Tamil Movies - இந்த வாரம் திரையரங்கில் வெளியாகும் 5 படங்கள்!

Tamil Movies Releasing This Week: தமிழில் சில திரைப்படங்கள் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளன மற்றும் அதன் ஓடிடி வெளியீட்டு உரிமையையும் சில நிறுவனங்கள் வாங்கியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jul 13, 2022, 11:25 AM IST
  • லிங்குசாமி இயக்கத்தில் வாரியர் படம் இந்த வாரம் வெளியாக உள்ளது.
  • சாய்பல்லவி நடித்த கார்கி படம் இந்த வாரம் வெளியாகிறது.
  • இரவின் நிழல் படம் இந்த வாரம் வெளியாகிறது.
Tamil Movies - இந்த வாரம் திரையரங்கில் வெளியாகும் 5 படங்கள்! title=

Tamil Movies Releasing This Week: பார்த்திபன் இயக்கத்தில் தமிழில் வெளியாகவுள்ள திரைப்படம் 'இரவின் நிழல்'.  அகிரா புரொடக்ஷன்ஸ் மற்றும் பயாஸ்கோப் பிலிம் ஃபிரேமர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பார்த்திபன், வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், பிரிகிடா, சாய் பிரியங்கா ரூத் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  உலகின் முதல் நான்-லீனியர் சிங்கிள் ஷார்ட் பிலிம் என்கிற பெருமையை இப்படம் பெற்றுள்ளது.  சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.  தற்போது இந்த படம் ஜூலை 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகுகிறது.

மேலும் படிக்க | சம்பளம் வாங்காமல் நடிக்கப்போகும் தளபதி விஜய்?

அதனையடுத்து என். ராகவன் இயக்கத்தில் குழந்தைகளுக்கான சிறந்த பொழுதுபோக்கு படமாக தமிழில் உருவாகியுள்ள படம் 'மை டியர் பூதம்'.  இந்த படத்தில் பிரபுதேவா, ரம்யா நம்பீசன், சம்யுக்தா மற்றும் அஷ்வந்த் போன்ற பலர் நடித்துள்ளனர்.  அபிஷேக் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் ஓடிடி வெளியீடு மற்றும் சேட்டிலைட் உரிமையை ஜீ5 வாங்கியுள்ளது.  தற்போது இந்த படம் ஜூலை-15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகுகிறது.  

mydear

அடுத்ததாக கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் தமிழில் வெளிவரவுள்ள திரைப்படம் 'கார்கி'.  இந்த படத்தில் சாய் பல்லவி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் இந்த படத்தில் காளி வெங்கட், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயபிரகாஷ் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் நடித்துள்ளனர்.  ஜூலை-15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் வாங்கியுள்ளது.

gargi

அடுத்ததாக அன்வர் ரஷீத் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி வெற்றிநடைபோட்ட 'டிரான்ஸ்' என்கிற திரைப்படம் தமிழில் 'நிலை மறந்தவன்' என்கிற பெயரில் வெளியாகவுள்ளது.  பஹத் பாசில் மற்றும் நஸ்ரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, கவுதம் மேனன், வினோத், விநாயகன் போன்ற பலர் நடித்துள்ளனர்.  ஜூலை-15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் வாங்கியுள்ளது.  

trance

லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகவுள்ள 'தி வாரியர்' திரைப்படத்தில் ராம் போத்தினேனி, ஆதி, க்ரித்தி ஷெட்டி, அக்ஷரா கவுடா, நதியா, ரெடின் கிங்ஸ்லி போன்ற பலர் நடித்துள்ளனர்.  ஜூலை-14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை ஹாட்ஸ்டார் வாங்கியுள்ளது.

மேலும் படிக்க | எழுத்தாளர் ஆனார் சமந்தா...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News