Year 2022 Horoscope: இந்த 6 ராசிகளுக்கு இது ஜாக்பாட் ஆண்டு, தொட்டது துலங்கும், கேட்டது கிடைக்கும்

இந்த 6 ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு வாழ்க்கையை மாற்றக்கூடும் ஒரு ஆண்டாக இருக்கப்போகிறது. அந்த ராசிகளைப் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 26, 2021, 08:38 AM IST
Year 2022 Horoscope: இந்த 6 ராசிகளுக்கு இது ஜாக்பாட் ஆண்டு, தொட்டது துலங்கும், கேட்டது கிடைக்கும் title=

Year 2022 Horoscope: 2021ஆம் ஆண்டு முடிய இன்னும் ஒரு மாதமே உள்ளது. புத்தாண்டு அதாவது 2022 ஆம் ஆண்டை வரவேற்பதற்கான ஆயத்தங்களும் நடந்துகொண்டிருக்கின்றன. இந்த ஆண்டு தங்களுக்கு எப்படி இருக்கும் என்ற ஆர்வமும் அனைவருக்கும் உள்ளது. இந்த புத்தாண்டு தங்களுக்கு பல நல்ல செய்திகளை கொண்டு வர வேண்டும் என்ற ஆசையும் உள்ளது.

ஜோதிடக் கணக்கீடுகளின்படி, சில ராசிக்காரர்களுக்கு (Zodiac Signs) 2022 ஆம் ஆண்டு மிகச்சிறப்பாக இருக்கும். இந்த 6 ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு வாழ்க்கையை மாற்றக்கூடும் ஒரு ஆண்டாக இருக்கப்போகிறது. அந்த ராசிகளைப் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

2022 ஆம் ஆண்டுக்கான அதிர்ஷ்ட ராசிகள்

ரிஷபம் (Taurus): ரிஷபம் ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு சிறப்பாக இருக்கும். 2022 ஆம் ஆண்டில் உங்கள் பணியிடம், வணிகம் ஆகியவற்றில் நீங்கள் பிரகாசிப்பீர்கள். உங்களுக்கு மிகப்பெரிய அந்தஸ்து கிடைக்கும். நீங்கள் பெரும் வருமானம் பெருகும், செல்வமும் வளமும் பெருகும். பொருளாதார ஸ்திரத்தன்மை உங்களை புதிய செயல்களைச் செய்யத் தூண்டும். பணியிடத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வருடம் முழுவதும் ஆடம்பர வாழ்க்கை வாழ்வீர்கள்.

சிம்மம் (Leo): 2022 புத்தாண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான ஆண்டாக இருக்கும். வரும் வருடம் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற அதிக வாய்ப்புகள் கிடைக்கும். இந்த வாய்ப்புகளை தவறவிடாதீர்கள், ஏனெனில் அவை எதிர்காலத்தில் உங்களுக்கு பெரிய பலன்களைத் தரும்.

ALSO READ: அடுத்த 13 நாட்களுக்கு அன்னை லட்சுமியின் கடைக்கண் பார்வை பெறும் 5 ராசிக்காரர்கள்!

விருச்சிகம் (Scorpio): விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2022-ம் ஆண்டு பல வரங்களைக் கொண்டு வருகிறது. இந்த வருடம் உங்களின் பல ஆசைகள் நிறைவேறும். பொதுவாக, அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

துலாம் (Libra): துலா ராசிக்காரர்களுக்கு 2022-ம் ஆண்டு சிறப்பான வெற்றியை தேடித் தரும். தொழில்-பண வகையில் அதிக லாபம் காண்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் அன்பும் ஆதரவும் முழுமையாக கிடைக்கும். இந்த ஆண்டு உங்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பு கிடைக்கக்கூடும். அதை தக்கவைத்துக்கொள்ளுங்கள்.

மகரம் (Capricorn): மகர ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டு அதிக முன்னேற்றங்கள் நிறைந்த ஆண்டாக இருக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். மகர  (Capricorn) ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு நல்ல பெயர், பணம் இரண்டும் பஞ்சமில்லாமல் கிடைக்கும்.

கும்பம் (Aquarius): 2022 ஆம் ஆண்டு கும்ப (Aquarius) ராசிக்காரர்களின் வாழ்க்கையை மாற்றும் ஆண்டாக இருக்கும். இப்போது என்ன பிரச்சனைகள் இருந்தாலும், அவை ஒவ்வொன்றாகத் தீரத் தொடங்கும். அனைத்திற்கும் மேலாக, எங்கெங்கோ போய்க்கொண்டிருந்த உங்கள் வாழ்க்கை சரியான பாதையில் திரும்பும். வாழ்க்கையில் அன்பு நுழைந்து நாட்களை அழகாக்கும். சிலருக்கு திருமணமும் கைகூடும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவையாகும். ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ:இந்த ராசிக்காரர்கள் சூப்பரான தலைவர்களாக இருப்பார்கள்: உங்களுக்கும் இந்த ராசியா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News