மகாராஷ்டிராவில் தொலைந்த நாய் - கர்நாடகாவில் ஓனர் வீட்டுக்கு வந்தது... 250 கி.மீ., கடந்தது எப்படி?

Bizarre Latest News: மகாராஷ்டிராவில் கோவில் பாதையாத்திரையில் தொலைந்து போன வளர்ப்பு நாய் ஒன்று, கர்நாடகாவில் உள்ள அதன் உரிமையாளர் வீட்டுக்கு யாருடைய உதவியும் இன்றி 250 கி.மீ., கடந்து வந்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Jul 31, 2024, 01:53 PM IST
  • அந்த நாயுக்கு மகாராஜ் என பெயர் வைத்துள்ளனர்.
  • அந்த நாயின் வருகையை ஊரே திருவிழா போல் கொண்டாடியிருக்கிறது.
  • இந்திய வகை நாய் அதன் உரிமையாளருடன் பாதையாத்திரைக்கு போயுள்ளது.
மகாராஷ்டிராவில் தொலைந்த நாய் - கர்நாடகாவில் ஓனர் வீட்டுக்கு வந்தது... 250 கி.மீ., கடந்தது எப்படி? title=

Bizarre Latest News In India: மனிதர்கள் தங்களுடன் செல்லப்பிராணிகளை வளர்ப்பது என்பது ஒவ்வொரு நாகரீகத்திலும் காணப்படுகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் அதன் தேவை என்பது மனிதர்களுக்கு வெவ்வேறு விதத்தில் இருந்துள்ளது. முந்தைய காலத்தில் தனது உற்பத்தி தொழில் சார்ந்து தங்கள் வீட்டில் மிருகங்களை வளர்த்தனர். 

ஆடு, மாடு, நாய் தொடங்கி பல விலங்குகளை மனிதர்கள் வீட்டில் வளர்த்து வந்தனர். இந்த நவீன காலகட்டத்தில் செல்லப்பிராணி வளர்ப்பு என்பது வேறொரு தளத்தை அடைந்துவிட்டது எனலாம். உண்மையிலேயே, ரேஷன் கார்டில் தங்கள் செல்லப்பிராணிகளின் பெயரை சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைக்கும் அளவுக்கு பாசத்தை பொழிவதை நீங்களே பார்த்திருப்பீர்கள். 

பூனை வளர்ப்போர் vs நாய் வளர்ப்போர்

மனிதர்கள் Vlog செய்வதை போன்று, வீட்டில் தங்களின் நாய் செய்யும் சேட்டைகள், அன்றாட நடவடிக்கள் தொடங்கி சாப்பிடுவது, தூங்குவது என அனைத்தையும் யூ-ட்யூப், இன்ஸ்டாகிராம்களில் அவற்றின் பெயரிலேயே ஒரு பக்கத்தை தொடங்கி, அதில் தொடர்ந்து வீடியோக்களை போடுகின்றனர். அது நாயோ, பூனையோ செல்லப்பிராணிகளை வளர்ப்பது இந்த காலகட்டத்தில் வேறு வடிவத்திற்கு மாறிவிட்டது எனலாம். ஆம், ஏறத்தாழ ஒரு குழந்தையை வளர்ப்பது போன்று செல்லப்பிராணிகளை பார்த்துக்கொள்கின்றனர்.

மேலும் படிக்க | மகாராஷ்டிரா காட்டில் சங்கிலியால் கட்டப்பட்ட அமெரிக்க பெண்.. தமிழ் முகவரியுடன் ஆதார்! அடுத்தடுத்த மர்மம்

எப்படி சமூக வலைதளங்களில் விஜய் - அஜித் ரசிகர்கள் சண்டை ஓய்வது கஷ்டமோ அதேபோல் தான் பூனை வளர்ப்போர் vs நாய் வளர்ப்போருக்கு இடையிலான சண்டையும் ஓய்வே ஓயாது. எப்போதும் அமைதியாக இருக்கும் பூனைதான் செல்லப்பிராணிகளில் சிறந்தது என ஒரு கோஷ்டியும், என்றும் நன்றி மறக்காமல் விசுவாசமாக இருக்கும் நாய்தான் செல்லப்பிராணிகளில் சிறந்தது என மற்றொரு கோஷ்டியும் உள்ளன. 

ஊர் திரும்பிய மகாராஜ்

அந்த வகையில், நாய் கோஷ்டி, பூனை கோஷ்டியிடம் சண்டையிடும் போது, பயன்படும் வகையில் ஒரு சிறப்பான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இந்த சம்பவத்தை பூனை கோஷ்டியிடம் சொல்லி வெறுப்பேற்றி, நாய் கோஷ்டியினர் நிச்சயம் மகிழ்ச்சியில் குதூகலிக்கலாம். அப்படியென்ன சம்பவம் என்றுதானே கேட்கிறீர்கள். வாருங்கள், அதை இங்கு காணலாம். 

