வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்: இனி இந்த வசதியை ஆதார் மூலமே பெறலாம்

இனி, வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், ஒருங்கிணைந்த கட்டண இடைமுக (UPI) சேவையை செயல்படுத்த ஆதார் மற்றும் ஓடிபி-ஐயும் (OTP)  பயன்படுத்த முடியும்.  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 11, 2022, 05:23 PM IST
  • வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைக்கவுள்ளது.
  • UPI சேவையை செயல்படுத்த இனி ஆதார் போதும்.
  • தற்போது, ​​யுபிஐ-ஐ செயல்படுத்த டெபிட் கார்டுக்கான ஆப்ஷன் மட்டுமே உள்ளது.
வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்: இனி இந்த வசதியை ஆதார் மூலமே பெறலாம் title=

புதுடெல்லி: வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைக்கவுள்ளது. வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், ஒருங்கிணைந்த கட்டண இடைமுக (UPI) சேவையை செயல்படுத்த ஆதார் மற்றும் ஓடிபி-ஐயும் (OTP)  பயன்படுத்த முடியும்.

இந்த அம்சம் செப்டம்பர் 2021 இல் தொடங்கப்பட்டது

தற்போது, ​​வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு யுபிஐ-ஐ செயல்படுத்த டெபிட் கார்டுக்கான ஆப்ஷன் மட்டுமே உள்ளது. எகனாமிக் டைம்ஸில் வெளியிடப்பட்ட செய்தியின்படி, இந்த அம்சம் செப்டம்பர் 2021 இல் இந்திய தேசிய கட்டண கழகத்தால் (NPCI) அறிமுகப்படுத்தப்பட்டது.

டிசம்பர் 15ஆம் தேதி தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது

அப்போது 15 டிசம்பர் 2021க்குள் இந்த சேவையை தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. டெபிட் கார்டு இல்லாத அல்லது கார்டு ஆக்டிவேட் செய்யப்படாத வாடிக்கையாளர்கள், இப்போது ஆதார் மற்றும் OTP மூலம் UPI-ஐ ஆக்டிவேட் செய்யலாம் என்று இடி அறிக்கை கூறுகிறது.

மேலும் படிக்க | OPS vs NPS: பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள நன்மைகள் என்ன, விவரம் இதோ 

மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

தகவலின்படி, NPCI ஐ இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துடன் இணைத்ததால் இது சாத்தியமானது. அதாவது, இப்போது டெபிட் கார்டுகளைத் தவிர, வாடிக்கையாளர்கள் ஆதார் OTP அங்கீகாரத்தைப் பயன்படுத்தியும் UPI ஐச் செயல்படுத்த முடியும். புதிய முறை அமல்படுத்தப்படும் தேதி மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைக் கொண்டுள்ள மொபைலில் UPI அப்ளிகேஷனைப் பயன்படுத்தி, அதே எண் வங்கியிலும் பதிவு செய்யப்பட்டிருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். பெரும்பாலான மொபைல் செயலிகளில், வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டை இணைக்க வேண்டியுள்ளது. அதாவது, இணைய வங்கி (டிஜிட்டல் பேங்கிங்) வசதி உள்ளவர்கள் மட்டும்தான் UPIஐப் பயன்படுத்த முடியும் என்று உள்ளது. 

ஒருங்கிணைந்த கட்டண இடைமுக சேவையை செயல்படுத்த ஆதார் மற்றும் ஓடிபி-ஐயும் (OTP)  பயன்படுத்த முடியும் என்ற செயல்முறை அமலுக்கு வந்துவிட்டால் அது பொதுமக்களுக்கு மிக உதவியாக இருக்கும். 

மேலும் படிக்க | EPFO முக்கிய செய்தி: இபிஎஃப்ஒ-விலிருந்து இபிஎஃப்ஓ டிரஸ்டுக்கு கணக்கை மாற்றுவது எப்படி? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News