தால், அது மரபு வழியில் உங்களுக்கும் சிறு வயதிலேயே நரை முடி பிரச்சனையை உருவாக்கலாம். 

2. பதற்றம்

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் பல வித பதற்றங்கள், டென்ஷன் இருக்கும். இந்த மன அழுத்தம் அதிகமாகும் போது தூக்கமின்மை, பதட்டம், பசியின்மை, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதே நேரத்தில், மன அழுத்தம் முடியின் வேர்களில் இருக்கும் ஸ்டெம் செல்களை வலுவிழக்கச் செய்யத் தொடங்குகிறது. இதன் காரணமாக முடி வெண்மையாக மாறத் தொடங்குகிறது என்று ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.

3. ஆட்டோ இம்யூன் நோய்

சிறு வயதிலேயே முடி நரைப்பதற்கு ஆட்டோ இம்யூன் நோய்களும் காரணமாக இருக்கலாம். முடி நரைக்க காரணமாக இருக்கும் தன்னுடல் தாக்க நோய்களின் பெயர்கள் அலோபீசியா அல்லது விட்டிலிகோ ஆகும். இந்த நோய்களில், நோயெதிர்ப்பு அமைப்பு அதன் சொந்த செல்களை சேதப்படுத்தத் தொடங்குகிறது. இதன் காரணமாக சிறு வயதிலேயே முடி நரைக்கத் தொடங்குகிறது. 

4. வைட்டமின் பி-12 குறைபாடு

சிறு வயதிலேயே முடி நரைப்பதற்கு வைட்டமின் குறைபாடும் காரணமாக இருக்கலாம். உடலில் வைட்டமின் பி-12 குறைபாடு இருந்தால், முடி சேதமடையத் தொடங்கும். இந்த வைட்டமின் ஆற்றல் அளிக்கவும், முடி வளர்ச்சி மற்றும் முடி நிறத்தை கட்டுப்படுத்தவும் காரணமாக இருக்கிறது. 

மேலும் படிக்க | என்றும் இளமை! மனித சருமத்தை 30 ஆண்டுகள் இளமையாக்கிய விஞ்ஞானிகள் 

5. புகைபிடித்தல்

புகைபிடித்தல் உங்கள் தலைமுடி-யை இளவயதிலேயே வெள்ளையாக்கும் என பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஏனெனில், புகைபிடித்தல் நரம்புகளை சுருங்கச் செய்து அவற்றில் இரத்த ஓட்டத்தை குறைக்கிறது. இதன் காரணமாக முடியின் வேர்களுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காமல், அவை வெண்மையாக மாற ஆரம்பிக்கும்.

வெள்ளை முடியை கருப்பாக்குவது எப்படி?

உங்கள் தலைமுடி இளம் வயதிலேயே வெள்ளையானால், அதை விரைவில் சரிசெய்ய வேண்டும். ஏனெனில், நரை முடியின் பெரும்பாலான காரணங்கள் தடுக்கக்கூடியவை ஆகும். வெள்ளை முடியின் பின்னணியில் உள்ள காரணத்தை அறிந்து, மருத்துவர் அதற்கு சிகிச்சையளிப்பார்.

தகுந்த சிகிச்சையின் மூலம் முடியின் நிறமி (பிக்மெண்டேஷன்) திரும்பி, அவை மீண்டும் கருப்பாக மாறும். உங்கள் உடலில் வைட்டமின் பி-12 குறைபாடு இருந்தால், அதன் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்ளலாம். இள வயதில் முடி நரைக்காமல் இருக்க, புகைப்பழக்கத்தை கைவிடுவதும் அவசியமாகும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.) 

மேலும் படிக்க | மாம்பழமாம் மாம்பழம்: சுவை மட்டுமல்ல, இது அளிக்கும் ஆரோக்கிய நன்மைகளும் ஏராளம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News