40 ஆண்டுகளாக பாரம்பரியப் பயணத்தில் மீண்டும் ஒரு வரலாற்றுத் தருணம்! ராம்ராஜ் காட்டனின் 250வது ஷோரூம்

Ramraj Cotton 40th Anniversary:  விஜயவாடாவில் ராம்ராஜ் காட்டன் புதிய அங்காடியை பழம்பெரும் நடிகர் வெங்கடேஷ் டகுபதி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். இது 40 ஆண்டுகள் பழமையான நிறுவனத்தின் 250வது ஸ்டோர் ஆகும்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Shiva Murugesan | Last Updated : Jun 12, 2023, 04:18 PM IST
  • ராம்ராஜிற்கு மிகவும் சிறப்பு.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற விதத்தில் ரகங்கள் இருக்கும்.
  • தென்னிந்தியாவில் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய உடைகளை ஊக்குவிக்கும் மிகப்பெரிய பிராண்டாக ராம்ராஜ் காட்டன் உள்ளது.
  • ராம்ராஜ் காட்டன் நிறுவனம் 50,000- க்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்களின் நலன்களைப் பாதுகாத்து தலைநிமிர்ந்து நிற்கிறது.
40 ஆண்டுகளாக பாரம்பரியப் பயணத்தில் மீண்டும் ஒரு வரலாற்றுத் தருணம்! ராம்ராஜ் காட்டனின் 250வது ஷோரூம் title=

Ramraj Cotton in Vijayawada: ராம்ராஜ் காட்டன்... ஒரு முன்னோடி, ஒரு வெற்றிகரமான நிறுவனம்... அது மட்டுமல்ல, 40 ஆண்டுகளாக வலுவாக உள்ள நிகரற்ற பிராண்ட். ராம்ராஜ் காட்டன் என்பது கலாச்சாரம், தரம் மற்றும் நம்பிக்கையின் ஒரு கலங்கரை விளக்கம். இதுவே தென்னிந்தியா முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும் உச்சரிக்கப்படும் பெயர். நம் நிறுவனம் வேட்டிகளைத் தன்னிகரற்ற உயரத்துக்குக் கொண்டு சேர்த்துள்ளது. குறிப்பாக இளைஞர்களால் விரும்பப்படும் ஸ்டைல் ஸ்டேட்மென்ட். அண்மையில் ராம்ராஜ் காட்டன் தனது 40வது ஆண்டு விழா எனும் மாபெரும் மைல்கல் நிகழ்வைக் கொண்டாடியது. இன்று நாடு முழுவதும் நிறுவனத்துக்குச் சொந்தமான 250 விற்பனை நிலையங்களைக் கொண்ட சில பிராண்டுகளில் ஒன்றாக வளர்ந்துள்ளதன் மூலம் ராமராஜ் காட்டன் புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளது. ஆம்... ராமராஜ் காட்டனின் 250வது விற்பனை நிலையம் விஜயவாடாவில் ஜூன் 11 அன்று தேதி திறக்கப்பட்டது. தனித்துவமான ஸ்டைலும் கரிஷ்மாவும் கொண்ட புகழ்பெற்ற நடிகர் வெங்கடேஷ் டகுபதி (விக்டரி வெங்கடேஷ்) அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்த இந்த விற்பனை நிலையத்தைத் திறந்து வைத்தார்.

ராம்ராஜிற்கு மிகவும் சிறப்பு சேர்க்கும் விஷயம் என்னவெனில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற விதத்தில் அவர்களிடம் பிரத்யேகமான சில ரகங்கள் உள்ளன. இந்த ஸ்டோரில் அனைத்து வயதினருக்கும் வேட்டிகளும் ஷர்ட்களும் உள்ளன. அவர்களிடம் மிகவும் நம்பகமான பாரம்பரிய வேட்டிகளும், அடுத்த தலைமுறையினருக்கான நவீன மற்றும் புதுமை ரகங்களிலான வேட்டிகளும் உள்ளன. அவர்களிடம் தினசரி அணிவதற்கேற்ற மிகக் குறைந்த விலையிலான வேட்டிகளும் மிகவும் பகட்டான மற்றும் நேர்த்தியாக அணியும் பிரிவினருக்கு ப்ரீமியம் விலையிலான பாரம்பரிய சில்க் வேட்டிகள் மற்றும் ஷர்ட்களும் உள்ளன. எங்கள் கலெக்ஷனில் ரூ.1,00,000 மற்றும் அதற்கு மேற்பட்ட விலைகளில் குறிப்பிட்ட வகைகளிலான ஆடை ரகங்களும் உள்ளன. 

