சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரி யார்? பாஜகவுக்கு எதிராக அணிதிரளும் எதிர்கட்சிகள்

சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு தொடங்கியது... தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் என பல மாநில தலைவர்கள் கலந்துக் கொண்டனர்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 3, 2023, 10:53 PM IST
  • சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு
  • பல்வேறு மாநில உயர்நிலை அரசியல் தலைவர்கள் கலந்துக் கொண்ட தேசிய மாநாடு
  • சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு பெருகுகிறது
சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரி யார்? பாஜகவுக்கு எதிராக அணிதிரளும் எதிர்கட்சிகள் title=

சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு இன்று புதுடெல்லியில் தொடங்கியது. திமுக நடத்திய சமூக நீதிக்கான மாநாட்டில், மூன்று மாநில முதல்வர்கள் உட்பட எதிர்க்கட்சிகளின் உயர்நிலைத் தலைவர்கள் கலந்துக் கொண்டு, சாதிவாரி கணக்கெடுப்புக்கு குரல் கொடுத்தனர். இந்த கணக்கெடுப்பு 2024 பொதுத் தேர்தல்களுக்கு முன்னர் நடைபெற வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்கட்சிகள்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் அடக்குமுறைக்கு எதிராக குரல் எழுப்பினார்கள். ஆளும்கட்சிக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் பலத்தை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாக இந்த மாநாடு கருதப்படுகிறது.

ராகுல் காந்தி பதவி தகுதிநீக்க விவகாரம் அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பாஜக தலைமையிலான அரசாங்கத்தை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் ஒரே தளத்தில் இணைவதால், இந்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும் படிக்க | திமுக எம்எல்ஏ ஓட்டிய அரசு பேருந்து விபத்தில் சிக்கியது..! நடந்தது என்ன?

இந்த மாநாட்டில் தலைமையேற்று காணொளி வாயிலாக பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின்,  "அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பின் சார்பில் இந்த இணைய வழிக் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ள கழக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று சொல்லி உரையைத் தொடங்கினார்.

சமூகநீதி நடவடிக்கைகளில் அதிக அக்கறை

அரசியல் நடவடிக்கைகளை விட சமூகநீதி நடவடிக்கைகளில் அதிக அக்கறை கொண்டவர் வில்சன் அவர்கள். அதனால் தான் இதனை அகில இந்தியா முழுமைக்குமான மாநாடாக ஒருங்கிணைத்துள்ளார் என்று பாராட்டிய, தமிழக முதல்வர், எல்லைகளால் இணைந்துள்ள இந்தியாவை இணையத்தால் இணைத்துள்ளோம் என்று கூறினார்.

அனைத்து கட்சிகளையும் தற்போது சமூக நீதி என்ற மிகப்பெரிய தார்மீகக் கடமை ஒன்றிணைத்துள்ளது என்று கூறிய தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள், பல மாநில முதலமைச்சர்கள், தேசிய அளவிலான அரசியல் கட்சித் தலைவர்கள், மாநிலக் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் நீதியரசர்கள், மூத்த வழக்கறிஞர்கள் என பலரும் சமூகநீதியைக் காக்கும் கடமையில் ஒன்றிணைந்துள்ளனர்.

சமூகநீதி என்பது ஒரு மாநிலத்தின் பிரச்னை அல்ல, அனைத்து மாநிலங்களின் பிரச்னை என்று சுட்டிக்காட்டிய திரு மு.க ஸ்டாலின், எங்கெல்லாம் புறக்கணிப்பு, ஒதுக்குதல், தீண்டாமை, அடிமைத்தனம், அநீதி இருக்கிறதோ அங்கெல்லாம் அதற்கு மருந்தாக சமூகநீதி தேவை என்று கூறினார்.

எதிர்க்கட்சிகள் தங்கள் ஈகோக்களை ஒதுக்கிவிட்டு ஒன்றுபட வேண்டும் என்றும், சமூக நீதி அடிப்படையிலான அரசியலே பாஜகவின் 'துருவமுனைப்பு' அரசியலை முறியடிக்க சிறந்த வழி என்றும் அவர் வலியுறுத்தினார்.

சமூக நீதிக்கான இயக்கத்தில் காங்கிரஸ் மற்ற கட்சிகளுடன் இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வீரப்ப மொய்லி வலியுறுத்தினார்.

மேலும் படிக்க | கிருஷ்ணகிரி: ஆர்சிபி வெல்ல வாழைப்பழ பிரார்த்தனை - IPL 2023 விநோதம்..!

ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் தற்போதைய அரசாங்கத்தைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் இணையுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

சாதிவாரி கணக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்த ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், 'வர்ண அமைப்பு' தொடர வேண்டும் என்று பாஜகவின் சித்தாந்த ஆலோசகர் ஆர்எஸ்எஸ் விரும்புவதால் பாஜக அதை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.

இந்த மாநாட்டில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு என்பது அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் சாளரங்களைத் திறப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக இருந்தாலும், பொருளாதார வளர்ச்சியும் அதனுடன் இணைந்தே இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

"பொருளாதார வளர்ச்சியை ஒரு சிலருக்கு மட்டுப்படுத்த முடியாது. கடந்த இரண்டு ஆண்டுகளில், 40.5 சதவீத சொத்துக்கள் ஒரு சதவீத மக்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. கார்ப்பரேட் வகுப்புவாத உறவை நாம் எதிர்த்துப் போராட வேண்டும்," என்று சீதாராம் யெசூரி கூறினார்.

மேலும் படிக்க | நடிகை சூர்யா - ஜோதிகா மீது தென் மண்டல ஐஜியிடம் பாஜக புகார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News