கர்நாடகாவின் பெல்காவி மாவட்டத்தில் உள்ள நிபானி தாலுக்காவில் உள்ள யமாகார்னி கிராம்த்தில் ஒரு வினோத சம்பவம் நடந்ததுள்ளது. மகாராஜா என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் வளர்ப்பு நாய் ஒன்று மகாராஷ்டிராவில் தொலைந்து, மீண்டும் 250 கி.மீ., கடந்து அந்த கிராமத்திற்கே திரும்பி வந்ததுதான் பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்திருக்கிறது. அத்தனை தொலைவில் இருந்தும் அதே கிராமத்திற்கு திரும்பிய 'மகாராஜ்'-வுக்கு அந்த ஊர் மக்கள் மலை போட்டு அலங்கரித்து ஊர்வலமாக சென்றிருக்கின்றனர். அந்தளவிற்கு, மகாராஜ் சொந்த ஊருக்கு திரும்பியதை அவர்கள் கொண்டாடியிருக்கின்றனர். 

மகாராஜ் தொலைந்த கதை

கடந்த ஜூன் மாதம் கடைசி வாரத்தில் மகாராஜை வளர்ப்பவரான கமலேஷ் கும்பார் ஆண்டுதோறும் மகாராஷ்டிராவின் பந்தர்பூரில் நடைபெறும் வாரி பாதையாத்திரையில் கலந்துகொள்ள அங்கு சென்றுள்ளார். வருடந்தோறும் அந்த பாதையாத்திரையில் பங்கேற்பதை கமலேஷ் வழக்கமாக வைத்துள்ளார், இந்த முறை அவருடன் மகாராஜூவும் சென்றுள்ளது. சென்ற இடத்தில் மகாராஜ் காணாமல் போயுள்ளது. மகாராஜ் காணாமல் போனது முதல் திரும்பி வந்தது வரை அதை வளர்த்த கமலேஷ் இங்கு விவரிக்கிறார்.  

இதுகுறித்து கமலேஷ் கூறுகையில்,"மகாராஜுக்கு எப்போதுமே பஜனைகளை கேட்பது பிடிக்கும். இதற்கு முன் ஒருமுறை என்னுடன் மகாபாலேஷ்வர் அருகில் உள்ள ஜோதிபா கோவிலின் ஒரு பாதையாத்திரைக்கும் மகாராஜ் வந்தது. அந்த வகையில், இந்த முறை பந்தர்பூருக்கும் மகாராஜ் வந்தது. நான் என் நண்பர்களுடன் பேசிக்கொண்டும், பஜனை பாடிக்கொண்டும் 250 கி.மீ., வரை பாதையாத்திரை சென்றபோது என்னுடனே மகாராஜும் வந்தது.

சர்ஃப்ரைஸ் கொடுத்த மகாராஜ்

அப்போது கோவிலில் வழிபாடு செய்துவிட்டு வந்தபோது, மகாராஜை காணவில்லை. நாங்கள் பலரும் மகாராஜை தேடினோம். அங்கிருந்தவர்கள், மகாராஜ் வேறு ஒரு குழுவினரோடு சென்றுவிட்டதாக கூறினர். இருந்தாலும் மகாராஜை அங்கு அனைத்து இடங்களிலும் தேடினேன், ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, அவர்கள் சொன்னதுபோல் மகாராஜ் வேறொரு குழுவுடன் சென்றுவிட்டது என எண்ணி நானும் தேடுவதை விட்டுவிட்டேன். நான் ஜூலை 14ஆம் தேதி வீடு திரும்பினேன். 

நான் வீடு திரும்பிய அடுத்த நாளே மகாராஜ் வந்துவிட்டது. எதுவுமே நடக்காதது போல் எனது வீட்டுக்கு வெளியே வந்து நின்றுகொண்டு என்னை பார்த்து வாலாட்டிக்கொண்டிருந்தது. திரும்பி வந்தபோதும் அப்படியே தான் இருந்தது, எந்த பிரச்னையும் இல்லை. மக்களும் மகாராஜ் ஊர் திரும்பியதை ஒரு திருவிழா போல் கொண்டாடினர். 
ஒரு நாய் 250 கி.மீ.,, கடந்து சரியான வழியை கண்டுபிடித்து வீடு திரும்பியிருப்பது நிச்சயம் அதிசயம்தான். கடவுள் பாண்டுரங்கன்தான் மகாராஜுக்கு வழிகாட்டியிருக்க வேண்டும்" என தெரிவித்தார். 

மேலும் படிக்க | Train Accident: கடந்த 13 நாட்களில் 8 ரயில் விபத்துகள்.. தொடரும் உயிர் பலிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News