Dance Jodi Dance Reloded: இந்த வார நிகழ்ச்சியில் தரமான சம்பவம் இருக்கு.!!

Dance Jodi Dance Reloded Season 2: டான்ஸ் ஜோடி டான்ஸ் ரிலோட் சீசன் 2 நிகழ்ச்சியில் இந்த வாரம் பழைய பாடல்களை தேர்வு செய்து அந்த பாடலின் நடனத்தை அப்படியே கொஞ்சம் கூட மாறாமல் ரி-கிரியேட் செய்து அசத்த உள்ளனர்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 1, 2024, 01:54 PM IST
  • இந்த நிகழ்ச்சி கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது.
  • வார இறுதி நாட்களில் மட்டுமே இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.
  • இரு தினங்களிலும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும்.
Dance Jodi Dance Reloded: இந்த வார நிகழ்ச்சியில் தரமான சம்பவம் இருக்கு.!!

Dance Jodi Dance Reloded Season 2: தமிழ் சின்னத்திரையில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி டான்ஸ் ஜோடி டான்ஸ் ரிலோடட். தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. 

Add Zee News as a Preferred Source

ஆர்.ஜே விஜய் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஸ்னேகா, சங்கீதா மற்றும் பாபா பாஸ்கர் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர். மொத்தம் 12 போட்டியாளர்கள் 12 சின்னத்திரையை நட்சத்திரங்களுடன் நடனமாட தொடங்கிய நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான ரவுண்டில் திறமைகளை வெளிப்படுத்தி மேடையை மெய் சிலிர்க்க வைத்து வருகின்றனர். 

அனல் பறக்கும் எபிசோடுகள்

இந்த நிலையில் இந்த வாரம் பழைய பாடல்களை தேர்வு செய்து அந்த பாடலின் நடனத்தை அப்படியே கொஞ்சம் கூட மாறாமல் ரி-கிரியேட் செய்து அசத்த உள்ளனர். இது குறித்த ப்ரோமோ வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் இந்த வார டான்ஸ் ஜோடி டான்ஸ் தரமான சம்பவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | Karthigai Deepam: தீபா செய்ய போவது என்ன? கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஜீ தமிழ் சேனலும் ஒன்று. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.

டிசம்பர் முதல் ஒளிபரப்பு

கடந்த டிசம்பர் மாதம் 'சரிகமப லிட்டில் சேம்ப்ஸ்' சீசன் 3 நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் முதல் மக்களின் மனம் கவர்ந்த நடன நிகழ்ச்சியான  'டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட்' நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

சாமானிய கலைஞர்களை சாதனையாளர்களாக மாற்ற இந்நிகழ்ச்சிகள் வழிவகுக்கும். டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ பாடலை நடிகரும் இயக்குநருமான எஸ்ஜே சூர்யா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | அண்ணா சீரியல்: காப்பற்றப்படும் கனி.. தாய் மாமாவுக்கு தெரிய வரும் சௌந்தரபாண்டியின் ப்ளான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News