இந்த 5 காரணங்களால் பெண்களுக்கு ஆண்கள் மீது ஆர்வம் குறையலாம்!

ஏமாற்றும் ஆண்களை பெண்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள், ஒருமுறை ஒரு பெண்ணை ஏமாற்றிய பிறகு திரும்பவும் அவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவது சாத்தியமற்ற செயல்.    

Written by - RK Spark | Last Updated : Oct 29, 2022, 03:06 PM IST
  • பெண்கள் ஆண்கள் தங்களை மதிக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
  • ஒரு சிறந்த ஆண்மகன் பெண்ணை வாழ்க்கையில் முக்கியமானவராக மதிப்பார்.
  • ஒரு பெண்ணுக்கு மிகவும் முக்கியமானது ஆண்களின் நிலையானத்தன்மை.
இந்த 5 காரணங்களால் பெண்களுக்கு ஆண்கள் மீது ஆர்வம் குறையலாம்! title=

எல்லா காதலும் ஆரம்பத்திலும் தேனை விட தித்திப்பாய் தான் இருக்கும், ஆனால் போக போக தான் தேனீக்கள் கொட்டியது போல இருக்கும்.  எந்த ஒரு உறவுமே ஆரம்ப காலகட்டத்தில் இருப்பதை போலவே கடைசி வரை இருப்பதில்லை, ஒரு உறவை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதை வைத்துதான் அது இறுதிவரை தேனை போல சுவையாக இருப்பதும் அல்லது தேனீயை போல கொட்டுவதும்.  சில ஆண்கள் தனது துணை ஏன் தன் மீது ஆர்வம் காட்டவில்லை என குழம்பி தவிப்பார்கள், இது சிலருக்கு மன ரீதியான பிரச்சனைகளை கூட ஏற்படுத்த வாய்ப்புள்ளது.  பெண்கள் ஏன் உங்கள் மீது ஆர்வம் காட்டவில்லை என்பதை தெரிந்துகொண்டால் அதனை சரிசெய்ய நீங்கள் முயற்சிக்கலாம், பெரும்பாலும் பெண்கள் ஆண்கள் மீதான ஆர்வத்தை இழக்க 5 காரணங்கள் தான் உள்ளது, அதனை நீங்கள் திருத்திக்கொண்டாலே உங்கள் துணையை நீங்கள் திருப்திபடுத்திவிடலாம்.

மேலும் படிக்க | பிறரின் பரம ரகசியங்களை அறிந்து கொள்வதில் இவர்கள் கில்லாடி! ஜாக்கிரதை

1) எந்தவொரு நபருக்கும் சுயமரியாதை என்பது அவசியம், அதிலும் பெண்கள் ஆண்கள் தங்களை மதிக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.  எந்தவொரு ஆண், பெண்ணை மதிக்கிறானோ அவன் மீது அவர்கள் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருப்பார்கள்.  ஒரு சிறந்த ஆண்மகன் பெண்ணை வாழ்க்கையில் முக்கியமானவராக மதிப்பார், ஆண்கள் பெண்களை மதிக்காமல் இருந்தால் அவர்கள் சீக்கிரமே ஆண்கள் மீதான ஆர்வத்தை இழந்துவிடுவார்கள்.

2) ஒரு பெண்ணுக்கு மிகவும் முக்கியமானது ஆண்களின் நிலையானத்தன்மை, உங்கள் நடவடிக்கைகளை பெண்கள் உன்னிப்பாக கவனிப்பார்கள்.  நீங்கள் அவர்கள் மீது அக்கறை காட்டுகிறீர்கள், எல்லாவற்றிலும் எப்போதும் அவர்களுக்கு துணையாக இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் பெண்களுக்கு தொடர்ந்து காட்ட வேண்டும், அப்போது அவர்களுக்கு உங்கள் மீது ஈடுபாடு அதிகரிக்கும்.  அப்படி நீங்கள் நடந்துகொள்ளவில்லை என்றால் அது அவர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும், தான் காதலித்த பையன் இவன் இல்லை என்கிற உணர்வு பெண்களுக்கு ஏற்பட்டுவிடும்.

3) ஒரு உறவின் ஆதாரமே ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கை தான், நம்பிக்கையில் தான் உறவுகளே வாழ்ந்து வருகிறது.  ஏமாற்றும் ஆண்களை பெண்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள், ஒருமுறை ஒரு பெண்ணை ஏமாற்றிய பிறகு திரும்பவும் அவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவது சாத்தியமற்ற செயல்.  தன்னை ஏமாற்றும் ஆண்கள் மீது பெண்கள் ஆர்வத்தை இழக்கிறார்கள். 

4) நீங்கள் உறவை தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் பெண்களை தாங்குவீர்கள், அவர்களுக்கு மறக்க முடியாத தருணங்களையும், சிறப்பான சூழ்நிலையையும் உருவாக்கி தருவீர்கள்.  அதுவே நாளாக நாளாக நீங்கள் அசால்ட்டாக இருப்பீர்கள், அது பெண்களுக்கு ஒருவித ஏக்கத்தையும், கவலையையும் ஏற்படுத்திவிடும்.  இதனால் உங்கள் மீது அவர்களுக்கு ஆர்வம் இழக்க நேரிடும், காதலிக்க தொடங்கும்போது எப்படியெல்லாம் இருந்தோம் என்பதை நினைவில் வைத்து செயல்படுவது உறவில் விரிசலை ஏற்படுத்தாது. 

5) ஒருவருக்கு வாக்குறுதி  அதன்படி நடக்க வேண்டும், அதிலும் உறவில் செய்யப்படும் வாக்குறுதிகள் மிகவும் முக்கியமானது.  வார்த்தையிலிருந்து பின்வாங்கும் ஆண்களை பெண்கள் எப்போதும் விரும்பமாட்டார்கள், உங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை போய்விடும், இதனாலேயே பெண்கள் உங்கள் மீது ஆர்வத்தை இழந்து விடுவார்கள்.

மேலும் படிக்க | அமேசானில் குறைந்த விலையில் கிடைக்கும் கர்ப்பிணிகளுக்கு தேவையான அந்த பொருட்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News