இந்தியாவில் இருந்து வெளியேறியது Yahoo! இனி Yahoo Mail நிலை என்ன..!!

கூகுள் நிறுவனத்திற்கு முன்பாகவே இந்தியாவில் தனது சேவையை தொடங்கிய யாஹூ நிறுவனம் தற்போது இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 27, 2021, 12:16 PM IST
இந்தியாவில் இருந்து வெளியேறியது Yahoo! இனி Yahoo Mail நிலை என்ன..!! title=

Yahoo India: கூகுள் (Google) நிறுவனத்திற்கு முன்பாகவே இந்தியாவில் தனது சேவையை தொடங்கிய யாஹூ நிறுவனம் தற்போது இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. 

யாஹு செய்திகள் (Yahoo News), யாஹூ கிரிகெட் (Yahoo Cricket), யாஹூ பைனான்ஸ் உள்பட மற்ற அனைத்து சேவைகளும் இந்தியாவில் நிறுத்தப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் டிஜிட்டல் உள்ளடக்கத்தை இயக்கும் மற்றும் வெளியிடும் ஊடக நிறுவனங்களின் வெளிநாட்டு உரிமை தொடர்பாக, இந்தியாவில் கட்டுப்பாட்டு சட்ட விதிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை யாஹூ இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளதாக, அந்நிறுவனம் கூறியுள்ளது. யாஹூ நிறுவனம், இந்தியாவுடன் நீண்டகால உறவைக் கொண்டுள்ளது என்றும்  கடந்த 20 ஆண்டுகளாக நாங்கள் எங்கள் பயனர்களுக்கு வழங்கிய சேவைகளை நினைத்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம் எனவும் நிறுவனம் கூறியுள்ளது.

ALSO READ | Safer with Google 2021:ஆண்ட்ராய்டு பயனர்களின் இணைய பாதுகாப்புக்கு தனியுரிமை கருவி

அக்டோபரில் நடைமுறைக்கு வரும் புதிய FDI விதிமுறைகளின்படி, மத்திய அரசின் ஒப்புதலுக்கு உட்பட்டு இந்தியாவில் டிஜிட்டல் மீடியா நிறுவனங்கள் வெளிநாட்டு முதலீட்டில் 26 சதவிகித முதலீட்டை ஏற்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நடவடிக்கை யாகூ மெயில் (Yahoo Mail ) கணக்கை பாதிக்குமா?

யாஹூ நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறியதன் காரணமாக யாகூ மெயில் (Yahoo Mail) மற்றும் யாகூ தேடலை (Yahoo Search) பாதிக்காது என்று யாகூ நிறுவனம் கூறியுள்ளது. எந்த மாற்றமும் இன்றி இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு தொடர்ந்து சேவை கிடைக்கும் எனவும் யாஹூ மேலும் கூறியுள்ளது.

யாஹூ மின்னஞ்சல் (Yahoo Mail ) கணக்கு முகவரி மாறுமா?

"முற்றிலும் இல்லை,"  என யாஹூ  நிறுவனம் கூறியது. யாகூ மெயில் கணக்கில் எந்த பாதிப்பும் ஏற்படாது மற்றும் உங்கள் மின்னஞ்சல் ஐடி மாறாமல் இருக்கும் என்று நிறுவனம் மீண்டும் வலியுறுத்தியது.

ALSO READ | வாகனத்தின் மைலேஜை அதிகரிக்க “இவற்றை” இன்றே காரில் இருந்து நீக்கவும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News