supermoon: நாளைய நிலாவை மிஸ் பண்ணீடாதீங்க! விட்டா 2037 வரைக்கும் காத்திருக்கனும்

August Supermoon: வழக்கமான முழு நிலவை விட சற்று பெரியதாகவும் பிரகாசமாகவும் இருக்கும் நாளைய நிலா..., இரவு வானத்தைப் பார்க்கும் அனைவருக்கும் வசீகரிக்கும் காட்சியை உருவாக்கும் சூப்பர்மூன்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 31, 2023, 08:55 PM IST
  • மாதப் பிறப்பன்றே சூப்பர்மூனாக தோன்றும் நிலா!
  • சூப்பர்மூனை பார்த்தால் அதிர்ஷ்டம் அள்ளும்
  • ப்ளூமூனையும் இந்த ஆகஸ்ட் மாதத்திலேயே பார்க்கலாம்
supermoon: நாளைய நிலாவை மிஸ் பண்ணீடாதீங்க! விட்டா 2037 வரைக்கும் காத்திருக்கனும் title=

இந்த ஆண்டின் இரண்டாவது சூப்பர் மூன் ஆகஸ்ட் 1-ம் தேதி தெரியும், ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு முறை பெளர்ணமி வரும். ஆகஸ்ட் முதல் தேதியும், ஆகஸ்ட் 30ம் தேதி என ஆகஸ்ட் மாதத்தில் இரு முறை பவுர்ணமி வருகிறது. இது போன்ற நிகழ்வு 2037ம் ஆண்டு தான் மீண்டும் வரும். சூப்பர்மூன், ப்ளூமுன் என்ற வார்த்தைகளை கேட்டிருக்கலாம். இவற்றை பற்றிய முழு விவரங்களைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

சூப்பர் மூன் & ஸ்டர்ஜன் மூன் 

ஆகஸ்ட் மாதத்தில் பல வானியல் நிகழ்வுகள் நடக்கவுள்ளன, அவை அரிதாகக் கருதப்படுகின்றன. இந்த மாதம் இரண்டு சூப்பர் மூன்கள் தெரியும். முதல் சூப்பர் மூன் ஆகஸ்ட் 1ம் தேதியும், இரண்டாவது சூப்பர் மூன் ஆகஸ்ட் 30ம் தேதி இரவும் தெரியும். எனவே இதன் சிறப்பு என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

சூப்பர் மூன் மற்றும் ப்ளூ மூன்

ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு சூப்பர் மூன்கள் தோன்ற உள்ளன. முதலாவது ஆகஸ்ட் 1ஆம் தேதியும், இரண்டாவது ஆகஸ்ட் 30ஆம் தேதி இரவிலும் தெரியும். இந்த நாளில் தெரியும் சூப்பர்மூன் மற்ற சூப்பர் மூன்களை விட மிகப் பெரியதாக இருக்கும், ஏனெனில் அது பூமிக்கு மிக அருகில் இருக்கும். இது தவிர, அதன் நிறத்தை நீங்கள் எளிதாகப் பார்க்க முடியும். இந்த நாளில் பூமியைச் சுற்றியுள்ள சந்திரனின் சுற்றுப்பாதை சுமார் 5 டிகிரி கோணத்தில் சாய்ந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க |  இந்த ராசிக்காரர்களை குபேரருக்கு ரொம்ப பிடிக்கும்.. அபரிமிதமான செல்வம் பொழிவார்

ப்ளூ மூன் ஆகஸ்ட் 30 அன்று தெரியும்

ஆகஸ்ட் 30 அன்று, புளூமூன் தெரியும். இது, மிகவும் அரிதான நிகழ்வு. சந்திரனின் நிறத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது பொதுவாக ஒரு மாதத்தில் இரண்டு பெளர்ணமிகள் வரும்போது, இரண்டாவது பௌர்ணமி அன்று தோன்றும் நிலவை குறிக்கும் வார்த்தை ஆகும். இம்முறை ஆகஸ்ட் மாதத்திலும் இரண்டு பௌர்ணமிகள் விழுவதால், இரண்டாவது பௌர்ணமி நாளில் சூப்பர் ப்ளூ மூன் காணப்படும். முன்னதாக ப்ளூ மூன் 22 ஆகஸ்ட் 2021 அன்று காணப்பட்டது.

சூப்பர்மூன் என்றால் என்ன?

பிரிட்டிஷ் இணையதளமான 'தி சன்' அறிக்கையின்படி, சூப்பர் மூன் என்பது ஒரு அரிய மற்றும் ஈர்க்கக்கூடிய சந்திர நிகழ்வாகும், இதை அவ்வப்போது மட்டுமே பார்க்க முடியும். சூப்பர்மூனின்போது, வானில் தோன்றும் நிலவு, வழக்கத்தை விட பெரியதாக இருக்கும். வானியலாளர்களின் கூற்றுப்படி, ஒளியுடன் பிரகாசிக்கும் முழு நிலவு பூமியிலிருந்து 224,865 மைல் சுற்றளவில் வரும்போது இந்த நிலை வருகிறது.

மேலும் படிக்க | எல்பிஎல் போட்டி கிரிக்கெட் கிரவுண்டில் பாம்பு! தினேஷ் கார்த்திக்கின் வைரல் ட்வீட்

சூப்பர் மூன் ஜூன் மாதத்திலும் வந்தது

முன்னதாக ஜூன் மாதத்தில் சூப்பர் மூன் தோன்றியது. ஜூன் 14 அன்று தோன்றிய சூப்பர் மூன் ஸ்ட்ராபெரி சூப்பர் மூன் என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இந்த முழு நிலவு ஸ்ட்ராபெரி அறுவடை காலத்தில் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பூமியை, சந்திரன் ஒரு நீள்வட்டப்பாதையில் சுற்றிவருகிறது. எனவே அது ஒரு சில நேரங்களில் பூமிக்கு அருகிலும் சில நேரங்களில் சற்று தொலைவிலும் இருக்கும், நிலவு அருகில் இருக்கும் போது, அது முழுநிலவாக இருந்தால் அன்றைக்கு நிலவு வழக்கத்தை விட 14 மடங்கு பெரிதாகவும், 30 மடங்கு அதிகமாக ஒளிரும். அதுவே பெருமுழுநிலவு (Supermoon) என்று அழைக்கப்படும். ஒரு வருடத்தில் நான்கு முதல் ஆறு பெருநிலவுகள் தோன்றும்.

பெளர்ணமி நாளன்று, சூரியன், பூமி மற்றும் சந்திரன் என மூன்றும் 180 டிகிரி வரிசையில் நேர்க்கோட்டில் வருகின்றன. ஆனால் சந்திரனின் சுற்றுப்பாதை பூமியிலிருந்து சற்று மாறுபட்டு (இது பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து 5 டிகிரி விலகியிருக்கிறது) இருக்கிறது.

எனவே, மூன்று கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, பூமியின் நிழலை விட சற்று அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும். அதாவது சூரியனின் ஒளி பூமியை எதிர்கொள்ளும் போது, சந்திரனின் பக்கம் ஒளிரும். 1979 ஆம் ஆண்டில் “சூப்பர்மூன்” என்ற வார்த்தையை உருவாக்கியவர் ஒரு ஜோதிடர் தான். வழக்கத்திற்கு மாறாக பூமிக்கு நெருக்கமாக நிலவு வருவதால் இந்த பெயர் வைக்கப்பட்டது.

மேலும் படிக்க | சிம்மத்தில் இருந்து கன்னிக்கு பெயரும் செவ்வாய் பகவானால் பணமழையில் நனையும் ராசி உங்களுடையதா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News