தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.
அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.
இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பழனியை தொடர்ந்து பேசும் அமுதா தனது மாமனார் சொல்வதை கேட்டு பேச்சை தொடர்கிறாள். என் மாமா கதிரேசன் வேணா செத்து போயிருக்கலாம்.. ஆனா அவர் கண்ட கனவு இன்னும் உசிரோட தான் இருக்கு. நான் இப்ப அவரோட ரூபத்துல இருக்கேன். உங்க எல்லாருக்கும் படிப்புக்கும் எனக்கும் எந்த சம்மந்தம் இருக்குன்னு தோணலாம். இன்னைக்கு பட்டி தொட்டியெல்லாம் பள்ளிக் கூடம் இருக்குன்னா அது எல்லாத்துக்கும் ஒரே ஒருத்தர் தான் காரணம், பெருசா பள்ளிக் கூடத்துக்கு எல்லாம் போகாதவர் தான், எல்லாருக்கும் கல்வி அறிவு வேணும்னு பாடுபட்டவரு, அவர் யாருன்னு நான் சொல்ல வேண்டியது இல்லை.. எல்லாருக்கும் அவர் யாருன்னு நல்லாவே தெரியும்.. அவர் தான் கர்ம வீரர் காமராஜர் அய்யா என பேசுகிறாள்.
அதுமட்டுமில்லாமல் சாப்பாடு இல்லாமல் பசங்க பள்ளி கூடத்துக்கு வராம போயிடக் கூடாதுன்னு மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவரு, அப்படிப்பட்டவர் வாழ்ந்த இந்த பூமில இந்த மாதிரி கேள்வி கேக்குறதே தப்பு. அவர் எப்படி இந்த கல்விக்காக வாழ்க்கையை அர்ப்பணிச்சாரோ அதே வழியை நானும் பின் பற்றுவேன்.. எந்த மாதிரி பள்ளிக் கூடம் நடத்தனும்னு நானும் சில யோசனைகள் வச்சிருக்கேன்..இப்ப குழந்தைகங்க செல்போனுக்கு அடிமையா இருக்காங்க. அதனால பசங்களோட கவனச் சிதறலை சரி பண்ண, ஓடி ஆடி விளையாடுறதை ஊக்கப்படுத்தனும். கிளாஸ் ரூம்லயே வச்சு பாடம் நடத்தனும்னு அவசியம் இல்ல, ஏதாவது ஒரு கிளாஸ் மரத்தடில நடத்தலாம்.
மேலும் ஆசிரியர்கள் நண்பனா இருந்தா மட்டும் போதாதது கொஞ்சம் கண்டிப்பாவும் இருக்கனும். நான் என் சம்பள பணத்துல 10 பசங்க படிக்கிறதுக்கு உதவ போறேன். இந்த சமுதாயத்துல தேவையான விஷயங்களை கத்து குடுக்கனும்.. விவசாயத்தோட பயனையும் அதை எப்படி வளர்க்கனும்னு கத்துக் குடுக்கனும் என பேசி முடிக்கிறாள்.
அதன் பிறகு ஒட்டு பதிவுகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற பழனி, உமா என எல்லாரும் டென்ஷனாக இருக்க .செல்வா, புவனா வந்து ஸ்கூலுக்கு வந்து அமுதாவை கட்டி அணைத்து கொள்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? தேர்தலில் ஜெயிக்க போவது யார் என்பதை அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது?
அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
மேலும் படிக்க | வெளியானது கேப்டன் மில்லர் அப்டேட் ...தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