சீதா ராமன் அப்டேட்: விவாகரத்து செய்ய முடிவெடுத்த சீதா.. ராம் சொன்ன வார்த்தை

Seetha Raman Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 1, 2024, 02:11 PM IST
  • லாயரை வர சொல்லி இருக்கேன்: சீதா
  • நான் அவரை விவாகரத்து செய்கிறேன்: சீதா
  • அதிர்ச்சி அடையும் ராம்.
சீதா ராமன் அப்டேட்: விவாகரத்து செய்ய முடிவெடுத்த சீதா.. ராம் சொன்ன வார்த்தை title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அஞ்சலி, ப்ரியா, சத்யா ஆகியோர் சீதாவிடம் வந்து வம்பிழுக்க அவர் செய்த விஷயங்களை சொல்லி நான் திரும்பவும் கம்பளைண்ட்டை ஸ்டார்ட் பண்ணட்டுமா என ஷாக் கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

லாயரை வர சொல்லி இருக்கேன்: சீதா

அதாவது, சீதா ராஜசேகரை கூப்பிட்டு வைத்து பாஸ் பாவம் அப்பா, அவருக்காக ஒரு முடிவு எடுத்திருக்கேன் . லாயரை வர சொல்லி இருக்கேன், அவர் வரும் போது நீங்க இருக்கணும் என சொல்கிறாள். பிறகு கொஞ்ச நேரத்தில் லாயர் வீட்டிற்கு வந்து டிவோர்ஸ் பேப்பரை எடுத்து கொடுக்க எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். 

நான் அவரை விவாகரத்து செய்கிறேன்: சீதா

நான் கொலை செய்ததாக தீர்ப்பு வந்து விட்டால் பாஸோட சேர்ந்து வாழ முடியாது, அது அவருக்கும் நல்லது இல்ல அதனால் நான் அவரை விவாகரத்து செய்ய போறேன். குழந்தையையும் பெத்து அவர் கிட்ட கொடுத்துடுவேன் என்று சொல்ல ஷாக் ஆகின்றனர். 

மேலும் படிக்க | Dance Jodi Dance Reloded: இந்த வார நிகழ்ச்சியில் தரமான சம்பவம் இருக்கு.!!

அதிர்ச்சி அடையும் ராம்

எல்லாரும் சீதாவுக்கு எடுத்து சொல்லியும் அவள் தனது முடிவில் உறுதியாக இருக்கிறாள். சத்யன் சேது சொன்னா மட்டும் தான் சீதா கேட்பாள். அவரை வைத்து சீதாவிடம் பேசுங்கள் என்று ஐடியா கொடுக்கிறான். இதனை தொடர்ந்து ராமுக்கு சீதா பால் கொண்டு வர ராம் அவளை கண்டு கொள்ளாமல் இருக்கிறான். இந்த நேரத்தில் சீதா விவாகரத்து பேப்பரை எடுத்து கொடுக்க ராமும் அதிர்ச்சி அடைகிறான். செய்த தப்புக்காக நீ தண்டனையை அனுப வச்சிட்டு வா, அதுவரைக்கும் உனக்காக நான் காத்திருப்பேன் என்று சொல்ல அது சரி வராது பாஸ். 

உங்க பேருக்கும் அது நல்லதாக இருக்காது என்று சொல்லி சீதா கண்ணீருடன் படுத்து விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | சேலையில் அல்லு அர்ஜுன்.. கசிந்தது புஷ்பா 2 ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News