1983-ம் ஆண்டு தொடங்கி, கலாச்சாரம், பாரம்பரியம், புதுமை, நேர்த்தியும் தரமும் மிக்க தயாரிப்பு ஆகியவற்றின் கலவையால் ஜவுளித் தொழிலை உள்நாட்டிலேயே முழுமையாக வளர்த்த ‘சுதேசி’ பிராண்ட் ராமராஜ் காட்டன். தென்னிந்தியாவில் வேட்டிகள், சட்டைகள், உள்ளாடைகள், பின்னலாடைகள், துணிகள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான உடைகள் ஆகியவற்றின் மிகப்பெரிய உற்பத்தி, சப்ளை மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றான ராம்ராஜ் காட்டன், ஜவுளித் தொழிலில் உயர்ந்த அளவுகோலை உருவாக்கிப் பின்பற்றி வருகிறது. பாரம்பரிய வேட்டிகளைத் தயாரிப்பதில் முன்னோடியான ராம்ராஜ் காட்டன், 2500 வகையான வேட்டிகளை உற்பத்தி செய்கிறது. தென்னிந்தியாவில் உண்மையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய உடைகளை ஊக்குவிக்கும் மிகப்பெரிய பிராண்டாக வளர்ந்துள்ள ராம்ராஜ் காட்டன் பல விருதுகளையும் பல லட்சம் இதயங்களையும் வென்றுள்ளது. 

மேலும் படிக்க - தட்கல் ரயில் டிக்கெட் புக் பண்ணணுமா... கன்பர்ம் சீட் கிடைக்க சில டிப்ஸ் இதோ!

ராமராஜ் பிராண்டுடன் தொடர்புடைய ஒவ்வொரு நபரின் நாற்பதாண்டு கால அசைக்க முடியாத நம்பிக்கை, ஈடு இணையற்ற அர்ப்பணிப்பு மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட நிறுவனர், தலைவர் திரு.கே.ஆர்.நாகராஜன் அவர்களின் நல்வாழ்த்துகளுடன் அடுத்த தலைமுறையின் திறமையான இளைய தலைமையும் கைகோர்த்து புதிய பட்டுச் சட்டைகள், அனைத்து வயதினருக்கான குர்தாக்கள், ஆண்கள், பெண்களுக்கான உள்ளாடைகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட குளியலறை ஆக்சஸ்ரிஸ் வரை பல்வேறு வகையான தயாரிப்புகளை இந்த பிராண்ட் வழங்குகிறது. 

எளிமையான வடிவில் தொடங்கப்பட்ட ராம்ராஜ் காட்டன், மேற்கிந்திய கலாச்சாரம் அதிகரித்துள்ள இந்தக் காலக்கட்டத்திலும் இந்தியாவின் பாரம்பரியம் மிக்க கலாச்சாரத்தை எடுத்துச்செல்வதில் முன்னோடியாக, ஒரு பேரரசாக உருவெடுத்து இணையற்றதாகவும் வலுவானதாகவும் நிலைபெற்றிருக்கிறது. ஆம்... இது ஒரு மனிதரின் நல்விருப்பங்களின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளரான திரு. கே.ஆர். நாகராஜன் ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோர் மட்டுமல்ல, இந்தியாவின் முதல் கலாச்சார முனைவோர். பெரும்பாலான பிராண்டுகளைப் போல் அல்லாமல், பெயர், புகழ் மற்றும் வணிகத்தைத் தாண்டிச் செல்லும் உயரிய நோக்குடனும் முயற்சிகளுடனும் ராம்ராஜ் காட்டன் தனது பயணத்தைத் தொடங்கியது. நெசவாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டுக்காக இது எப்போதும் துணைநிற்கும். இந்த நாற்பதாண்டுகளில் இந்த நிறுவனம் 50,000- க்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்களின் நலன்களைப் பாதுகாத்து தலைநிமிர்ந்து நிற்கிறது. தென்னிந்தியா முழுவதும் 15,000 பணியாளர்கள் நேரடியாகப் பணியாற்றி வருகிறார்கள். 

