தூக்கமின்மை பிரச்சனையா? இந்த ஈசி வழிமுறைகளை கடைபிடியுங்கள்…கை மேல் பலன் கிடைக்கும்..!

Sleep Tips: நம்மில் பலர், இரவில் தூக்கம் வராமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறோம். இதைப்போக்க சில சிம்பிள் வழிமுறைகள் உள்ளன. அவை என்னென்ன தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Jun 13, 2023, 05:40 PM IST
  • தூக்கமின்மையை தடுக்க வழிமுறைகள்.
  • சீக்கிரம் தூங்குவதற்கான டிப்ஸ்.
  • இசை கேட்கலாம், புத்தகம் படிக்கலாம். இன்னும் பல டிப்ஸ்கள்.
தூக்கமின்மை பிரச்சனையா? இந்த ஈசி வழிமுறைகளை கடைபிடியுங்கள்…கை மேல் பலன் கிடைக்கும்..! title=

இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை நம்மில் பலர் இரவில் தாமதமாக தூங்கும் பழக்கத்திற்கு நம்மை அறியாமல் வந்து விட்டோம். வேலை பளு, மன அழுத்தம் போன்ற பல பிரசனைகள் தூக்கமின்மைக்கு காரணமாக இருக்கின்றன. ஒரு நாள் தூக்கம் கெட்டுவிட்டாலும் அடுத்த நாள் சரியான நேரத்தில் தூங்க முடியாமல் போகிறது. இதை எப்படி தடுப்பது என சிலர் விழி பிதுங்கி நிற்பதுண்டு. இதை எப்படி சரி செய்வது? வாங்க பார்க்கலாம். 

தூக்கமின்மைக்கான காரணங்கள்:

ஒரு சிலருக்கு மனநலம் அல்லது உடல் நலனில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தூக்கம் வராமல் இருக்கலாம். ஒரு சிலர் காலையில் சீக்கிரம் எழும்பும் பழக்கத்தை பின்பற்றாதவராக இருக்கலாம். அவர்களுக்கு இரவு சீக்கிரமாக தூக்கம் வருவது என்பது முடியாத காரியம். ஒரு சிலருக்கு மன அழுத்தம் காரணமாக இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படலாம். இது போன்ற பிரச்சனைகள் இல்லாதோரும் தூக்கமின்மையை சந்திக்கின்றனர். தூக்கத்தை எப்படி சீக்கிரமாக வரவழைப்பது, சில சிம்பிள் டிப்ஸ் இதோ! 

மேலும் படிக்க | 40 ஆண்டுகளாக பாரம்பரியப் பயணத்தில் மீண்டும் ஒரு வரலாற்றுத் தருணம்! ராம்ராஜ் காட்டனின் 250வது ஷோரூம்

தூக்கம் வரவழைப்பதற்கான டிப்ஸ்:

இரவு தூங்குவதற்கு முன்னர் உங்களை அமைதிப்படுத்தும் ஏதாவது ஒரு செயலில் ஈடுபடுங்கள். அது, பாட்டு கேட்பதாக இருக்கலாம் அல்லது புத்தகம் படிப்பதாக இருக்கலாம் இல்லையெனில் டைரி எழுதும் பழக்கமாக கூட இருக்கலாம்.  உங்களுக்கு பிடித்த செயலை செய்வதனால் மனம் அமைதியாகும். இரவில் நல்ல உறக்கம் வரும். 

சூடான குளியல்:

தூங்குவதற்கு முன்னர் சூடான அல்லது மிதமான தண்ணீரில் குளியல் போடலாம். இது உங்கள் தசைகளை அமைதிப்படுத்தவும் உடலில் உள்ள சோர்வை நீக்கவும் வழி வகை செய்கிறது. இது நல்ல தூக்கத்திற்கு உதவும். 

தியானம் செய்யுங்கள்:

பொதுவாகவே அமைதியான சூழ்நிலையை தியானம் செய்வது நம் உடலுக்கும் மனதுக்கும் மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தியானத்தை தூங்க போவதற்கு முன் செய்வதால் மனம் அமைதி பெற்று பதற்றத்தை தடுக்கும். உங்கள் தூக்கமின்மைக்கு காரணமாக இருக்கும் மன அழுத்தம் சம்பந்தமான பிரச்சனைகளையும் தியானம் நிவர்த்தி செய்யும். 

புத்தகம் படியுங்கள்:

தூங்குவதற்கு முன் பிடித்த வகையான புத்தகத்தை படிக்கலாம். அது அன்றைய நாளிதழுடன் வந்த நினைப்பிதழாக இருக்கலாம். உங்களுக்கு பிடித்த கதை புத்தகமாகவும் இருக்கலாம். அமைதியான சூழ்நிலையில் புத்தகம் படிப்பது மன அமைதியை மேம்படுத்தும். ஆழ்ந்த தூக்கத்திற்கும் இது உதவும். 

இசைக்கு செவி சாயுங்கள்:

இசை என்றால் பாடல் கேட்பது மட்டுமல்ல சாதாரண மழைத்துளி ஓசையை கேட்பதும் இசைதான். கடல் அலையின் ஓசை கேட்பதும் இசை தான். இப்படி உங்களுக்கு பிடித்த ஏதேனும் இசையை சில நிமிடங்கள் கண்ணை மூடி கேட்கவும். இது, கண்டிப்பாக உங்கள் மனதினை அமைதிப்படுத்த உதவும். இதனால் ஆழ்ந்த தூக்கத்தையும் நீங்கள் பெற முடியும். ஆனால், ஹெட்போன்சில் இசை கேட்பதை தவிர்க்கவும். அப்படியே கேட்டாலும் குறைவான வால்யூம் வைத்து கேட்கவும். 

வெளிச்சம் குறைவாக இருக்கட்டும்..

வெளிச்சம் அதிகமாக இருக்கும் அறையில் தூங்க முயற்சித்தால் கூட, தூக்கம் வருவது கஷ்டம். உங்கள் அறையில் குறைவான வெளிச்சம் இருக்கிறதா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி என்ன செய்தாலும் தூக்கம் வரவில்லை என்றால், ப்ளைன்ட்ஸ் என்ற கணகளுக்கான மாஸ்க் கடைகளில் கிடைக்கும். இதை உங்கள் கண்களில் போட்டுக்கொண்டு தூங்க முயற்சி செய்யுங்கள். 

டிஜிட்டல் சாதனங்களை தவிர்க்கவும்..

டிஜிட்டல் சாதனங்களை தூங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாவது அறவே தவிருங்கள். டிவி உள்பட எந்த ஸ்கிரீனையும் பார்க்க வேண்டாம். அதிகம் டிஜிட்டல் சாதனங்களை பார்ப்பது கண் எரிச்சல், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளையும் அதிகமாக்கும் என ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | Keerthy Suresh: முகப்பொலிவிற்கு கீர்த்தி சுரேஷ் பின்பற்றும் 5 எளிய வழிமுறைகள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News