ஓட்டு எண்ணிக்கை ஆரம்பம்..வெற்றி யாருக்கு? அமுதாவும் அன்னலட்சுமியும் எபிசோட் அப்டேட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.  

Written by - Yuvashree | Last Updated : May 13, 2023, 12:55 PM IST
  • அமுதாவும் அன்னலட்சுமியும் தொடர் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
  • இந்த சீரியலில் தேர்தல் நடக்கிறது.
  • யார் ஜெயிக்க போகிறார்கள் என்ற டென்ஷனில் அனைவரும் உள்ளனர்.
ஓட்டு எண்ணிக்கை ஆரம்பம்..வெற்றி யாருக்கு? அமுதாவும் அன்னலட்சுமியும் எபிசோட் அப்டேட் title=

ஜீ தொலைக்காட்சியின் பிரபலமான சீரியல்களுள் ஒன்றாக விளங்குவது அமுதாவும் அன்னலட்சுமியும். கணவர் மூலம் தனது கல்வி ஆசையை அடைய வேண்டும் என்ற லட்சியத்தோடு வாழும் ஒரு பெண் குறித்த கதைதான் அமுதாவும் அன்னலட்சியும். இந்த தொடர், பலரது வாழ்வோடு பிண்ணிப்பிணைந்த ஒன்றாக மாறிவிட்டது. பல திருப்பங்களோடு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரின் அப்டேட்டுகளை தெரிந்து கொள்வோம் வாங்க. 

முந்தைய எபிசோட்..

இதற்கு முன்னர் அமுதாவும் அன்னலட்சுமியும் தொடரில் நடக்கவிருக்கும் தேர்தல் குறித்து அமுதா பேசுகிறாள். அப்போது, “என் மாமா கதிரேசன் வேணா செத்து போயிருக்கலாம்.. ஆனா அவர் கண்ட கனவு இன்னும் உசிரோட தான் இருக்கு. நான் இப்ப அவரோட ரூபத்துல இருக்கேன். உங்க எல்லாருக்கும் படிப்புக்கும் எனக்கும் எந்த சம்மந்தம் இருக்குன்னு தோணலாம். இன்னைக்கு பட்டி தொட்டியெல்லாம் பள்ளிக் கூடம் இருக்குன்னா அது எல்லாத்துக்கும் ஒரே ஒருத்தர் தான் காரணம், பெருசா பள்ளிக் கூடத்துக்கு எல்லாம் போகாதவர் தான், எல்லாருக்கும் கல்வி அறிவு வேணும்னு பாடுபட்டவரு, அவர் யாருன்னு நான் சொல்ல வேண்டியது இல்லை.. எல்லாருக்கும் அவர் யாருன்னு நல்லாவே தெரியும்.. அவர் தான் கர்ம வீரர் காமராஜர் அய்யா” என பேசுகிறாள். 

மேலும் படிக்க | Keerthy Suresh: மாடர்ன் ரதி டூ மங்கள மங்கை..கீர்த்தி சுரேஷின் அசத்தல் க்ளிக்ஸ் இதோ!

அமுதாவும் அன்னலட்சுமியும்

ஓட்டு எண்ணிக்கை 

அமுதா பேசிய பிறகு, அதன் பிறகு ஒட்டு பதிவுகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற பழனி, உமா என எல்லாரும் டென்ஷனாக இருக்க .செல்வா, புவனா வந்து ஸ்கூலுக்கு வந்து அமுதாவை கட்டி அணைத்து கொள்கின்றனர். இப்படியான நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன? வாங்க பார்க்கலாம். 

இன்றைய எபிசோட் அப்டேட்..

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் தேர்தல் நடந்து முடிந்ததை தொடர்ந்து இன்றைய எபிசோடில் ஓட்டுக்கள் எண்ணப்படுகிறது. இருவருக்கும் எண்ணிக்கை சமமாக வர சிதம்பரத்துக்கு ஓட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

அமுதாவும் அன்னலட்சுமியும்

இதனையடுத்து அமுதா அவர் வரமாட்டார் என சொல்ல உமா அவர் வருவார் என சொல்லி பெர்மிஷன் கேட்கிறாள். இதையடுத்து அமுதா & கோ உமா ஏதோ செய்யப் போகிறாள் என யோசிக்க, உமா நாகுவிற்கு போன் செய்து மீண்டும் மிரட்டுகிறாள். 

அதன் பிறகு கொஞ்ச நேரத்தில் சிதம்பரம் வருகிறார். அனைவரும் டென்ஷனாக பார்க்க சிதம்பரம் தனது ஓட்டை பதிவு செய்கிறார். ஓஅதன் பிறகு அவரது ஓட்டை பெட்டியில் இருந்து எடுக்கின்றனர். இதனை தொடர்ந்து வெற்றி பெற்றவர் யார் என கமிட்டியினர் போர்டில் எழுதப் போக அமுதா டென்ஷனாக பார்க்கிறாள். 

காணத்தவறாதீர்கள்..

விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 7 மணிக்கு காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | Sunny Leone Birthday: இவருக்கு இப்படியொரு பழக்கமா? சன்னி லியோன் குறித்து யாரும் அறியாத தகவல்கள் சில!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News