இந்த பிராண்டின் வேக வளர்ச்சிக்கு முக்கியமான காரணிகள் நம்பிக்கை மற்றும் தென்னிந்தியச் சந்தைகளில் வலுவாகக் கால் பதித்துள்ள சிறப்பான நெட்வொர்க் ஆகும். ராமராஜ் காட்டன் 15000 MBO-களுக்கு நேரடியாகவும் நன்கு பிணைக்கப்பட்ட விநியோக அமைப்பு மூலமாகவும் சேவை செய்கிறது. மேலும், இந்நிறுவனம் தென் மாநிலங்களில் உள்ள பெரும்பாலான நகரங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடைகள் மற்றும் ஷோரூம்களோடு, 250 பிரத்யேக பிராண்ட் விற்பனை நிலையங்களையும் இயக்குகிறது. இங்கெல்லாம் ராம்ராஜ் ஒரு வெண்மை வீரராக நிற்கிறார், வேட்டிகளைச் சுழற்றுகிறார், இந்தியக் கலாச்சாரத்தை மேம்படுத்துகிறார். அதே நேரத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிறார். தென்னிந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குகிறார். 

மேலும் படிக்க - 7th Pay Commission மிகப்பெரிய அப்டேட்: டிஏ ஹைக்குடன் டிஏ அரியர் தொகையும் கிடைக்குமா?

ராமராஜ் பிராண்டுடன் தொடர்புடைய ஒவ்வொரு நபரின் நாற்பதாண்டு கால அசைக்க முடியாத நம்பிக்கை, ஈடு இணையற்ற அர்ப்பணிப்பு மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட நிறுவனர், தலைவர் திரு.கே.ஆர்.நாகராஜன் அவர்களின் நல்வாழ்த்துகளுடன் அடுத்த தலைமுறையின் திறமையான இளைய தலைமையும் கைகோர்த்து புதிய வரலாற்றை எழுதுகிறது. விஜயவாடாவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த 250வது ஷோரூம், இந்த மண்ணின் உண்மையான கலாச்சாரத்தை ஊக்குவித்து, அதன் அனைத்துத் தயாரிப்புகளிலும் பாரம்பரியத் தன்மையைப் புகுத்துகிறது. பிராண்டின் பயணத்தில் இது ஒரு வரலாற்றுத் தருணம்.

இந்த மாபெரும் வெற்றிக்கு உற்சாகம் சேர்க்கும் வகையில், 250வது விற்பனை நிலையத்தை எப்போதும் ஸ்டைலான வசீகரமான நடிகர் வெங்கடேஷ் டக்குபதி (விக்டரி வெங்கடேஷ்) திறந்து வைக்கிறார். தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்துக்கான ராம்ராஜ் வேட்டிகள் & சட்டைகளுக்கான பிராண்ட் அம்பாசிடராகவும் இவர் செயலாற்றுகிறார். 

இந்த மைல்கல் சாதனையுடன், ராம்ராஜ் காட்டனின் எதிர்காலம் மிகவும் நம்பிக்கைக்குரியதாக உள்ளது. இந்த பிராண்ட் தென்னிந்தியாவின் மார்க்கெட் லீடராக உயர்ந்துள்ளது. இப்போது அதன் அற்புதமான தயாரிப்புகளுடன் ஒரு பான்-இந்தியா இருப்பை நோக்கிச் செல்கிறது. உற்பத்தியை அதிகரித்தல், தொழில்நுட்பம், சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரங்களைத் தொடர்ந்து மேம்படுத்துதல், விற்பனையை மேம்படுத்துதல் என இன்றைய டைனமிக் சந்தைக்கு ஏற்ற பார்வையுடன் நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யவிருக்கும் ராம்ராஜ் காட்டன் வெற்றியின் புதிய பக்கங்களை எழுதத் தயாராகி வருகிறது. 

மேலும் படிக்க - வெறும் ரூ. 5000 -க்கு iPhone 14 Pro Max: இது என்ன புது கதை!! ஜாக்கிரதை!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News