சின்மயி விவகாரம் குறித்து பேசிய வைரமுத்து!

உண்மை இல்லாதது பற்றி நான் ஏன் பேச வேண்டும் என்று சின்மயி விவகாரம் குறித்து வைரமுத்து பேசியுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Jul 13, 2022, 12:24 PM IST
  • வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்த சின்மயி.
  • புகாரை தொடர்ந்து மறுத்து வரும் வைரமுத்து.
சின்மயி விவகாரம் குறித்து பேசிய வைரமுத்து!  title=

தனக்கு பாடலாசிரியர் வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என்று கடந்த 2018ம்  ஆண்டு பாடகி சின்மயி MeeToo-ன் போது பரபரப்பு புகார் வைத்தார்.  இது திரைத்துறை சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  வைரமுத்துவை பற்றி இப்படி ஒரு செய்தி வந்ததால் அந்த சமயத்தில் இந்தியா முழுவதும் பேசு பொருளானது.  இது குறித்து வைரமுத்துவிடம் கேள்வி கேட்கப்பட்ட பொழுது இதனை முற்றிலும் மறுத்து இருந்தார்.  "அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்" என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் படிக்க | Tamil Movies - இந்த வாரம் திரையரங்கில் வெளியாகும் 5 படங்கள்!

 

வைரமுத்துவின் மகன் மதன் கார்கியும் பல மேடைகளில் இந்த செய்தியை மறுத்து பேசி இருக்கிறார்.  ஆனால் சின்மயி வைரமுத்துவின் தொடர்ந்து இந்த குற்றசாட்டை வைத்து வருகிறார்.  2005 - 06 ஆண்டுகளில் வீழமாட்டோம் என்ற பாடல் விழாவில் தன்னை அவரது அறைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக சின்மயி குற்றம் சாட்டி இருந்தார்.  இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சின்மயி விவகாரம் குறித்து கேட்கப்பட்ட போது, "உண்மை இல்லாதது பற்றி நான் ஏன் பேச வேண்டும்" என்று கூறியுள்ளார்.  இது தற்போது வைரல் ஆகி வருகிறது.  

மேலும் பேசிய அவர், மக்கள் என்னை அரசியலுக்கு அழைத்தால் அதை ஆசையாக ஏறுக்கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.  சமீபத்தில் சின்மயிக்கு இரட்டை குழந்தை பிறந்து இருந்ததது.  இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார் சின்மயி.  அதற்கு இணையத்தில் ஒருவர் இரண்டு குழந்தைகளுக்கும் வைரம், முத்து என்று பெயர் வைப்பீர்களா என்று கேட்டதற்கு மிகவும் காட்டமாக சின்மயி பதில் அளித்து இருந்தார்.  

Chinmayi

மேலும் படிக்க | சம்பளம் வாங்காமல் நடிக்கப்போகும் தளபதி விஜய்?

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News