யாஷின் ‘டாக்ஸிக்’ படத்தில் நயன்தாரா.. இதோ தரமான அப்டேட்

Yash 19 Update: கேஜிஎப் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 4, 2024, 06:57 AM IST
  • யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தின் முக்கிய அப்டேட்.
  • டாக்ஸிக் படத்தில் நயன்தாரா.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும்.
யாஷின் ‘டாக்ஸிக்’ படத்தில் நயன்தாரா.. இதோ தரமான அப்டேட் title=

Yash 19 Update: கேஜிஎப் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இதன் முழு விவரத்தை இந்த கட்டுரையில் காண்போம்.

நடிகர் யாஷ்:
கேஜிஎப், கேஜிப் 2 (KGF, KGF 2) ஆகிய படங்களின் மூலம் சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளார் நடிகர் யாஷ். முன்னதாக கன்னடத்தில் சில படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படம் தான் யாஷிற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்திருந்த இந்தப் படங்கள் பான் இந்தியா படங்களாக வெளியான நிலையில் பான் இந்தியா ஸ்டாராகவும் உயர்ந்துள்ளார் யாஷ். குறிப்பாக கேஜிஎப் 2 படம் மிகப்பெரிய வசூலை பெற்றது.

மேலும் படிக்க | Bloody Beggar : பிச்சைக்காரனாக நடிக்கும் கவின்! வெளியானது காமெடி ப்ரமோ..

டாக்ஸிக் திரைப்படம்:
இதனிடையே பிரசாந்த் நீல் இயக்கிய ‘கேஜிஎஃப்’ (KGF Movie) திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, நடிகர் யாஷ் நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ‘கேஜிஎஃப்’ திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பெரும் பிரபலமடைந்த யாஷ், தனது அடுத்த திரைப்படத்தின் கதைத் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி வந்தார். அதன்படி நடிகர் யாஷ் (Yash) நடிக்கும் 19வது திரைப்படத்தை மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் (Geetu Mohandas) இயக்க உள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இவர் தமிழில் சத்யராஜ் நடிப்பில் வெளியான ‘பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். பின்னர் மாதவன் நடித்த ‘நள தமயந்தி’ படத்தில் நாயகியாக நடித்தார். அதுமட்டுமின்றி இவர் மலையாளத்தில் 2019ஆம் ஆண்டு நிவின் பாலி நடித்த ‘மூத்தோன்’ என்ற படத்தை இயக்கியிருந்தார்.

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிக்கும் படத்தின் பெயர் ‘டாக்ஸிக்’ (Toxic) ஆகும். கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ், மாஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த டாக்ஸிக் திரைப்படத்தை தயாரிக்கின்றன.

டாக்ஸிக் படத்தில் நயன்தாரா:
இந்நிலையில் தற்போது டாக்ஸிக் திரைப்படத்தில் பாலிவுட் நடிகை கரீனா கபூர் முக்கிய  வேடத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில் தற்போது அவருக்கு பதிலாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று  எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | Aavesham : பகத் பாசில் நடித்த ‘ஆவேசம்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்படி பார்ப்பது? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News