Aavesham : பகத் பாசில் நடித்த ‘ஆவேசம்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்படி பார்ப்பது?

Aavesham OTT Release : மலையாள திரையுலகில் பெரிய வெற்றி பெற்ற ஆவேசம் திரைப்படம், ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இதனை எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்? முழு விவரம்!

Aavesham OTT Release : சமீப சில மாதங்களாக, மலையாள திரையுலகில் இருந்து வெளியாகும் சில திரைப்படங்கள் தென்னிந்திய அளவில் ஹிட் அடித்து வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் வெளியாகி பலரை பேச வைத்த படம், ஆவேசம் (Aavesham). மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை தொடர்ந்து வெளியான இந்த படம், தமிழகத்திலும் நல்ல வசூலை குவித்தது. இதில், பகத் பாசில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் ஓடிடி தேதி தற்போது வெளியாகியிருக்கிறது. இது குறித்து முழு விவரத்தை பார்க்கலாம். 

1 /7

மலையாள திரையுலகில் இருந்து இந்த ஆண்டு வெளியான மஞ்சுமெல் பாய்ஸ், பிரேமலு, ஆடு ஜீவிதம் உள்ளிட்ட படங்கள் பெரிய ஹிட் அடித்தன. இதை தொடர்ந்து, வெளியான ஆவேசம் படமும் கேரள ரசிகர்களை தாண்டி, தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. 

2 /7

ஆவேசம் படத்தில், தென்னிந்தியாவின் கவனமிக்க நடிகராக விளங்கும் பகத் பாசில் நடித்திருக்கிறார். 

3 /7

‘கண்களாலேயே வில்லத்தனத்தை காட்டுபவர்’ என்ற பெயரை பெற்ற பகத், இந்த படத்தில் தனது ஜாலி கலந்த வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்திருக்கிறார். 

4 /7

ஆவேசம் திரைப்படம், உலகளவில் சுமார் 130 கோடி ரூபாய் வரை கலெக்ட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

5 /7

ஆக்‌ஷன் காமெடி வகையில் உருவான இந்த படத்தில், ஹீரோயினே இல்லை. இதுவும், இந்த படத்தில் பாராட்டுதலுக்குரிய அம்சங்களுள் ஒன்றாக இருந்தது. 

6 /7

ஆவேசம் திரைப்படத்தை ஜிது மாதவன் இயக்கியிருக்கிறார். இதில், ரோஷன் ஷானவாஸ், மிதுன் ஜெய், ஷாஜின் கோபு, மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். 

7 /7

ஆவேசம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருந்தனர். இப்படம், மே 9ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் ரிலீஸாக உள்ளதாக கூறப்படுகிறது.