புஷ்பா 2: ஹீரோயின் மாற்றம் இல்லையாம்! கொண்டாட்டத்தில் ராஷ்மிகா போட்ட ட்வீட்

புஷ்பா 2 படத்தில் ஹீரோயின் மாற்றம் இருக்கும் என தகவல் பரவிய நிலையில், ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதை அவரே உறுதி செய்துள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 18, 2022, 11:46 AM IST
  • புஷ்பா 2 படத்தின் அப்டேட்
  • சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படம்
  • ராஷ்மிகா கொடுத்த அப்டேட்
புஷ்பா 2: ஹீரோயின் மாற்றம் இல்லையாம்! கொண்டாட்டத்தில் ராஷ்மிகா போட்ட ட்வீட் title=

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா' திரைப்படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் 350 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.  கொரோனா தொற்று சமயத்தில் வெளியான இந்த படம் வசூலை வாரி குவித்தது, இந்த படத்தின் பாடல்களும், வசனங்களும் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறது.  இப்படத்தில் சமந்தா நடனமாடிய ஒரு பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்திருந்தது.  பான் இந்தியன் படமான இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் போன்ற பெரிய நட்சத்திரங்கள் சிறப்பாக நடித்திருந்தனர்.

மேலும் படிக்க | பிக்பாஸில் ஜிபி முத்துவுக்கு ஒருநாள் சம்பளம்! அமுதவாணன் - ரக்ஷிதாவுக்கு இவ்வளவா?

இப்படத்தின் வெற்றியினை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. அதனைத்தொடர்ந்து சமீபத்தில் 'புஷ்பா 2' படத்தின் ஸ்கிரிப்டை இயக்குனர் சுகுமார் முடித்துவிட்டதாகவும், ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தொடங்கும் என்று செய்திகள் வெளியானது. அதன்படி ஷூட்டிங் இப்போது தொடங்கிவிட்டது. முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றனர். அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடிக்க இருக்கும் நிலையில், ஹீரோயின் மட்டும் யார் என்பது சஸ்பென்ஸாகவே இருந்தது. ராஷ்மிகா பாலிவுட்டுக்கு சென்றுவிட்டதால், தேதி பிரச்சனை காரணமாக புஷ்பா 2வில் நடிக்க மாட்டார் என்ற தகவலும் பரவியது. 

ஆனால் அந்த தகவல் எல்லாம் பொய் என ராஷ்மிகாவே கூறியிருக்கிறார். தமன்னா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பல பெயர்கள் அடிபட்ட நிலையில், யாரு இடத்தில் யாரு சீன போடறது என்கிற ரீதியில் புஷ்பா 2வில் நடிப்பதை மாஸாக உறுதி செய்திருக்கிறார். புஷ்பா சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை படக்குழு பகிர்ந்திருக்கிறது. அந்த புகைப்படத்தை ரீடிவீட் செய்திருக்கும் ராஷ்மிகா, புஷ்பா 2வுக்காக பெரும் ஆவலுடன் காத்திருப்பதாக கூறி தான் நடிப்பதை வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். 

மேலும் படிக்க | கேமரா இருக்குனுலாம் பார்க்க மாட்டேன்... பிக்பாஸை மிரட்டியை ஜிபி முத்து!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News